இடுகைகள்

பூனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கான்ட்ராக்ட் கல்யாணத்தால் களேபரமாகும் வினோத தம்பதியினரின் வாழ்க்கை!

படம்
  பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் - கே டிராமா பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் கே டிராமா   -16 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   எல்லாவற்றையும் பொருளியலாக, பணமாக, பரிவரத்தனையாக மாற்றும் ஒருவருக்கும், கல்யாணம் செய்யவேண்டுமென்றால் காதல் வேண்டும் என அடம்பிடிக்கும் பெண்ணுக்கும் நடக்கும் கான்ட்ராக்ட் கல்யாணத்தின் களேபர விளைவுகள்தான் கதை. இந்த கே டிராமா, பிற தொடர்களைப் போல காதலை மட்டும் உயர்வாக பேசவில்லை. காதல் அதைச்சார்ந்த இருவரின் பிரச்னைகள், காதலை சமூகம் எப்படி பார்க்கிறது, பெற்றோர் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள், காதல் இருவருக்கும் போதுமானது. ஆனால், திருமணம் என்பது எப்படிப்பட்ட பொறுப்புகளைக் கொண்டது என தொடர் நெடுக விவாதிக்கிறார்கள்.   இந்த கே டிராமா இயக்குநர், இறுதிப்பகுதியை மனப்பூர்வமாக எடுக்கவில்லை. அதைத்தவிர மற்ற எபிசோடுகள் பதினைந்தையும் நன்றாக எடுத்திருக்கிறார். டேட்டிங் ஆப் நிறுவனத்தில் திட்டத் தலைவராக உள்ள நாம் சே கி, டிவி தொடர்களுக்கு எழுத்தாளராக முயலும் ஜி ஹோ , தனி நிறுவனத்தைத் தொடங்கி நடத்த நினைக்கும் சூ ஜி, திருமணம் செய்து குழந்தை பெற்றாலே சாதனை என நினைக்கும் உண

நாய்களை எளிதாக பழக்க முடிவதற்கான காரணம்! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ! நாய்களை எளிதாக பழக்கமுடிவது எப்படி? வீட்டில் வளர்க்கும் பூனைகளை குறிப்பிட்ட கட்டளைக்கு ஏற்ப பழக்கலாம். ஆனால், அந்த முயற்சியும் கூட நாய்களோடு ஒப்பீடு செய்தால் கடினமானவையே. நாய், உரிமையாளர் கூறும் சிக்கலான ஆணைகளை கூட ஏற்று செய்யும். ஆனால் பூனை, தானே விரும்பினால் மட்டும் செயல்களை செய்யும். நாய், பாரம்பரியமாக குழுவாகவே வேட்டையாடி வாழ்ந்து வந்துள்ளது. அப்படி வாழும்போது, குழுத்தலைவர் ஆணையை ஏற்று பணியாற்றும் பண்பு நாய்க்கு உண்டு. இதனால், நாய் தன் உரிமையாளரை தனக்கும் மேலுள்ள அதிகாரம் கொண்டவராக பார்ப்பதால் கட்டளையை உடனே செய்து முடிக்கிறது. எனவே, நாய்களை பழக்குவது எளிதாக இருக்கிறது.  விஷ முறிவு மருந்து எப்படி உருவாக்கப்படுகிறது? உலகம் முழுக்க 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஷப் பாம்புகள் உள்ளன. இவை மனிதர்களை கடிப்பதால் 80 ஆயிரம் தொடங்கி 1 லட்சத்து 40 ஆயிரம் வரை மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.  பாம்பு கடித்தவரை உடனே காப்பாற்ற விஷ முறிவு மருந்து அவசியம். மருந்தைத் தயாரிக்க முதலில், பாம்பின் விஷத்தை குதிரையின் உடலில் செலுத்துகிறார்கள். இந்த விஷத்திற்கு எதிராக குதிரையின் உடல் ஆன்டிப

வீட்டுப்பூனைகளால் காட்டுயிர்கள் அழிந்து வரும் அவலம்!- மேற்கு நாடுகளில் மக்களுக்கும் சூழலியலாளர்களுக்கும் வலுக்கும் மோதல்!

