இடுகைகள்

யூரி ககாரின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரஷ்யாவின் பெருமைக்குரிய ஹீரோ! - யூரி ககாரின்

படம்
  யூரி ககாரின் யூரி ககாரின் பலரும் அமெரிக்க வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்ததைப் பற்றி பேசுகிறார்கள். அவ்வளவு ஏன் பாடல் கூட எழுதிவிட்டார்கள். ஆனால் யூகி க காரின் அவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விண்வெளிக்கு சென்று சாதித்தவர். அவர் ரஷ்யாவில் பிறந்தார் என்பதற்காகவே ஒதுக்குகிறார்களோ எனும்படி இருக்கிறது ஊடகங்களின் செய்திகள்.  விண்வெளி காலம் என்பது நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்த காலத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. ரஷ்ய விண்வெளி வீரர் யூரி, 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று 9.07 மணிக்கு வோஸ்டாக் 1 என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார்.  சோவியத் யூனியனின் குளுசினோ எனும் நகரில் 1934ஆம் ஆண்டு பிறந்தவர் யூரி. இவரது பெற்றோர்கள் அன்றைய நடைமுறையான கூட்டுப்பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் யூரி மூன்றாவது ஆள்.  இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. அதில் ஜெர்மனி சோவியத்திற்குள் முன்னேறி வந்தது. அவர்களிடம் குளுசினோ நகரம் பிடிபட்டது. இதனால் குடும்பத்தின் பண்ணையும் அவர்களின் கைக்கு போய்விட்டது. வீர ர்களுக்கு உணவிட யூரியின் பெற்றோர் வற்புறுத்தப்பட்டனர். யூர