இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தம்@ 60! - ஒப்பந்த வரலாறு, பிரச்னைகள், தீர்வுகள்

 

 

 

 

 

 

இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தத்திற்கு வயது 60!



கடந்த செப்டம்பர் மாதம் 19 அன்று இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தம், வெற்றிகரமாக 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.


இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே இன்று அரசியல்ரீதியான நிலை, சுமூகமாக இல்லை. ஆனால் அதேசமயம், இருநாடுகளுக்கு இடையில் உருவான நதிநீர் ஒப்பந்தம் (IWT) பல்வேறு தடைகளைத் தாண்டி 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதன்மூலம் இருநாடுகளும் மனம் வைத்தால் அமைதியான அரசியல் உறவையும் ஏற்படுத்திக் கொள்ளமுடியும் என்பது உறுதியாகியுள்ளது.


இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவுகளையும் கடந்து உலகவங்கி இந்த ஒப்பந்தம் உருவாக பெரும் உதவிகளைச் செய்துள்ளது. எந்த இடையூறுகளுக்கும் உட்படாத, தொந்தரவுகளும் செய்யமுடியாத ஒப்பந்தம் என்று கூறப்படும் பெருமை கொண்டது இந்த நதிநீர் ஒப்பந்தம்.


1947ஆம் ஆண்டு சிந்து, ஜீலம், செனம், சட்லெஜ், பீஸ், ரவி ஆகிய நதிகளை இருநாடுகளும் பகிர்ந்து நீர் பெறும் முயற்சிகள் தொடங்கவிட்டன. அப்போது இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட காலகட்டம். மேற்கு நதிகள் என்று அழைக்கப்பட்ட இந்த மூன்று ஆறுகளும், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாய்கின்றன. மேற்கு நதிகளின் நீரை இந்தியா 80 சதவீதம் பயன்படுத்துகிறது. இதில் உபரி நீர் மட்டுமே பாகிஸ்தானுக்கு செல்கிறது. இவற்றின் நீரைத் தேக்குவதற்காக அணைகளைக் கட்ட ரூ.83 கோடியை இந்திய அரசு, பாகிஸ்தானுக்கு பெருந்தன்மையாக வழங்கியது.


கிழக்கு நதிகளான சட்லெஜ், ரவி, பீஸ் ஆகியவற்றையும் இருநாடுகளும் பகிர்ந்துகொண்டன. இதற்கான ஒப்பந்தம் உலகவங்கியின் தலையீட்டில் 1960ஆண்டு உருவாக்கப்பட்டு, பிரதமர் நேரு, பாகிஸ்தான் பிரதமர் அயூப்கான் ஆகியோர் அதில் கையெழுத்திட்டனர். கிழக்கு நதிகளில் ஒன்றான சட்லெஜ் நதிநீரைத் தேக்கி வைக்கவே, 1963ஆம் ஆண்டு பக்ராநங்கல் அணைத்திட்டம் உருவானது. இதன்மூலம் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்கள் பயன்பெறுகின்றன.


சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இருநாட்டு அதிகாரிகளும் கலந்துபேசுவதன் மூலம் மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் அரசுக்கு, இந்தியா சிந்து நதிநீரை தராமல் நிறுத்திவிடும் என்ற பயம் எப்போதும் மனதில் உள்ளது. 1951ஆம்ஆண்டு இந்தியாவுக்கு வந்த டென்னிசிவேலி நிர்வாக தலைவரா டேவிட் லியந்தால், நதிநீர் பிரச்னையைப் பற்றிக் கேட்டறிந்துவிட்டு, ''மற்றொரு கொரியா உருவாக வாய்ப்புள்ளது'’ என்று கூறினார்.


 

56.82 டிஎம்சி நீரை இந்தியா தேக்கிவைத்துக்கொள்ள சிந்து நதிநீர்ஒப்பந்தம் அனுமதிக்கிறது. ஆனால் இந்தியா இதில் பெரும்பகுதி நீரை முறையாக பயன்படுத்துவதில்லை. இதன்மூலம் 11,406மெகாவாட் மின்சாரத்தை உருவாக்க முடியும். ஆனால் நாம் பெறுவது 3034 மெகாவாட் மின்சாரத்தை மட்டும்தான். இந்தியா பாகிஸ்தான் பல்வேறு இடையூறுகளை எல்லையில் கொடுத்தபோதும் (1965, 1971,1999 போர்), பெருந்தன்மையாக நதிநீர் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளும் முடிவை எடுக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இந்நிலை அமைதியாக தொடர்வது கடினம்தான்.

தகவல்

IE



Indus water treaty at 60: why there is need to fresh look


uttamkumar sinha


நன்றி!


தினமலர் பட்டம்


கருத்துகள்