ஏழை இளைஞனின் வாழ்க்கையை தகர்க்கும் சாதிய வன்மம்! கலர் போட்டோ 2020! ச சந்தீப் ராஜ்

 

 

 

Colour Photo Telugu Movie Review | Colour Photo Aha Video ...

 

 

 

 

கலர் போட்டோ

Director:

Sandeep Raj

Stars:

Suhas, Chandini Chowdary, Sunee

 

 

சாதி, நிறம் காரணமாக புறக்கணிக்கப்பட்டு உயிரை விடும் இளைஞனின் வாழ்க்கைதான் கதை.


விஜயவாடா, மச்சிலிப்பட்டினத்தில் எடுக்கப்பட்ட ஆணவக்கொலை பற்றிய படம்.


ஜெயகிருஷ்ணா, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். காலையில் பால் கறந்து ஊற்றும் வேலைகளை செய்துவிட்டு கல்லூரிக்கு வருகிறான். பொறியியல் படித்து நல்ல வேலைக்கு போகவேண்டும் என்பதுதான் அவன் கனவு. பல்வேறு இடங்களிலும் அவன் திறமை தாண்டி அவன் சாதி, நிறம் பலருக்கும் குறையாக தெரிகிறது. இதனை எந்த சமரசமின்றி எதிர்க்கிறான். இதற்கான பல்வேறு இடங்களில் எதிர்ப்புகளை சந்திக்கிறான்.


Colour Photo (2020) Telugu Original HDRip Full Movie ... 

கல்லூரியில் மேல் சாதியைச்சேர்ந தீப்தி என்ற பெண்ணை கடவுளின் வேஷத்தில் பார்க்கிறான். நண்பன் சொன்னது போல உடல் புல்லரிக்க அப்போதே காதலில் விழுகிறான். ஆனால் அதனை அந்த பெண்ணுக்கு சொல்ல முடியவில்லை. காரணம். தான் இருக்கும் நிறம், சாதி என பல தடைகள் முன்னே வருகின்றன. இந்த நேரம் கிருஷ்ணாவுக்கு நடக்கு்ம் சம்பவத்தினால் இருவரும் பாதிக்கப்படுகிறார்கள். அதில் அவன் தவறு ஏதுமில்லை என தீப்தீ சொல்ல இருவருக்குள்ளும் அறிமுகம் ஏற்படுகிறது. அனைவரின் முன்னிலையில் அவமானப்பட்ட விவகாரத்தால் அவர்களிடமிருந்து விலகியே நிற்கிறான். ஆனால் தீப்தி அவனை காதலிக்கிறதாக சொல்ல அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியாத நிலை.


Colour Photo 2020 Telugu 400MB HDRip ESub Download ... 

காதலை எப்படி மறைக்க? கல்லூரி முடிந்தபிறகு தனியாக சந்தித்து காதலுக்கு உரம்போட்டு வளர்க்கிறார்கள். கல்லூரியில் சந்திக்கும்போது ஜெயகிருஷ்ணனின் சீனியர் அவர்களைப் பார்த்துவிட தீப்தியின் பிறந்த நாளில் நடக்கும் விபரீதமான சம்பவம் ஜெயகிருஷ்ணனின் கனவை சிதைக்கிறது. அதோடு அவன் வாழ்க்கையும் ஏறத்தாழ முடிவுக்கு வருகிறது. தீப்தி, ஜெயகிருஷ்ணா காதல் என்னவானது, தீப்தியின் போலீஸ் அண்ணன் அவர்களை என்ன செய்தார், அவரை எதிர்த்து ஜெயகிருஷ்ணனின் நண்பர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் படத்தின் முக்கியமான காட்சி.


காலபைராவின் இசை ஓரிடத்தில் உற்சாகவும் பிற இடத்தில் சோகத்திலும் மனதை சாய்க்கிறது. சகாஸ் ஜெயகிருஷ்ணவாக பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரின் கிறிஸ்துவ நண்பராக வரும் ஹர்ஷா காமெடி, நெகிழ்ச்சி என இரு இடங்களிலும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார்.


கலர் போட்டோ என்ற தலைப்பிற்கு இறுதிக்காட்சியில் நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர். அதிகாரமும், சாதியும் ஏழை ஒருவனின் வாழ்வை எப்படி நாசம் செய்கிறது என்பதை இயல்பாக சொல்லியிருக்கிறார் சந்தீப் ராஜ்.


கண்கலங்க வைக்கும் புகைப்படம்!


கோமாளிமேடை டீம்



கருத்துகள்