இடுகைகள்

மயிலாப்பூர் டைம்ஸ்! - ஏகாங்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோற்றின் கதை!

படம்
சோற்றின் கதை! 'வீட்டு முறை உணவகம்'   மேற்கண்ட வாசகத்தை மிகவும் கவனத்துடன் அணுகவேண்டும். இல்லையெனில் நாலு இட்லியை சாப்பிட்டு இலையை எடுத்துப்போட்டு தட்டை கழுவிக் கொடுத்துவிட்டு வந்த தோழர் அன்பரசின் நிலை ஏற்பட்டுவிடும். அன்பரசை பொறுத்தவரையில் உர்ரென மூஞ்சியை வைத்திருந்தாலும் எதையும் மென்மையாக குரலில் பேசுவதில் எந்த டீலிலும் ஏமாந்து போவது அவர்தான் என நிச்சயமாக அன்பரசின் பாக்கெட் காசைப்போட்டு கற்பூரம் அணைத்தே சத்தியம் செய்து சொல்வேன். திருவண்ணாமலையில் அண்ணல் அன்பரசு, நம்மாழ்வார் வித்வான்களுடன் ஜால்ரா போட்டுக்கொண்டிருந்த காலமது. அங்கு அவரின் அழைப்பின் பேரில் ஒருமுறைதான் சென்றிருக்கிறேன். வேட்டி கட்டிக்கொண்டு அண்ணாமலையாரின் நெருப்பு தலத்தில் கருகிப்போன பீட்ருட்போல தெரிந்தார். அங்கு மீட்டர் குமார் என்பவரின் வீட்டுக்கு அருகில் உணவகம் ஒன்று பட்ஜெட்டில் நன்றாக இருக்கும் என அழுக்குவேட்டி சித்தர் சொல்லியதை இவரும் அப்படியே நம்பிவிட்டார். கையிலும் இரண்டு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் என்றுதான் காசு இருந்திருக்கிறது. கூட்டிக்கழித்து கணக்கு பார்த்த அண்ணல், மூணு இட்லி போதாதா இந

மேன்ஷன் மேனியா!

படம்
மேன்ஷன் வாழ்க்கை சென்னைக்கு விஜயம் செய்யும் ஆண்களின் வாழ்க்கையில் கட்டாயமான நீங்காமல் இடம்பெறு்ம் காண்டம். இந்த இடத்தில் நீ்ங்கள ்வேலை கிடைத்து எங்கு தங்குகிறீர்கள் என்பதே முக்கியம். திருவல்லிக்கேணி, சூளைமேடு, கேகேநகர், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களை உங்கள் பாக்கெட் கனமே தீர்மானிக்கும். திருவல்லிக்கேணியில் தங்குவதாக பத்திரிகை தோழர் கூறியபோது, அவரின் எடிட்டர் சிம்பிளாக சொன்னார் "எழுதறவனுக்கு மனநிலை முக்கியம். அமைதியில்லாத சூழல் இருந்தால் மனசும் கெட்டு உடம்பும் போயிரும்". பின்னர் அவர் மயிலாப்பூரில் தன் சம்பளத்தை பாதியைக் கொடுத்து தங்கி ஜனசேவையைத் தொடர்ந்து வருகிறார். மேன்ஷன் வாழ்க்கையில் முக்கியமானது. இந்தியாவில் பிறரை ஏற்க நமக்கு தேவையான ஒன்றுதான். சகிப்புத்தன்மை. இதனை அளவு கடந்த பொறுமை  எனவும் சொல்லலாம். திருவல்லிக்கேணியைத் தேர்ந்தெடுத்தால் மனதேச பக்கிகள் அறைத்தோழராவது நிச்சயம். எனவே இரவு சன்னி லியோனோடு ஹஸ்கியாக ரொமான்ஸ் பண்ண நினைத்து அடுத்தடுத்த எபிசோடுகள் முன்னேறுகையில் கதவு தட்டும் சத்தம் கேட்கும். ஆம். மனவாடுகள்தான். காசில்லாமல் அண்ணா