இடுகைகள்

முத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அள்ளிக் கொஞ்சேன் எனது காதலை....

படம்
  பேசணும்போல இருக்கு என்று உன் முதல் செய்தி வந்தது. அழைப்பதற்குள் அடுத்த செய்தி ஆனால் கூப்பிடாதே என்று. இரண்டு செய்திகளுக்கும் இடையிலான உன் தயக்கம் சற்றே தாமதமாக வந்தடைந்தது என் விரல்களுக்கு -முகுந்த் நாகராஜன்   கல்லூரிக்கு நீ பிரயாணிக்கும் அரசுப் பேருந்து நீ ஏறியவுடன் அரசிப் பேருந்தாகிறது -சண்பகீ.ஆனந்த்   எனது காதலை ஒரு குழந்தையாகவோ, பொம்மையாகவோ மாற்றத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும் பார்த்ததும் அள்ளிக் கொஞ்சுவாய்   எனது ஆன்மாவை முட்டை கேக்காகவோ, சாக்லெட்டாகவோ மாற்றத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும் உனக்குப் பிடித்திருந்தால் சாப்பிடுவாய் இல்லையெனில் குப்பைத்தொட்டியில் எறிந்துவிடலாம். -ஜானகிராமன் படம் - பிக்ஸாபே  காப்புரிமை - ஆனந்தவிகடன்

நீ விரும்பி விளையாடும் பொம்மை நான்!

படம்
  காதல் விகடன் கவிதைகள்   உன் கோணல் எழுத்துக்கள் போல இல்லை இந்த நேர்த்தியான எஸ்எம்எஸ்-கள் ஒரு கடிதம் இடேன்   யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் கைதட்டி அழைத்தபோது திரும்பிய உன்னை யாரோ ஒருத்தியாக நினைக்க முடியவில்லை -ஜா.பிராங்க்ளின் குமார் ஒரு சில முத்தங்களிலேயே உதறி விலகினாய் நாணமா என்றேன் நாளைக்கும் கொஞ்சம் இருக்கட்டும் என்றாய். அடிகள்ளி நாளைய முத்தங்களை இன்றுவரையா வைத்திருப்பேன்? -மா.காளிதாஸ் திருக்கல்யாணம் வண்டி கட்டி வந்து குவிகிறது ஊர் மொத்தமும் நம் திருமணத்திற்கு தேர் கட்டி வந்து குவிவார்கள் கடவுள் மொத்தமும் -பொன்.ரவீந்திரன் உன் விழி வில்லால் உயிர் உடைந்திட்ட ராமன் நான்   -ப்ரியன் கனிவானதொரு சொல்லோ நேசம் துளிர்க்குமொரு பார்வையோ சில்லறையற்ற பொழுதில் நீயெடுக்கும் பயணச்சீட்டோ போதுமானதாயிருக்கிறது உன்னை நேசிக்க -யாழினி முனுசாமி உப்பைக் கொட்டியவர்கள் கூட அள்ளிக்கொண்டு போகிறார்கள் ஆனால் நீயோ உன் உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு அள்ளாமலே போகிறாயே -தபூ சங்கர் நீ நடந்த தடங்களின் அடியில்தான் கிடக்கிறது நம்

உயிருக்கு உயிரான காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் ஆல்பட்ரோஸ் பறவை! - டே ட்ரீமர் - துருக்கி தொடர்

படம்
                    டே ட்ரீமர் துருக்கி தொடர் 50 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் சனீம் என்ற பெண்தான் தொடரின் மையப் பாத்திரம் . எப்போதும் புதிய தீவு ஒன்றுக்கு சென்று தனக்கு பிடித்த காதலனுடன் வாழவேண்டும் . அதுவும் ஆல்பட்ரோஸ் பறவையைப் போலவே தன்னைக் கருதுகிறாள் . தனக்கான ஆண் இணையைக் கண்டுபிடிப்பதே அவளது வாழ்க்கை லட்சியம் . சனீமைப் பொறுத்தவரை தனக்கு தோன்றுவதை அப்படியே பேசிவிடுவாள் . எதிரிலிருப்பவர்கள் யார் , என்ன நினைத்து கேட்கிறார்கள் என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படமாட்டாள் . இதனால் அவளது குடும்பம் , தோழி அய்ஹான் , அக்கா லைலா என் எல்லோருமே அவளைப் பார்த்து மிரள்கிறார்கள் . குடும்பத்தின் மளிகைக்கடையை பார்த்துக்கொண்டு பகல் கனவு காண்பதுதான் அவளது வேலை . குடும்பத்தின் கடன் வேறு அதிகமாகிக்கொண்டிருக்க , மகள் வேறு அதிக வருமானம் வரும் வேலைக்கு போனால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்கள் . அப்படி எந்த வேலைக்கு போக எனத் தேடும்போது அக்கா லைலா தனது நிறுவனத்திற்கு கூட்டிச்செல்கிறாள் . விளம்பர நிறுவனமான அங்கு அவளுக்கு கிடைக்கும் அனுபவங்கள்தான் ஜவ்வாக இழுக்கும் ஏ

முத்தமிடத் தோன்றுகிறதா? பரிணாம வளர்ச்சியும் ஒரு காரணம்!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி முத்தம் கொடுப்பது எதற்கு? நான் இப்போதுதான் டியர் காம்ரேட் படத்தில் ராஷ்மிகாவுக்கு சடாரென விஜய் தேவர்கொண்டா முத்தம் கொடுப்பதைப் பார்த்தேன். இதனை காமத்திற்கு தாம்பூலமாக பார்க்காமல் எப்படி முத்தம் பழகியிருக்கும் என்றால் சற்று ஆச்சரியமாகவே இருக்கிறது.  1915 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் சிம்பன்சிகள் முத்தம் மூலம் உணவைக் குட்டிகளுக்குக் கொடுப்பதைப் பார்த்து முத்தத்தை இதற்காகத்தான் வந்திருக்கும் என்று கூறினர். இந்திய புராணமான மகாபாரதத்தில் முத்தம் வந்திருப்பதாக டெக்சாஸ் ஆராய்ச்சியாளர்  ஏஅண்ட் எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் கூறுகிறார். கிஸ் என்ற ஆங்கில வார்த்தை கஸ் (KUS)  என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார். வேதமொழி எழுத்துகளில் இதனை ஒருவரின் ஆன்மாவை இன்னொருவர் சுவாசிப்பது என்று கூறுகின்றனர். உலகம் முழுக்க அலைந்து திரிந்த அலெக்சாண்டர் தன் படையுடன் இந்தியாவுக்கு வந்து, முத்த த்தை உலகம் முழுக்க எடுத்துச்சென்றிருக்க வாய்ப்புண்டு. ரோம் மக்கள் கைகள், கன்னம், உதடுகள் ஆகியவற்றில் முக்கிய நிகழ்ச்சிகளின் போது அன்பை வெளிக்காட்ட முத்தமிட்டனர் எ

மூன்றாம் உலக முத்தமா?

படம்
கிஸ் கதை! மாலை நேரம். காதலியோடு நடக்கிறீர்கள். எதையோ சொல்ல நினைக்கிறீர்கள். மெல்லிய புன்னகையோடு ஒரக்கண்ணால் காதலியைப் பார்க்கிறீர்கள். பெண்கள் 360 டிகிரியில் அனைத்தும் அறிவார்களே! உங்களது  அசட்டுத்தனத்தைப் பார்த்தபடி உதடு கடித்து இன்னும் ஏண்டா லேட் என படபடப்பாக பார்க்கிறார். அவரின் இதயத்துடிப்பு மெல்ல உங்களுக்குக் கேட்கிறது. அப்போது நீங்கள் நடந்துசெல்லும் இடம் கார்னரை எட்டுகிறது. அங்கு சோடியம் வேபரின் தொந்தரவு கூட இல்லை. என்ன நடக்கும்? வாய்ப்பை துணிச்சலாக பயன்படுத்துகிறீர்கள்?  மெல்ல தலைசாய்த்து இதழோடு இதழ் ஒட்டி எடுக்கிறீர்கள். மெல்ல ம் என திணறி முழுக்க ஒப்புக்கொடுக்காமல் பின்னர் உங்கள் கைகளுக்கு இதமாக அர்ப்பணித்து காதலியும் நிற்கிறார். இதை நீங்கள் பென்சன் வாங்கும் காலத்தில் நினைத்தாலும் எப்படி நடந்த து என நினைத்து ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இதற்கு காரணம் நமது முன்னோர்கள்தான் என்பதால் மடத்தனம் என்றோ முட்டாள்தனம் என்றோ நினைப்பதை தூரம் தள்ளி வையுங்கள். தொன்மைக்காலத்தில் தாய் உணவை அரைத்து மென்று வாய் வழியாக குழந்தைக்கு கொடுப்பதே பழக்கம். இதுதான் முத்தமாக மாறி இன்றைக்கும் ச