தியோ ஏஞ்சலோ பவுலோஸ்













மக்கள் பலரும் இப்படத்தினை சோகமான படம் என்று கூறுகிறார்கள். கெட்டதை முடிவாகக் கொண்டுள்ள படம் என்றும் கூட கூறுகிறார்களே?

       சோகம் பரந்துபட்ட வருத்தம் என பரிகாரம் காணமுடியாத இழப்பினால் ஏற்படுபவையே அவை. ஆனால் இறுதியில் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக என்றில்லாது ஒரு தெளிவான முடிவிற்கு படம் கொண்டு செல்கிறது. முன்னே செல்ல இது ஒன்றுதான் வழி. சுற்றியிருக்கும் நவீன உலகம் அவரை அதிருப்திக்கு உள்ளாக்குகிறபோது அலெக்ஸாண்ட்ரோஸ் கற்பனைரீதியான பயணத்தை படத்தில் ஏற்படுத்திக்கொண்டு தன்னை இறந்த காலத்திலிருந்து மீட்டுக்கொள்கிறார்.

வேட்டைக்காரர்கள் படத்தினைப் பற்றிப் பேசும்போது வலதுசாரிகளின் உணர்வுகளைப் பேசுகிறது என்று கூறினீர்கள். இந்தப்படம் இடதுசாரிகளினைக் குறித்ததா?

குறிப்பிட்ட வகையிலான இடதுசாரி எனலாம், ஆனால் அனைத்து இடதுசாரிகளையும் அலெக்ஸாண்டரோடு ஒப்புமை படுத்தமுடியாது. இந்தப்படம் வாழ்க்கைக்கான மற்றும் கோட்பாடுகளை மறுகட்டமைப்பு செய்யாமல் நவீன மனிதன் தன் மனநிலையை மாற்றிக்கொள்வது இயலாத ஒன்று என்பதைப் பேசுகிறது. ஒருவரின் நினைவை பிடித்து நிறுத்தாமல் அதனை வரிசைப்படுத்தாமல் இறந்த காலத்தை தடங்கலுமின்றி அணுகுவது என்பது குறித்தும் பேசுகிறது இப்படம்.

சினிமா ஒரு சிகிச்சையா?

எனது படங்கள் எனக்கு பல்கலைக்கழகம் போலத்தான். எனது படங்களிலிருந்து பல விஷயங்களைக் கற்றுள்ளேன். அவை எனது தனிப்பட்ட சுமைகள் மற்றும் மனம் குறித்த ஆராய்ச்சி முறைகள் என்றும் கூறலாம்.

அலெக்ஸாண்டர் கதாபாத்திரம் கருத்தியலின் முடிவைக்கூறுகிறதா?

ஊலாவின் கதாபாத்திரத்தில் பார்க்கலாம். அவள் முரட்டுத்தனமாக தன் தந்தையின் ஆளுமையைக் குற்றம் சாட்டுகிறாள். வெவ்வேறு தலைமுறைக்கான முரண்பாடுகளை தன்னுள்ளே கொண்டு உள்ளாள். அவள் தனது தந்தையின் புரட்சிகரமான பணியின் அர்ப்பணிப்பினால் பாதிக்கப்பட்டவளாக உள்ளாள். அவள் தனக்குள்ளாக கொண்டிருக்கும் நம்பிக்கை மூலம் உலகை மாற்றிவிட எண்ணுகிறாள் ஆனால் அது நிகழ்வதில்லை எனும் போது கடும் ஏமாற்றத்திற்குள்ளாகிறாள். இந்தக்கோணத்தில் அவளுடைய வாழ்வில் இயல்பாக உண்மையான அன்பைத் தந்தவளான அவளது தாய்க்கு ஊலா எதிராகவே இருக்கிறாள். தான் வாழ்கின்ற உலகினை வெறுப்பதில் அலெக்ஸாண்டரைக்காட்டிலும் தீவிரமானதாக இருக்கிறாள் ஊலா. அலெக்ஸாண்டர் தொடர்ந்து அன்பைத் தேடிக்கொண்டு இருக்கிறான். அவள் அதனைக் கொடுக்கிறாள். தன்னுடைய இறுதி தங்குமிடமாக உடலைக் கொண்டுள்ளவள் மாலுமியுடன் கொள்ளும் பிணக்கு மிகச்சிறிய எதிர்பார்ப்பு தருவதைத் தவிர வேறு எதையும் தருவதில்லை. அதிகமாக ஏதுமில்லை. எந்த உணர்வுகளும் அவளில் இருப்பதில்லை.

