2020 ஆண்டின் சிறந்த கணினி மென், வன்பொருட்கள்!
2020 ஆண்டின் சிறந்த கணினி மென், வன்பொருட்கள்
சிறந்த விபிஎன்
புரோடான் விபிஎன் தகவல்களை சேமித்து வைக்காமல் சேவையை வழங்குகிறது.இதன் இமெயில் சேவை புகழ்பெற்றது. இதனை காசுகொடுத்து அல்லது இலவசமாக நீங்கள் பயன்படுத்தினாலும் சிறப்பாக செயல்படுகிறது. தனிப்பட்ட அந்தரங்கம் சார்ந்த பாதுகாப்பு என்பதில் கவனம் செலுத்துகிற ஸ்விட்சர்லாந்து கம்பெனியின் தயாரிப்பு. காசுதான் முக்கியம் என்று சிலர் சொன்னால் முல்வட் விபிஎன் என்ற மென்பொருளைப் பயன்படுத்தலாம். பாஸ்வேர்டு கூட இல்லாமல் இதனை இயக்கலாம். மாதம் ஐந்து டாலர்களை செலுத்தினால் சிறப்பான சேவையை அளிக்கிறார்கள். இதிலேயே எலைட்டாக விபிஎன் வேண்டும் என்பவர்களுக்கு நார்டுவிபிஎன் தெரிந்திருக்கும். அதனை மாதம் 11 டாலர்கள் செலுத்தி பயன்படுத்தலாம்.
சிறந்த வெப்சைட் டிசைனர்
விக்ஸ்
வெப்சைட்டுகளை உருவாக்கும் துறையில் முன்னணியில் இருப்பது இப்போதைக்கு விக்ஸ்தான். எளிமையான் வடிவமைப்பு, அனிமேஷன், மொபைல் ஆப்ஸ்கள் என காசு கொடுத்தால் ஏகப்பட்ட ஆப்ஷன்களை கொடுக்கிறார்கள். வெப்சைட்டை இணையத்தில் சேமித்தும் வைத்துக்கொள்ள இணையத்தில் இடம் கொடுக்கிறார்கள். மாதம் 14 டாலர்களை கொடுத்தால் இணையதள சேவையை வேறு லெவலில் செய்யலாம் என்கிறார்கள். முடியும் என்றால் முயலுங்கள்.
சிறந்த டேட்டிங் சேவை
மேட்ச்
இந்த வார்த்தையை டைப் செய்தால் ப்ளூகலர் பேக்கிரவுண்டில் இதயம் சிறியதாக வரையப்பட்டிருக்கும் வெப்சைட்டை அடைவீர்கள். இதில் போய் பதிவு செய்தால் இலவசம், காசு என எந்த பிளானிலும் உங்களைப் போலுள்ள மனிதர்களைச் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைக்கும். வீடியோ சாட் வசதி, நிறைய புரோபைல்கள் என பலரையும் காதல் வாழ்க்கையில் இழுத்துவிட்டு வணிகத்தில் வென்றுள்ளது மேட்ச் வெப்சைட். இதனால் இந்த ஆண்டு நெ.1 இடத்தில் மேட்ச் உள்ளது. ஆண்டுக்கு 44 டாலர்களை கேட்கிறார்கள்.
டிஎன்ஏ சேவை
23 அண்ட் மீ
விகடனில் அன்லாக் 2.0 தொடரை எழுதும் அண்டன் பிரகாசின் வம்சாவழி யாரென்று சரியாக கணித்துக்கூறிய டிஎன்ஏ சேவை நிறுவனம். அவரே ஓகே என்று சொல்லிவிட்டதால் நாம் அதற்குமேல் அப்பீல் போகவேண்டும். சிறந்த சேவை என இவர்களையே அங்கீகரித்துவிடுவோம். டெஸ்டுக்கு நூறு டாலர்களை கேட்கிறார்கள். கொடுக்க முடிந்தால் உங்கள் பாரம்பரியத்தை அறிந்துகொள்ளலாம்.
