பயணிக்கும் வீரர்கள்- கிரேக்க வரலாற்றினூடே ஒரு பயணம்









உங்களின் முதல் இரு படங்கள் போலில்லாது சில எழுச்சியூட்டும் சம்பவங்களுக்கு பயணிக்கும் வீரர்கள் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் அரசியல் விஷயங்களுக்கும் எழுச்சியூட்டும் விஷயங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

       பாலியல் சார்ந்த விஷயங்கள் உருவாவது கதாபாத்திரங்களுக்கிடையேதான். கிளிமெம்னெஸ்ட்ரா, ஈகிஸ்டஸ் மீது கொள்ளும் காதல் மற்றும் எலக்ட்ராவின் எதிர்வினை அவர்களுடைய ஆளுமை சார்ந்த அவற்றை மட்டுமே அடிப்படையாக கொண்டதுதான். இது போன்ற உறவுகள் தனிப்பட்ட ரீதியில் நின்றுவிடக்கூடியவைதான். அம்மாவின் காதலன் என்பதைத் தாண்டி ஈகிஸ்டஸ் சில குணங்களை கொண்டவனாக இருக்கிறான். அவன் ஒரு நம்பிக்கைத் துரோகி கூட. அவன் கொல்லப்படுவது கிளிமெம்னெஸ்ட்ராவுடன் கொண்ட காதலுக்காக மட்டுமல்ல அவனது அகும்மெம்னோனை விடுவித்து ஜெர்மன்காரர்களிடம் காட்டிக் கொடுத்ததன் காரணமாகத்தான். எலக்ட்ராவின் மீதான வன்புணர்ச்சி முழுக்க அரசியல்ரீதியிலானது, எந்த ஒரு வடிவிலான வன்முறையின் கீழேயும் அதன் ஆதாரமாக பாலுணர்வுத் தூண்டுதல்தான் இருக்கிறது. எலக்ட்ரா விசாரணையின்போது வன்புணர்ச்சி செய்யப்படுவது  படத்தினை மெல்ல அரசியலின் பக்கம் நகர்த்திச் செலகிறது. விபச்சாரம் குறித்த கருத்தினை ஒன்றினை இப்படம் அறிமுகம் செய்கிறது. விலைமகளான சிரிஸோடெமிஸ் பின்னாட்களில் ஒர அமெரிக்க ராணுவ வீரரை மணக்கிறாள். இது பிரச்சனைகளை தீர்ப்பது போல தோன்றினாலும் அடிப்படையான அறம் சார் மதிப்புகள் வீழ்வதையே குறிக்கிறது. பாலியல் சார்ந்த விஷயங்கள் மெல்ல அரசியல் சார்ந்த கருத்தியலாக மடைமாற்றம் செய்யப்படுகிறது.

கோல்போ தி ஸெபர்டெஸ் எனும் மேடை நாடகம் தங்களது திரைப்படம் கிரீஸ் முழுவதும் தயாரித்து திரையிட்டுள்ளதே? என்ன அர்த்தத்தில்?

       நாடக நிகழ்ச்சி பல்வேறு பல்வேறு நிலைகளைக் கொண்டுள்ளது. இதன் அர்த்தம் அவற்றில் நடிப்பவர்கள் அதனைக்கொண்டு வாழ்கிறார்கள் எனலாம். மேலும் அது ஒரு கலைவடிவம் சார்ந்ததும் கூட. அதனை அவர்கள் மேடையில் வாழ்க்கையாக வாழ்கிறார்கள். அட்ரைடு குறித்து புனைவு மற்றும் எழுத்துகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். எழுத்துகள் சிலசமயம் மேடைகளில் இடையூறுக்கு உள்ளாகி திரையில் எப்போதும் வருவதேயில்லை. ஆனால் இறுதியில் அதன் வரலாற்று பின்புலம் காரணமாக நாடகம் தானே மற்றொரு பரிமாணத்தைக் கொள்கிறது. ஒரு உ.தா பார்ப்போம். ‘நாம் கவனிக்கிறோமாஎன்றொரு வரி இந்த நாடகத்தில் வரும். இது புகழ்பெற்ற நாடகம் கூட இல்லை. ஆனால்  இந்த வரி படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் விதியினைக் குறிக்கிறது. விளக்குகிறது என்று கூட கொள்ளலாம்.

