தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
கதாபாத்திரங்களோடு
பார்வையாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது என்று சுருக்கமாக கூறலாமா?
நான் என்னுடைய பதிவுகளைப் பார்க்கும்போது
என் முந்தைய படங்களில் உண்மையின் மறுகட்டமைப்பு எந்த ஒரு அடையாளப்படுத்தல்களையும்
ஆதரிக்கவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது. நீண்ட கடினமான காலகட்டத்திற்கு பிறகு
உணர்வுகளுக்குத் திரும்பியிருக்கிறோம். சிதெராவிற்கு பயணம் படத்திற்கு கிடைத்த
பலன்கள் அத்தனையையும் மற்ற படங்களிலிருந்தும் நான் பெற்றிருக்கிறேன். ஆனால் அவை தொடர்ந்து
நீடிக்கவில்லை என்றாலும் இந்த உணர்வுகள் என்னைத் தொடர்ந்து
செயலாற்றத்தூண்டுகின்றன. எனது ஓவியங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவு நுணுக்கமாக
விஷயங்களை தீட்ட முயற்சி செய்கிறேன்.
ஆனால்
இது பழைய ஏஞ்சலோ பவுலோஸோடு வேற்றுமைப்படுத்தவோ, வஞ்சப்புகழ்ச்சி போன்றவற்றை
விலக்கிவிடவில்லை. உதா. ராணுவம் காணாமல் போன முதிய மனிதரை கண்டுபிடிப்பதற்காக
கிராமத்தில் வந்து நிற்கும் நிலைகள்...
ஆமாம். பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் விதமாக
வீட்டைவிட்டு வெளியே வர மறுக்கும் ஸ்பைரோஸ் முன்னமே வன்முறையில் பாதிக்கப்பட்டு
இருக்கிறான் என்பதை அழுத்தமாக காட்ட விரும்பினேன்.
நாடு
கடத்தப்பட்ட மக்கள் திரும்ப தம் நாட்டிற்கு திரும்பும்போது என்ன நிகழ்கிறது
அவர்களுக்கு? கிரீசில் அதிக காலம் தங்கியிருக்க முடியாமல் குறிப்பிட்ட காலம் மட்டுமே
தங்க முடியும் என்று அவர்கள் தடுக்கப்படுகிறார்களா என்ன?
சட்டப்பூர்வ நிலையில் சிலர் ஒரு மாதம்,
மற்றவர்கள் மூன்று மாதத்திற்கு அதிகமில்லாமல் தங்கியிருப்பார்கள். ஆனால்
பெரும்பாலான நாடுகடத்தப்பட்ட மக்கள் கிரீசை விட்டு வெளியேறி அயல்நாட்டில் 35
ஆண்டுகள் தங்கியிருந்துவிட்டார்கள் என்றால் அவர்கள் திரும்பி இங்கே வர
மறுத்துவிடுவார்கள்.
துறைமுகப்பகுதி
கஃபேயில் நடைபெறும் விருந்து காட்சி கடும் வஞ்சப்புகழ்ச்சியாக இருக்கிறது.
உண்மையில் உங்களது படங்களில் நிறைய விருந்துகள் நடைபெறுகின்றன. இது சிறந்த
சுவாரசியமான உருவகமாக உங்களது கண்களுக்குத் தெரிகிறதா?
இல்லை. கிரீக் நாட்டு வழக்கமான விருந்து
என்பது எனக்கு தூண்டுதலாக இருந்தது. பாடகர்கள் மற்றும் இசைக்குழு என விருந்தில்
ஈடுபடுவதற்கு கிரீசில் எந்த ஒரு காரணமும் தேவையில்லை. இப்படத்தில் கப்பல்
தொழிலாளர்கள் சங்கத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் வஞ்சப்புகழ்ச்சி
என்னவென்றால் பிஏ அமைப்பு சார்பாக அங்கு பேசுபவர்கள் வெறுமையான இடத்தில் யாரும்
வர்க்கப்போராட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வம் இல்லாத இருக்கும் இடத்தில்
புரட்சிகரபாடல்களைப் பாடுவதுதான். படைத்தலைவர்கள் தோற்று போனபின்பு மக்களின்
மனதில் வற்றிப்போன உற்சாகத்தை, ஆர்வத்தை தூண்டுகிற முயற்சிதான் அது. அந்த
கொண்டாட்டமான விருந்துகள் வெறுமையான ஒரு அரசியல் பயிற்சியே தவிர வேறொன்றுமில்லை.
ஆனால்
அதிகாரி முதிய பெண்ணை அழைத்து பிஏ அமைப்பை பயன்படுத்தி கட்டுமரத்தில் கடலுக்கு
சென்ற அவளது கணவனை அழைக்க கூறுகிறார். நீங்கள் அதனை பரிகசிக்கிறீர்களா?
இல்லை. அவள் இந்த முறையின் மூலம்தான் அவனை
சென்றடைந்து தன் காதலை அவனிடம் வெளிப்படுத்த முடியும் என்பதை அறிவாள்.
விழாவின்
போது இவ்விருவரும் பேசிக்கொள்கிறார்கள் ஆனால் அவர்கள் பேசிக்கொள்ள இதைத்தவிர வேறு
வழியே இல்லையா?
நான் இந்த அமைப்பைப் பயன்படுத்தி வேறுபட்ட
இந்த கதாபாத்திரத்தை அவர்களது உறவின் ஆழத்தை காட்ட விரும்பினேன். இந்த வழியில்
அதாவது இந்த முறையில்தான் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதோடு பேசுவதற்கான
வழியினையும் கண்டறிகிறார்கள்.