படம்
              காட்டு விலங்குகளை அழிக்கும் வீட்டுப்பூனைகள் ! நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தில் பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரி ட்ரோபோர்ஸ்ட் . இவர் , அண்மையில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் காட்டில் உள்ள சிறுவிலங்குகளை வேட்டையாடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . இதுவரை ஓநாய்களின் அழிவு , விலங்குகளை வேட்டையாடுவதற்கு அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையாண்டவர் ட்ரோபோர்ஸ்ட் . ஆனால் அதைவிட பூனைகளைப் பற்றி இவர் எழுதிய ஆய்வறிக்கைக்கு கொலைமிரட்டல்களை சந்தித்து வருகிறார் . ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , அமெரிக்கா , நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பூனைகளை வளர்ப்பவர்களும் , சூழலியலாளர்களு்ம இதுதொடர்பாக தீவிரமாக மோதி வருகின்றனர் . ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் வேட்டையாடுவதை அனுமதிக்கும் சட்டத்தை மாற்றவேண்டி சூழலியாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள் . அமெரிக்காவில் மட்டும் வீட்டுப்பூனைகளால் 630 கோடி சிறு காட்டு விலங்குகளும் , 130 கோடி பறவைகள் பலியாகியுள்ளன என்பதை ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது . நெதர்லாந்தில் செய்த ஆய்வில் இதைப்போல இரு

செல்லப்பிராணிகளை குளோனிங் செய்யும் நிறுவனங்கள் வந்துவிட்டன! அடுத்து என்ன - குளோனிங்கில் அடுத்த கட்டம்?

படம்
                  பெருகும் குளோனிங் செயல்முறைகள் குளோனிங் செய்யும் செயல்முறை முன்னர் வேகமாக தொடங்கினாலும் பல்வேறு தடைகள் , விதிகள் காரணமாக தொடர்ச்சியாக நடைபெறவில்லை . ஆனால் தற்போது செல்லப்பிராணிகளை , போலீஸ் நாய்களை , அழியும் நிலையுள்ள விலங்குகளை குளோனிங் செய்து வருகிறார்கள் . முதன்முதலில் டாலி என்ற ஆட்டை குளோனிங் செய்து பிறக்க வைத்தனர் . இப்போது அந்த நிகழ்ச்சி நடைபெற்று 25 ஆண்டுகள் ஆகின்றன . முதலில் இம்முறையை எப்படி பயன்படுத்துவது என தடுமாற்றம் இருந்தது . ஆனால் தற்போது உருவாகியுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் பூனை , ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை வணிகரீதியில் குளோனிங் செய்து தருகின்றன . அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் கர்ட் என்ற குதிரையை குளோனிங் முறையில் உருவாக்கினார்கள் . இந்த இனத்தில் 2 ஆயிரம் குதிரைகள் இருந்தாலும் கூட குளோனிங் செய்வதற்கான தரம் குறிப்பிட்ட இன குதிரை ஒன்றிடம் மட்டுமே இருந்தது . இப்படி நாற்பது ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட செல்களை வைத்து குளோனிங் செய்யப்பட்டது . இந்த கர்ட் குதிரை வளர்ந்து பெரியதாகி இனத்தை பெருக்கும்போது இழந்த மூதாதையர்களின் குணநலன

வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அதனை புரிந்துகொள்கிறார்களா?

