இடுகைகள்

வரலாறு- புத்த ஆராய்ச்சியாளர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எகிப்து பூமியில் புத்தரின் அடிச்சுவடுகளை தேடும் ஆராய்ச்சியாளர்!

உலகம் புகழும் பதினேழு வயது அகழ்வாராய்ச்சியாளர் ! பதினான்கு வயதில் அலகாபாத்தைச் சேர்ந்த அரிஸ் அலி அமெரிக்கா , கனடாவில் கல்லூரிப்பாடங்களை படித்து பெற்ற மதிப்பெண் உலக வரலாற்றில் சாதனை ரெக்கார்ட் . யெஸ் ஐந்துக்கு நான்கு புள்ளிகள் . அதாவது 99 சதவிகிதம் . இப்படி டன் கணக்கில் ஐக்யூ நிறைந்த மாணவரை எஞ்சினியராகவோ , டாக்டராகவோ உருவாக்கி பாரின் அனுப்புவதுதானே இந்தியப் பெற்றோரின் புதிய கலாசாரம் . ஆனால் அந்த தவறை அரிஸ் அலியின் பெற்றோர் செய்யவில்லை . அதன் விளைவாக 17 வயதில் இந்தியா - எகிப்து தொடர்பான அகழ்வாராய்ச்சி அறிக்கையை பன்னாட்டு பல்கலைக்கழகங்களில் சமர்ப்பித்து இந்தியாவின் தொன்மை கலாசாரப் பெருமையை சிகரமேற்றி வருகிறார் அரிஸ் அலி . அண்மையில் எகிப்தின் சக்காராவிலுள்ள ஜோசரின் பிரமிடுக்கு சென்ற அரிஸ் அலிக்கு குறிப்பிட்ட நடுகல் பற்றிய தகவல்கள் மட்டுமே லட்சியம் . அது எங்கேயிருந்து பயணித்து இங்கு வந்தது என்ற வழியையும் பின்னணியையும் தேடும் சவாலும் இடர்களும் அரிஸ் அலியின் உற்சாகத்தை பல டிகிரி உயர்த்தியுள்ளது . " மௌரிய பேரரசரான அசோகர் (232-268), புத்த மதத்தை பரப்ப எகிப்துக்கு த