இதில் தாய் மிகவும் வலிமையான ஒரு கதாபாத்திரமாக இருக்கிறாளே?

       நடக்கும் நிகழ்வுகள் அனைத்திற்கும் அவள் சாட்சியாக இருக்கிறாள். மேலும் அவள் மட்டுமே இத்தனை ஆண்டுகளிலும் தனக்கு நேர்மையானயானவளாக வாழ்ந்து வந்து இருக்கிறாள். தனது கணவனுக்கும் ஆச்சரியகரமாக நேர்மையுடன் உண்மையாக இருக்கிறாள். படத்தினுள் உள்ள படத்தில் நிகழும் சம்பவங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன். அவளுக்கான உரிமையை தரும்போது தனக்கான உண்மையான அன்பை மீண்டும் அவள் உருவாக்கிக் கொள்ள முடியும்.

கிரீக் சினிமாவில் பெண்கள் அடையாளப்படுத்தப்படவே இல்லை என்பதை இது கூறுவதாக கொள்ளலாமா?

இந்த முறையில் சிறிது கவனம் செலுத்துங்கள். என்னுடைய முந்தைய படங்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் இங்கே பெரும் சொத்தாகவும், அவள் ஆண்களுக்கான பணிகளை செய்வதை வெகு காலம் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.

சிதெராவிற்குப் பயணம் திரைப்படம் உங்களை மரபார்ந்த எழுத்துமுறைக்கு கொண்டு சென்றதா?

       பல்வேறு கருத்துநிலைகளில் இருக்கும் குழப்பமானது உலகைப் புரிந்துகொள்ள நாம் பயன்படுத்துகின்ற அணுகுமுறைகளின் பின்னணிக்கு கொண்டு சேர்த்தது. முதலில் நான் தொடக்கத்தில் மார்க்ஸ், ப்ராய்டு ஆகியோரை முக்கிய பிம்பங்களாக கொண்டேன். இது ஹெகல், லெனின் ஆகியோரின் கருத்துக்களிலிருந்து முதலில் ஒருவர் உலகை அறிந்தது கொள்வது போல என்று கொள்ளலாம். இதோடு அண்மையில் கிரீக் வரலாறு எமக்குத் தந்த கசப்பான கொடூரமான வருத்தம் தரும் அனுபவங்கள் எங்களைச் சுற்றியுள்ள சமூக மற்றும் கோட்பாட்டு விஷயங்கள் அனைத்தையும் விவாதித்து அதன் பொருளை அறிய ஊக்கப்படுத்தியது.


       சுருக்கமாக கூறவேண்டுமானால் உண்மையானது சூத்திரத்தை உறுதி செய்கிறது. அந்த சூத்திரமும், நடைமுறையும் தற்செயலானவையாகின்றன. நிலைமை இயல்பானவையானவுடன் புதிய அணுகுமுறைகளை கையாள முயல்வதோடு மனதிலிருந்து அறிவு பிறக்கிறது எனும் தத்துவக்கொள்கைக்கும் நகர்ந்து வந்துவிட்டதாக நான் கருதினேன். கலை என்பது மனிதர்களின் வர்க்கம் குறித்தது என்பதோடு பதில்களை விட அதிக கேள்விகளை தன்னகத்தே கொண்டது. உலகம் என்பதை சதுரங்க விளையாட்டு என்று கொண்டால் மனிதன் அதில் காலாட்படை வீரன் போல். அவன் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்து ஏதாவது தாக்கம் ஏற்படுத்தலாம் அல்லது அதனை புறக்கணித்துவிடலாம். அரசியலானது கடந்த காலத்தின் பொறுப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளைக் கூறுகிற விளையாட்டு போன்றதாகிவிட்டது. பழைய வழக்கமான அர்த்தத்தில் நாயக பிம்பத்தை நாடுகிறோம் என்று கருதக்கூடாது. திரைப்பட எழுத்தாக்கம் நாயகனை மையத்தில் நிறுத்துகிறது. உளவியல் தன்மையிலிருந்து திரும்புதல் என்று இதனைக் கூறமுடியாது. புராணங்களிலிருந்து தனிப்பட்ட சினிமாவிற்கு மாறும்போது இயக்குநர் தன் கலை குறித்தும் தன்னைக்குறித்தும் பல கேள்விகளை எழுப்பிக்கொள்ள வேண்டும்.