கிரேக்க நிலப்பரப்பினூடே ஒரு வரலாற்றுப்பயணம்-பயணிக்கும் வீரர்கள்









உங்களது கதாநாயகர்களை புராண புனைவில் ஈடுபடுத்தி வெவ்வேறு வரலாற்று உள்ளடக்கங்களில் பொருத்துவது ஆபத்தானதாக தெரியவில்லையா?

 நோக்கம் மற்றும் சூழல்கள் வேறுவேறானவை. ஒன்றுபோன்றவையல்ல. வரலாறு அவர்களை பாதிக்கிறது. மாற்றங்களை செய்யத்தூண்டி அவர்களை மாற்றுகிறது. மிகத்துல்லியமாக ஒரு வரலாற்றுத் தருணத்தில் கிடைக்கும் இடங்களில் அவர்கள் நகர்ந்து செல்வதற்கு உதவும் வகையில் கதாபாத்திரங்களை வடிவமைக்க முயற்சிக்கிறேன். ஆகஸ்ட் 4 ஆம் தேதி விருந்தொன்றில் ஈகிஸ்டஸ் எனும் ராணுவ வீரன் பொய்யான ஒரு கூட்டிணைவை ஜெர்மன் வீரரிடம் ஏற்படுத்திக்கொள்கிறான். அகமெம்மோன் இறப்பிற்கு பின்னே அவனது அதிகாரம் கொண்ட ஆளுமை மற்றவர்களுக்கு தெரியவருகிறது. ஈகிஸ்டஸ் யார் என்பதை ஆராய்ந்து பார்த்தால் தனிப்பட்ட நோக்கம், உளவியல் சார்ந்த தன்மையை முதன்மையாக கொள்ள வேண்டியிருக்கிறது. அது எனக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. ப்ரெச்டியன் புராணம் போல படத்தினை உருவாக்க முயற்சி செய்ய விரும்புகிறேன். என்றாலும் உளவியல் தன்மையின் முன்னிலையை விரும்பவில்லை.

எப்படி இதில் திரைக்கதையினை இணைக்க முடிந்தது? புராண புனைவை பயன்படுத்தியிருக்கிற விதம் எப்படி?

       1952 கால நிகழ்வுகளை ஒரு தொடக்கமாக வைத்துக் கொள்ள முயற்சித்தேன். அந்த இடத்திலிருந்து பின்னே நடந்த பல நிகழ்வுகளை மரபான திருப்பிப் பார்க்கும் நிகழ்வு போன்று இங்கு நிகழ்வதில்லை. இவை தனிப்பட்ட ஒருவரின் (கதாபாத்திர) நினைவுகளல்ல. ஒருங்கிணைக்கப்பட்ட  தொகுக்கப்பட்ட நினைவுகளாக 1952 ஆண்டில் நிகழ்வுகளாக புதியவற்றை இணைக்க உருவாக்க சுதந்திரம் கிடைக்கிறது. முதல் காட்சி 1952 இலும் இறுதிக்காட்சி 1939 இலும் வரும். நான் இதை எதிரான திசையில் முயற்சிக்கிறேன். சிலர் நிகழ்வுகளில் இறந்து போயிருப்பார்கள்; மற்றவர்கள் சிறையில் இருக்கிறார்கள்; உயிரோடு இருப்பவர்கள் அனைவரும் முதுமையானவர்களாக மாறிவிட்டார்கள். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களும் மனம் உடைந்துபோனவர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் சேர்ந்து நடக்கின்றனர். அவர்கள் கேமரா முன் நிற்கும்போது நாம் ‘‘ 1939 ஆம் ஆண்டு கோடையில் ஏஜியனை அடைந்துவிட்டோம். இருநாட்களாக தூங்காததால் களைப்படைந்து போய்விட்டோம்’’ என்ற குரலைக் கேட்கிறோம். இதில் வேறுபாடு என்னவென்றால், தொடக்க காட்சியாக 1952 க்குப் பதிலாக 1939 ஆம் வருட நிகழ்வுகள் இருக்கிறது என்பதுதான். கதாபாத்திரங்கள் அனைவரும் வருங்காலத்தின் மீது குறையாத நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆனால் நமக்குத் தெரியும் அவர்களுக்கு காலம் எதுமாதிரியான விஷயங்களை வைத்துக்கொண்டு காத்திருக்கிறது என்பது. பழைய குடும்ப புகைப்படத்தில் நாம் பார்த்து அதில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் நிகழ்வது என்ன என்று அறிந்துகொண்டிருப்பது போன்றதுதான் இது.  

திரையில் காட்ட விரும்பும் வரலாற்று சம்பவங்களை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

       முதலில் குறிப்பிட்ட சில நாட்கள் மற்றும் நிகழ்வுகளை தேர்ந்தெடுத்தேன். இரண்டாம் உலகப்போர் அறிவிக்கப்பட்ட 1932 ஆம் ஆண்டின் நிகழ்வுகளைத் திரட்டினேன். இந்த நிகழ்வுகளில் இருந்த உண்மை என்னவென்றால் அந்த நிகழ்வு சாதாரண மக்கள், நடிகர்கள் என அந்த நேரத்தில் அனைவரையும் பாதித்த நிகழ்வாக அமைந்திருந்தது. ஜெர்மனியின் வெற்றி கிரீசின் சிறிய படை நிபந்தனையின் பேரில் சரணடைந்துவிட்டதை உணர்த்தியது. அப்போது விடுதலை என்பது அனைவரிடமும் புகழ்பெற்ற ஒரு புரட்சி வாசகமாக இருந்தது.

       டிசம்பர் 1944 இல் நாங்கள் கொண்டிருந்த ஆயுதங்களுக்கு எதிரான விதிகள், சிவில் போர், 1952 ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டோம். இந்த நிகழ்வுகளில் கிரேக்க மக்களின் வெளிப்பாடுகளுக்கு நான் முக்கியத்துவம் அளித்தேன். 1944 ஆம் ஆண்டு  நாட்டின் தெருக்களில் திரண்ட மக்களின் வெளிப்பாடுகளுக்கு நான் முக்கியத்துவம் அளித்தேன். மக்களின் எதிர்வினைகளை மட்டும் நான் கவனத்தில் கொண்டேன். அதில் அரசின் முடிவுகள் குறித்தல்ல.  அந்த ஆண்டினை மக்கள் தங்கள் புரட்சி விடியலாக கருதினார்கள். அதன் முடிவை அடையும் முன்னே படத்தின் காட்சி நடுவில் வெட்டப்பட்டு விடும். ஏன்? என்னுடைய படம் கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூறுவதில்லை. ஆனால் விடையை கண்டறிய நிறைய ஆதாரங்கள் உண்டு. உ.தா:  இஎல்ஏஎஸ் எனும் புகழ்பெற்ற கிரேக்க விடுதலை படை ஏன் ஏதேன்ஸ் வந்து சேரவில்லை? பல்வேறு நிகழ்வுகள் ஒரு வரலாற்றுப் பின்னணியில் நிகழ்கின்றன. இவை அனைத்தும் சாதாரண மக்களின் கோணத்தில் கூறப்படும் சாதாரண எளிய மக்களே நிகழ்வுகளின் சுமைகளை தாங்க வேண்டியதிருக்கிறது. இந்தப்படம் அண்மைய கிரேக்க வரலாற்றை குறுக்குவெட்டாக ஆராயும் முக்கியமான வரலாற்றுப் படம் என்று கூறலாம்.  


பிரபலமான இடுகைகள்