கோல்ஃபோ அவர்கள் நடிக்கும் ஒரு நாடகம் எனலாம். கருத்துமற்றும் நாடக அடிப்படையில் அது ஒரு மரபான நாடகம் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். அரசியல் ரீயாக சமூக வகுப்புகளிடையே உண்மையான எதிரிடையான நிலைமைகள் குறித்து விளக்குவதற்கு பதிலாக அது மர்மான ஒருசித்திரத்தையே முன்வைக்கிறது. நடிகர்களின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் நாடகம் வெளிப்படுத்தும் கருத்தியல் குறித்த முரண்பாடுகளை நீங்கள் உணரவில்லையா? இந்தப்புரிதலில்தான் நாடகம் தொடர்ந்து தயாரிக்கப்படுகிறதா?

       கோல்ஃபோ ஒரு மரபான முறையில் தயாரிக்கப்படும் ரோமியா – ஜூலியட் கதையின் கிரேக்கப் பிரதி எனலாம். நடிகர்கள் நாடகம் வெளிப்படுத்தும் கருத்தியல் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றுக்கிடையேயான முரண்பாடுகளை அடையாளம் கண்டுகொள்ளுமளவு அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களல்ல. தங்கள் வாழ்க்கையினை நடத்த அதனைப் பார்க்க வரும் பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள். அவ்வளவுதான்.

நாடகம் மற்றும் சினிமாவிற்கான உறவு என்ன? நாடக மேடை காட்சிகள் யதார்த்தம் குறித்த கேள்வியை எழுப்புகின்றன. நாடகத்தில் நடிகராகவே ஒரு நடிகர் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இந்த எது உண்மை?

       இந்த விஷயத்தில் எனக்கு பல்வேறு கருத்துகள் உள்ளன. நடிகர்கள் நடிகர்களாக நடிக்கிறார்கள். முகமூடிகள், உடைகள், அரங்கம் என அனைத்துமே முக்கியமாக பொருட்கள்தான். உடைகளை மாற்றுவது என்பதை உ.தா. கொள்வோம். ஆங்கிலேயர் நடிகரின் கிரீடத்தை தலையில் வைத்துக்கொண்டு நடிகராக தன்னை மாற்றிக்கொள்ளும் போது, நாடகத்தில் சிறப்பாக நடிக்கிறார் எனலாம். ஆங்கிலேயர் மேம்படுத்தப்பட்ட அரங்கத்தில் நடிப்பது (அ) டிப்பெரரி என்று பாடுவதாகக் கொண்டால் நடிகர்கள் பார்வையாளர்களாக மாறிவிடுவார்கள். கோல்ஃபோ ஒரு வேளை இறந்து போகிறது என்றால் அந்த பிரிட்டன் வீரரும் கூடவே இறக்கிறார். கோல்ஃபோவில் ஒரு குண்டினால் இறக்கிறார் என்றால் அவரும் இறக்கிறார் என்பது அதன் ஒரு பகுதியே. குறிப்பிட்ட நாடகம் மற்றும் காட்சிகள் படம் முழுக்க தொடர்ச்சியாக வருகிறது என்பதற்கான காரணம் உள்ளது. நாடகமானது இன்னும் முடியவில்லை. ஏனெனில் அது அரசியல் நிகழ்வுகளால் இடையூறுக்கு உள்ளாகி இந்த இடத்தை அவை பிடித்துக்கொள்கின்றன.

உங்களது படத்தில் விடாமல் உறுதியாக விஷயங்களை கடைப்பிடிக்கிறீர்களா?

       படத்தினை தொடர்ந்து மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டவன் என்பதால், நரகம், நீரோடு குறிப்பிட்ட கொள்கைகளோடு ஒட்டி கடைப்பிடித்து திரைப்படம் எடுக்கிறேன் என்று வதந்தி பரவிவிட்டது. படத்தில் பல்வேறு உணர்வுகளை வெளிக்காட்டும் பரபரப்பான காட்சிகளும், அதிக நகர்வில்லாத காட்சிகளும், நடிகர்கள் தனக்குத் தானே பேசிக்கொள்ளும் வசனப் பகுதிகளும் மூன்று உண்டு. நாடகம் குறித்தவை தவிர முடிந்த தருணங்களில் எல்லாம் போன்ற காட்சிகளில் கேமரா நடிகர்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு அப்படியே நிற்கும். கேமரா நகரும் அல்லது நகராது இருக்கும். இந்த முறையில் கேமராவின் உள்ளே ஆழமாகவும், நுட்பமாகவும் காட்சிகள் பதிவாகும். இரண்டு காட்சிகளை ஒரு காட்சியாக என்னால் எடுக்க முடிந்தால் அதை எப்போதும் இரண்டாக எடுக்கவேண்டும் என்று எண்ண மாட்டேன்.