இந்திய நிறுவனங்கள் சுகர் சிரப்பை தேனில் கலந்து விற்கும் கொடுமை! - கலப்பட வணிகத்தில் கொடி கட்டும் இந்திய நிறுவனங்கள்

 

 

 

 

 

Why honey now has superfood status with lots of extra ...

 

 

 

 

 

கலப்படத் தேன்!


அ்ண்மையில் நாளிதழ்களில் டாபர், மாரிகோ ஆகிய நிறுவனங்கள் தங்களின் தேன் தாயின் பாலைப் போல பரிசுத்தமானது என விளம்பரப்படுத்துவதை பார்த்திருப்பீர்கள். அண்மையில் ஜெர்மனி நிறுவனம் செய்த என்எம்ஆர் சோதனையில் டாபர் தேன் தோற்றுப்போயுள்ளது. இந்த சோதனையில் சபோலாதேன் வென்றுள்ளது. ஆனால் இந்தியளவில் நடைபெறும் என்ஆம் ஆர் சோதனையில் டாபர் வென்றுள்ளது. எப்படி? அதுதான் இந்தியன் மேஜிக்.

Dabur, Patanjali among 13 brands adulterating honey with ...

  கலப்படம் செய்து சோதனையில் தோற்ற தேன் நிறுவனங்கள்!

தேனில் நுணுக்கமாக கலக்கப்படும் சுகர் சிரப் சீனாவிலிருந்து தருவிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் இதனை பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் உணவுத்தர அனுமதி ஆணையம் இதுதொடர்பான விதிகளை இயற்றினாலும், சோதனைகள் லஞ்சங்களைப் பெற்றுக்கொண்டு நடத்தப்பட்டுள்ளன. இதனால்தான் 13 நிறுவனங்கள் பங்கேற்ற என்எம்ஆரில் சில நிறுவனங்கள் மட்டுமே பாஸாகி உள்ளன. இதனால் டாபர் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளம்பரங்களில் உள்நாட்டில் சோதனைகளில் வென்ற நிறுவனம் என விளம்பரம் செய்யப்படுகிறது.


தேனில் சர்க்கரையை கலந்து விற்பது காலம் காலமாகவே நடந்தவருகிறது. இதனால் தேனீக்களை வளர்த்து விற்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உடல் பருமன், செரிமானக்கோளாறு, மருந்துகளோடு கூடுதல் உணவுப்பொருளாக தேனை சாப்பிட்டு வந்தவர்கள் இனி அந்த நம்பிக்கையோடு சாப்பிடுவார்கள் என்று கூறுவது கடினம்தான். சீன நிறுவனங்களில் அற்புதமான சுகர் சிரப் தயாரிப்பு இந்தியாவில் நடைபெறும் சோதனைகளில் எளிதாக வென்றுவிடுகின்றன. ஆனால் வெளிநாடுகளில் நடைபெறும் சோதனையில் தோற்றுப்போய்தான் டாபர் ஹனி பிரச்னை வெளியே தெரிய வந்துள்ளது. இந்தியாவிற்குள் சுகர் சிரப்பை எப்படி விதிகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்வது என்பதை சீனர்கள் முழுமையாக அறிந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் சுகர் சிரப் உற்பத்தியில் முன்னணியில் உள்ளனர். இதனை அரிசி, பீட்ரூட்டிலிருந்து தயாரிக்கின்றனர்.