படம்
      pxhere         பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அதனை புரிந்துகொள்கிறார்களா? மூன்றில் இருபங்கு பேர் புரிந்துகொள்வதாக கூறுகிறார்கள். இதனை தங்கள் பிள்ளைகளை புரிந்துகொள்வதாக கூறும் பெற்றோர்கள் அளவுடன் ஒப்பிட்டு சிலர் கிண்டல் செய்கின்றனர். நாய்கள் இயல்பாகவே பூனைகளை விட எஜமானவர்களின் உணர்ச்சிகளை புரிந்து நடந்துகொள்கின்றன. மேலும் அவை வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதை விட உடல்மொழியால் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு நடந்துகொள்வதே அதிகம். அவற்றின் குரைப்பு, உடல்மொழி ஆகியவற்றை வைத்தும் அது என்ன சொல்லுகிறது என எஜமானர்கள் கூறுகிறார்கள். இந்த வகையில் பூனையின் உடல்மொழியை 50 சதவீதம் புரிந்துகொள்வதாக அதன் உரிமையாளர்கள் கூறுகி்ன்றனர். வளர்ப்பு பிராணிகள் பேசமுடியாது என்றாலும் குரல் மூலம் அவை தகவல்தொடர்பு கொள்கின்றன.   பாக்டீரியா எங்கெங்கு இருக்கும்?   பாக்டீரியா இல்லாத இடமே கிடையாது. காற்று, நீர், உணவு, நமது தோல், குடல் என அனைத்து இடங்களிலும் உள்ளது. அதிக திறன் கொண்ட மைக்ரோஸ்கோப் மூலம் பார்க்கலாம். இதில் ஆண், பெண் வேறுபாடுகள் கிடையாது. சூழலும் உண

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவையா பூனை, நாய்கள்?

படம்
giphy மிஸ்டர் ரோனி சூழலைக் கெடுக்கும் வளர்ப்பு பிராணிகள்! ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான். ஏனெனில் மத்திம சைசில் உள்ள நாய், எஸ்யூவி கார் வெளியிடும் அளவுக்கு கார்பன் வாயுக்களை வெளியிடுகிறது.இது பூமிக்கு ஏற்புடையதல்ல. பூனைகள், நாய்கள் மனிதர்களுக்கு அடங்கி நடப்பது போல தெரிந்தாலும். அது உண்மையல்ல. அவைகளுக்குத் தான் நாம் சேவை செய்கிறோம். அவை, பல்வேறு காட்டு விலங்குகளை வேட்டையாடுவதையும் பெடிகிரி சாப்பிட்டுக்கொண்டே செய்கின்றன. இப்பாதிப்பு இங்கிலாந்தில் அதிகம். இதன் பொருள் நீங்கள் வளர்ப்பு பிராணிகளை வளர்க்க கூடாது என்பதல்ல. அதன் உணவுக்கான ஏற்பாடுகளை எதிர்காலத்தில் சரியாக வடிவமைத்துக்கொள்ள வேண்டும் இல்லையெனில் சிக்கல்தான். நன்றி - பிபிசி 

நாய், பூனையை வீகனுக்கு பழக்கலாமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி நாய்களை வீகன் டயட்டிற்கு பழக்க முடியுமா? தியரியாக சூப்பர்தானே என நினைக்கலாம். ஆனால் நடைமுறையில் சால கஷ்டம் சாரே.. நாய்கள் மனிதனுடன் பழகி அதன் உடலில் தாவர ஸ்டார்ச்சுகளை செரிமானம் செய்யும் என்சைம்கள் உருவாகி உள்ளன. பதினான்காயிரம் ஆண்டு நட்புறவின் விளைவு இது. சைவ உணவுகளை நாய்களுக்கு பழக்குவது கருத்தியல் சார்ந்தல்ல உடல் இயக்கம் சார்ந்த நாய்களுக்கு ஆபத்து தரும். 2015 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா யுனிவர்சிட்டி செய்த ஆய்வில் நாய்களுக்கு வழங்கப்பட்ட சைவ உணவுகளில் அமினோ அமிலங்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதிலும் நாய்களுக்கு டயட் விதிமுறைகளை விதிப்பது அதிலும் பெருஞ்சோகம்.  `1998 ஆம் ஆண் இப்படி வீட்டில் நாய்களுக்கு சைவ உணவுகளைப் பழக்கியதால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. பூனைகள் சைவ உணவுக்கு ஏற்றவை அல்ல. அதன் உடலில் டாரின் எனும் அமிலம் தேவை. இது இறைச்சியில் மட்டுமே இன்றுவரை கிடைக்கிறது. இது உடலில் குறைந்தால் இதயச்செயலிழப்பு, பார்வை இழப்பு ஏற்படும். எனவே பூனையை சுத்த சைவாக்கும்போது கவனமா