செல்லப்பிராணிகளை குளோனிங் செய்யும் நிறுவனங்கள் வந்துவிட்டன! அடுத்து என்ன - குளோனிங்கில் அடுத்த கட்டம்?
பெருகும் குளோனிங் செயல்முறைகள்
குளோனிங் செய்யும் செயல்முறை முன்னர் வேகமாக தொடங்கினாலும் பல்வேறு தடைகள், விதிகள் காரணமாக தொடர்ச்சியாக நடைபெறவில்லை. ஆனால் தற்போது செல்லப்பிராணிகளை, போலீஸ் நாய்களை, அழியும் நிலையுள்ள விலங்குகளை குளோனிங் செய்து வருகிறார்கள்.
முதன்முதலில் டாலி என்ற ஆட்டை குளோனிங் செய்து பிறக்க வைத்தனர். இப்போது அந்த நிகழ்ச்சி நடைபெற்று 25 ஆண்டுகள் ஆகின்றன. முதலில் இம்முறையை எப்படி பயன்படுத்துவது என தடுமாற்றம் இருந்தது. ஆனால் தற்போது உருவாகியுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் பூனை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை வணிகரீதியில் குளோனிங் செய்து தருகின்றன.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் கர்ட் என்ற குதிரையை குளோனிங் முறையில் உருவாக்கினார்கள். இந்த இனத்தில் 2 ஆயிரம் குதிரைகள் இருந்தாலும் கூட குளோனிங் செய்வதற்கான தரம் குறிப்பிட்ட இன குதிரை ஒன்றிடம் மட்டுமே இருந்தது. இப்படி நாற்பது ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட செல்களை வைத்து குளோனிங் செய்யப்பட்டது. இந்த கர்ட் குதிரை வளர்ந்து பெரியதாகி இனத்தை பெருக்கும்போது இழந்த மூதாதையர்களின் குணநலன்களைக் கொண்ட குதிரைகள் உருவாக வாய்ப்புள்ளது. இதைப்போலவே கொயட்டே எனும் சிறு ஓநாய், ஆப்பிரிக்க பூனை, தென்கிழக்கு ஆசிய பசு ஆகியவையும் குளோனிங் செய்யப்பட்டுள்ளன. இதனை எதிர்ப்பவர்கள் இம்முறை அதிக செலவு பிடிப்பது, இதற்கு பதிலாஎக இருக்கும் காடுகளை முறையாக பராமரித்தாலே விலங்குகளை குளோனிங் செய்யவேண்டியதில்லை. அரசு வேட்டையாடுபவர்களை தண்டிக்கும் நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று கூறிவருகின்றனர்.
குளோனிங் வந்தாச்சு என்றால் ஜூராசிக் பார்க் போல டைனோசர்களை திரும்ப கொண்டு வந்துவிடலாம் என சிலருக்கு மூளையில் சிந்தனை தோன்றும். ஆனால் அப்படி உருவாக்குவதற்கு நிறைய தடைகள் உள்ளன. நிறைய முடிகளைக் கொண்ட ஐஸ் ஏஜ் கால யானையை உருவாக்குவதற்கு சரியான ஆசிய யானைகள் தேவை. ஆனால் அவற்றை எங்குபோய் தேடுவது? அவையே மெல்ல அழிந்து வருகிறது. மம்மூத் வகை யானைகளின் செல்களை எடுத்து ஆசிய யானையின் கருப்பையில் வைத்துத்தான் குளோனிங் யானைகளை உருவாக்க முடியும்.
இந்த செயல்முறை பல்வேறு கடினமான செயல்பாடுகளைக் கொண்டது. தியரியாக ஈஸியாக தோன்றினாலும் செயல்பாட்டில் நிறைய சவால்கள் உள்ளன.
உங்கள் பெட் பிராணிகளை குளோனிங்கில் உருவாக்கித் தரும் நிறுவனங்கள் இப்போது செயல்படத்தொடங்கிவிட்டன. இதற்கு 40 ஆயிரம் டாலர்கள் செலவாகும். பாடகி பார்பரா ஸ்ட்ரெய்சான்ட், உடை வடிவமைப்பாளர் டயானே வான் பர்ஸ்டென்பர்க் ஆகியோர் இம்முறையில் குளோனிங் பெட் செல்லங்களை உருவாக்கி பெற்றுக்கொண்டுள்ளனர்.
பெட் பிராணிகளை உயிருக்கும் அதிகமாக நேசிப்பவர்கள்தன் இந்த வணிகத்தை வளர்க்கிறார்கள். இதற்கு பதிலாக அவர்கள் காப்பகங்களில் உள்ள நாய்களை எடுத்து வளர்க்கலாமே என்றால் அதற்கு எந்த பதிலும் கிடைப்பதில்லை. குளோனிங்கில் ஒருவரின் நாய் அச்சு அசலாக அப்படியே கிடைப்பதில்லை. ஆனால் வேறு வழியில்லை. அதேபோல அதே சாயல் எனும்படியாக நாய்கள், பூனைகளை கிடைத்தால் போதும் என பிரபலங்கள் நினைக்கிறார்கள்.
தென்கொரியாவில் செயல்பட்டு வரும் சூவம் பயோடெக் நிறுவனம் போதைப்பொருட்களை கண்டுபிடிக்கும் ஸ்னைப்பர் நாய்களை குளோனிங் செய்து காவல்துறைக்கு வழங்குகின்றனர். எதற்கு என்றால், சாதாரண நாய்களை விட குளோனிங் நாய்கள் 90 சதவீதம் சிறப்பாக செயல்லடுகின்றன. மேலும் அவற்றுக்கு பயிற்சிக்கு என கூடுதலாக செலவு செய்யவேண்டியதில்லை. ரஷ்யர்கள் இப்படி காவல்துறைக்கான நாய்களை தென்கொரிய நிறுவனம் மூலம் குளோனிங் செய்து பெறுகின்றனர்.
குளோனிங் என்பது இனி உங்கள் தட்டில் இருந்தால் எப்படியிருக்கும்? சீனாவில் உள்ள போயாலைப் எனும் பயோடெக் நிறுவனம் ஒரு லட்சம் பசுக்களை உற்பத்தி செய்து மாட்டிறைச்சி சந்தையில் பயன்படுத்த உள்ளது. அங்கு மாட்டிறைச்சி சந்தை சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்துள்ளது. இதற்காக அங்குள்ள தியான்ஜிங் கடற்கரையோரமாக தொழிற்சாலைகளை நிறுவி வருகிறது.
bbc
கருத்துகள்
கருத்துரையிடுக