Saffola Honey Plus with Immunity Boosting Herbs 250gm Each ...test winner

சீன நிறுவனங்கள் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுகர் சிரப் தயாரிக்கும் தொழிற்சாலைகளை சட்டடபடி அமைக்கப்பட்டுள்ளன. இவை மிட்டாய்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுபவை என்று கூறப்படுகின்றன. சட்டபடி எல்லாம் சரிதான். ஆனால் உள்ளே புகுந்து ஆராய்ந்தால் தேனீ வளர்ப்பவர்களின் கூக்குரல் வேறுவிதமாக கேட்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கிலோ தேன் ரூ.150-170க்கு விற்றது. ஆனால் இன்ற கிலோ ரூ.70க்கு சரிந்துவிட்டது. எதனால் பதஞ்சலி போன்ற நிறுவனங்கள் உள்ளே நுழைந்ததாலா? சுகர் சிரப்பை தேனுடன் கலந்து விற்பதால்தான். இதை விற்கும் வியாபாரிகள் கூட இதனை ஆழமாக கேட்டால் மட்டுமே இதனால் விலை குறைந்துள்ளது என முணுமுணுக்கிறார்கள். அரசு தேனீ வளர்ப்பவர்களுக்கென 500 கோடி ரூபாயை ஆண்டுதோறும் செலவழிக்கிறது. தேன் தயாரிப்பாளர்களான முன்னணி நிறுவனங்கள் பலரும் சுகர் சிரப்பை விற்கத் தொடங்கியுள்ளன. இதனால் தேனீ வளர்ப்போர் பலரும் தொழிலை கைவிடலாமா என யோசித்து வருகின்றனர்.


2


உலகளவில் அதிகம் கலப்படம் செய்யப்படும் பொருள், தேன்தான். இதில் கலப்படம் செய்யப்படுவது இந்திய அரசுக்கு தெரியும் என்றால் அதனை வெளிப்படையாக கூறுவது இல்லை. சர்க்கரைக்கு மாற்றாக இயற்கையான இனிப்பாக கூறப்படும் தேனில் சர்க்கரை கலந்தால் அதனை தேன் என்று கூறமுடியாது.


இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் இதுதொடர்பாக பல்வேறு விதிகளை காலகட்டந்தோறும் மாற்றி வந்தாலும் கூட கலப்படக்கார ர்களை நெருங்க முடியவில்லை. காரணம் அவர்கள் அந்தளவு நெருக்கமாக சோதனைகளை ஏமாற்றும் வண்ணம் கலப்படத்தை செய்கிறார்கள். எனவே, அரசு இதில் ஏதோ மோசடி நடக்கிறது என உறுதியாக தெரிந்தாலும் அதனை உறுதியாக நிரூபிக்க ஆதாரமின்றி தடுமாறி வருகிறது. 60 ஆண்டுகளாக தேனின் தர விதிகள் மாற்றப்படவில்லை. அண்மையில் அதிலிலுள்ள ஆன்டிபயாடிக் அளவுகளை இந்திய தர ஆணையம் மாற்றியது. இதற்குப்பிறகு தேனின் சாம்பிள்களை சோதித்த டில்லியைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி மையம், முன்னணி பிராண்டுகள் கூட அந்த விதிகளை கடைபிடிக்கவில்லை என்று தனது சோதனையில் கூறியுள்ளது.


2017ஆம்ஆண்டு இந்திய தர ஆணையம், தேனில் கலக்கப்படும் அரிசி, பீட்ரூட், கரும்பு ஆகியவற்றிலிருந்து பெறப்படும் சுகர் சிரப்பை கண்டுபிடிக்கும் முறை பற்றி மக்களின் கருத்தைக் கேட்டது. அப்போது உலகளவில் இதுதொடர்பான கலப்பட புகார்கள் அப்போது அதிகரித்து வந்தன. இதை கண்டுபிடிக்கத்தால் கூடுதல் சோதனையாக சி4 அறிமுகமானது. இப்படித்தான் டிரேஸ் மார்க்கர் ஃபார் ரைஸ் சிரப், மார்க்கர் ஃபார் ரைஸ் சிரப் என இரண்டு சோதனைகள் இப்படித்தான் அறிமுகமாயின. 2018ஆம் ஆண்டு இந்திய தர ஆணையம் விதிகளில் செய்த மாற்றம் கலப்படத்தை ஆதரிக்கும் படி உருவாக்கப்பட்டது உண்மை. இதனால் டிஎம்ஆர் சோதனை கைவிடப்பட்டது. எஸ்எம்ஆர் சோதனை மட்டுமே இருந்தது. அதிலும் கூட தேனின் கலப்படத்தைக் கண்டுபிடிக்கும் பல்வேறு தர அளவுகள் குறைக்கப்பட்டன.


டவுன் டு எர்த் 1-15 டிசம்பர் 2020







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்