சிறந்த டெஸ்க்டாப் ஆபரேட்டிங் சிஸ்டம்
ஆப்பிள் மேக் ஓஎஸ்ஐ பிக் சர்
ஆப்பிளின் பயன்பாடு அதனைப் பயன்படுத்தியவர்களுக்குத்தான் தெரியும். வணிகம், கல்வி, கேம், டிசைன் என அனைவரையும் மயக்கும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. ஏறக்குறைய ஐபோனிலுள்ள அனைத்து விஷயங்களும் அப்படியே கணினிக்கும் பொருந்துகிறது. ஆர்ம் வகை சிபியூவில் இந்த ஓஎஸ்ஸைப் பொருத்தி அப்படியே செட்டாக வாங்கி விடுங்கள். அதைத்தான் ஆப்பிளும் விரும்புகிறது.
மேக் கணினியுடன் அப்படியே வருகிறது. இதனால் இதனை ப்ரீ என்கிறார்கள். மொபைலுக்கான ஓஎஸ் போட்டியிலும் ஆப்பிளின் ஐஓஎஸ் 14 முன்னிலை வகிக்கிறது.
சிறந்த மானிட்டர் போட்டியிலும் ஆப்பிள் புரோ எக்ஸ்டிஆர் மானிட்டர்தான் முதல் இடத்தில் உள்ளது.
சிறந்த கணினி விளையாட்டு
மைக்ரோசாப்டின் பிளைட் சிமிலேட்டர்
உண்மையான உலகிலுள்ள இடங்களில் விளையாடும் அனுபவமும், தட்பவெப்பநிலையையும் விளையாட்டில் உருவாக்கியிருக்கிறார்கள். இதனால் விளையாட்டு என்பது அசாதாரணமான அனுபவமாக மாறுகிறது.
இதன் விலை 60 டாலர்கள்
ஆல் இன் ஒன் டெஸ்க்டாப்
ஹெச்பி பவிலியன் 24 ஆல் இன் ஒன்
விலை 800 டாலர்கள்
ஆப்பிளின் ஐமேக் கணினிக்கு மாற்று. அதன் தரத்தை எதிர்பார்க்க முடியாது என்றாலும் சற்றே குறைய இதிலும் நிறைய வசதிகள் இருக்கின்றன. கணினியின் வடிவமைப்பும் நன்றாக உள்ளது. வெப்கேம், 24 இன்ச் திரை என பல்வேறு வசதிகள் தேவைக்கு ஏற்ப உள்ளன.
பட்ஜெட் டெஸ்க்டாப்
ஏசர் ஆஸ்பயர் டிசி 885 -யூஏ92
காசுக்கான பதிப்பை ஏசர் கணினி கொடுக்கிறது. ஆப்டிகல் டிரைவ், வைஃபை, ப்ளூடூத், இன்டகிரேட்டட் கிராபிக்ஸ் என கொடுக்கும் காசுக்கு மதிப்பான பொருள்தான் என்பதால் அதிகம் கவலைப்படவேண்டியதில்லை.
சிறந்த காம்பேக்ட் கேமரா
ஃபியூஜிபிலிம் எக்ஸ்100வி
புகைப்படம் எடுப்பதற்கு காம்பேக்டாக கேமராக ஒன்று வேண்டும் நினைப்பவர்களுக்கு ஃப்யூஜி கேமரா சரியாக இருக்கும். விலை 1400 டாலர்கள். பிக்ஸ்டு ஆன லென்ஸூடன், சென்சார்களின் மேம்பாட்டுடன் சந்தைக்கு வந்துள்ளது. ஆப்டிகல் ஹைபிரிட் வியூபைண்டர் இதில் புதுசு.
சிறந்த கணினி ஸ்பீக்கர்கள்
ஹர்மன் கார்டன் சவுண்ட்ஸ்டிக்ஸ் 4
கணினி அல்லது போனுடன் இணைத்து பாடல்களை,படத்தை ரசிக்கலாம். 2.1 இசையை துல்லியமாக கேட்க ஹர்மன் ஸ்பீக்கர்கள் உதவுகின்றன. இந்த நிறுவனம் இருபதாவது ஆண்டைக் கடக்கிறவேளையில் வெளியாகியுள்ள ஸ்பீக்கர்கள் இவை. கண்ணாடி போல உருவாகியுள்ள ஸ்பீக்கர்கள் அசத்தலாக வடிவமைப்பிலும் தரத்திலும் இருக்கின்றன என்பதை உறுதியாக சொல்லலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக