இடுகைகள்

ஸிஸோடைபல் டிஸார்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸிஸோடைபல் டிஸார்டருக்கான மருந்துகள் - மருத்துவத்துறையில் ஏற்பட்ட புரட்சி

படம்
  இக்குறைபாடு கொண்ட மனிதர்கள் ஒருவர் பேசும்போது அவர்களைப் பார்க்க மாட்டார்கள். வேறு எங்காவது பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதிகம் பேர்கூடும் மது விருந்து, அலுவலக சந்திப்பு என்பதெல்லாம் இவர்களுக்கு ஒவ்வாமைதான். பெரும் பதற்றமாக, தவிப்புடன் அமர்ந்திருப்பார்கள். உடைகளையும் சரியானதாக போட மாட்டார்கள். கறைபடிந்தவற்றை அணிந்துகொண்டிருப்பார்கள். புதியவர்களுடன் பேசுவது, சந்திப்பது என்பதை அறவே தவிர்ப்பார்கள். இவர்களது பெயரை யாரேனும் சொன்னால் கூட பதற்றமாவார்கள். பிறர் தனது பெயரைச் சொல்லி சிரிக்கிறார்கள் என கற்பனை செய்துகொள்வார்கள். உலகளவில் இந்த குறைபாடு மூன்று சதவீத பேர்களைப் பாதிக்கிறது.  ஆன்டிசைகோட்டிக் மருந்துகளை ஸிஸோய்ட், ஸிஸோடைபல் குறைபாடுகளை சரிசெய்ய பயன்படுத்துகிறார்கள். ஹாலோபெரிடால், குளோஸாபைன், ரைஸ்பெரிடன் ஆகியவை முக்கியமான மருந்துகள். இம்மருந்துகள் பயன்படுத்தப்படுவதற்கான வரலாற்றைப் பார்த்துவிடுவோம்.  1950ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு. இங்கு அறுவை சிகிச்சையாளர் ஹென்றி லாபோரைட் ஒரு பிரச்னையில் இருந்தார். அவர், நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது அவர்களை சற்று அமைதியாக வைத்திருக்க சரியான மருந்த