குழந்தைகளை கடத்தி விபச்சாரத்திற்கும் அடிமைகளாக விற்பதும் அதிகரித்து வருகிறது! - கைலாஷ் சத்யார்த்தி

 

 

 

Kailash Satyarthi: How to make peace? Get angry - YouTube
கைலாஷ் சத்யார்த்தி

 

 

 

 

நேர்காணல்


கைலாஷ் சத்யார்த்தி


பச்பன் பச்சாவோ அந்தோலன் நிறுவன தலைவர்


பெருந்தொற்று பாதிப்பு குழந்தைகளை எப்படி பாதித்துள்ளது?


பெருந்தொற்று இந்தியாவின் வளர்ச்சிப்பணிகளை பல்லாண்டுகள் பின்னோக்கி நகர்த்தியுள்ளது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் திரும்ப பள்ளிக்கு செல்வது கடினம். நூறுகோடிக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு செல்லமுடியாமல் வீட்டில் உள்ளனர். பெருந்தொற்று காரணாக குறைந்திருந்த குழந்தை தொழிலாளர் பிரச்னை, குழந்தைகள் கடத்தல், அடிமையாக வேலை வாங்குவது ஆகியவை மெல்ல அதிகரித்து வருகின்றன.


நீங்கள் முன்னமே இப்படியொரு நிலை ஏற்படும் என்று கணித்தீர்களா? அதைப்பற்றி கூறுங்கள்.


எங்கள் நிறுவனமே இப்படி சிக்கலில் சிக்கித் தவித்த 1600 குழந்தைகளை மீட்டோம். இதில் தொடர்புடைய 132 பேர்களை கைது செய்ய வலியுறுத்தினோம். பெருந்தொற்று காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் விரைவாக நடைபெறுகின்றன.


இக்காலகட்டத்தினால் தடுப்பூசித் திட்டங்கள், ஊட்டசத்து திட்டங்கள் செயல்படுத்தமுடியாமல் போய்விட்டனவே?


நான் முன்னமே கூறியதுபோல இந்தியா பல்வேறு கட்ட வளர்ச்சிப்பணிகளில் பின்னால் சென்றுவிட்டது. குழந்தைகளுக்கான உணவை பள்ளியில் வழங்கமுடியாது என்றால் அதனை அவர்கள் வீட்டுக்கு சென்று வழங்கியிருக்கலாம். நாம் இங்கு பொருளாதார வீழ்ச்சி, எழுச்சி பற்றி கவலைப்படுகிறோம். ஒரு தலைமுறையே வறுமையில் வீழ்ந்து உண்ண உணவின்றி பட்டினியில் கிடக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி இவர்களைக் காப்பாற்றாது. நாம் எடுத்த முடிவுகளுக்கு அடுத்த தலைமுறையினர் விளைவுகளை அனுபவிக்க போகிறார்கள்.


கோவிட் -19 க்கு ஒதுக்கும் நிதியில் 20 சதவீதம் பட்டியலின குழந்தைகளுக்குத் தேவை என்று கூறுகிறீர்களே ஏன்?


கடந்த மே மாதம் நான் நோபல் பரிசு பெற்றவர்களோடு சேர்ந்து உலக நாடுகளுக்கு வைத்த கோரிக்கை அது. இதன்மூலம் ஐந்து ட்ரில்லியனில் ஒரு ட்ரில்லியன் ஏழை குழந்தைகளுக்கும அவர்களின் குடும்பத்திற்கும் கிடைத்தால் அவர்கள் பிழைப்பார்கள். இதன்மூலம் நாட்டின் கடனும் கொஞ்சம் குறையும். கல்வி, சுகாதாரம், குடிநீர் என அனைத்து பிரச்னைகளும் மேம்பட வாய்ப்புள்ளது.


குழந்தைகளுக்கு பெருந்தொற்று காலம் ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் அந்தானியோ குட்டராஸ் கூறியுள்ளார். அரசு எடுத்த மீட்பு நடவடிக்கைகள் குழ்ந்தைகளுக்கு போதுமானதில்லை என்று நினைக்கிறீர்களா?


உலகிலுள்ள எந்த நாடும் அரசும் குழந்தைகளைப் பற்றி கவலைப்படவில்லை என்பதே உண்மை. அவர்களுக்கான குரலாக இந்தியாவில் நான் ஒலிக்கிறேன். பொருளாதார வீழ்ச்சியில் வேலையிழந்த பலரின் குடும்பங்களும் பள்ளியில்லாமல் வீட்டிலுள்ள குழந்தைகளை வேலைக்கு அனுப்ப நினைப்பார்கள். இதனால் குறைந்த சம்பளத்திற்கு குழந்தைகள் கசக்கி பிழியப்படுவார்கள். குழந்தை தொழிலாளர் முறை, விபச்சாரம், கடத்தல் என அவர்களுக்கு பல்வேறு ஆபத்துகள் உள்ளன. பெண் குழந்தைகள் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். அல்லது விபச்சாரத்திற்காக விற்கப்படுகிறார்கள். இது நடக்கப்போவதல்ல. மெல்ல கண்முன்னே நடந்துகொண்டிருக்கும் அவலம். அரசு பட்டியலின மக்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம் என கூறுவது இதன் காரணமாகத்தான்.


டைம்ஸ் ஆப் இந்தியா


11.12.2020


ருத்ரநீல் கோஷ்



கருத்துகள்