இடுகைகள்

லாபம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார்பன் டை ஆக்சைடு, பயிர்களுக்கு நல்லது - நச்சு பிரசாரம் செய்யும் வலதுசாரி பெருநிறுவனங்களும், கைக்கூலி சிந்தனை அமைப்புகளும்

படம்
சமூக பகிரலுக்கு எடுத்துக்காட்டு, நூலகம். இன்று தமிழ்நாட்டிலுள்ள பல நல்ல நூலகங்கள் போட்டித்தேர்வு மாணவர்களுக்கான பயிற்சிக்கழகமாக மாறிவிட்டது. ஆனால், முன்னர் ஏராளமான நல்ல நூல்களுக்கான உறைவிடமாக இருந்தது. தனிநபராக ஒருவர் புத்தக திருவிழா அல்லது நூல் கடைக்குச் சென்று எதையும் வாங்க வேண்டியதில்லை. நூலகத்தில் அரசு நூல்களை வாங்கி வைத்திருக்கும். அதை ஒருவர் இலவசமாக அணுகி படிக்கலாம். வீட்டில் எடுத்து வந்து படிக்க காசு கட்டவேண்டும். இதன்மூலம் நிறைய நூல்களை வாங்கவேண்டிய தேவை இல்லை. சூழல் சார்ந்து அனுகூலங்கள் அதிகம். காகிதம் தயாரிக்க மரங்களை வெட்டி கூழாக்கவேண்டியதில்லை. மாசுபாடும் குறையும். கார் பூல் எனும் ஒரு காரை நிறைய பயணிகள் பகிர்ந்துகொண்டு பயணிப்பதைக் கூட சமூக பகிரலில் சேர்க்கலாம். சூழல் சோசலிசம் தனிநபர் உடைமையை எதிர்க்கவில்லை. வீணாக்குதலை தவிர்க்க கோருகிறது. இயற்கை வளம் சேதப்படுத்துதலை தடுக்க முயல்கிறது. பொருளாதார வளர்ச்சி நிச்சயம் நாட்டிற்கு தேவை. ஆனால், அதற்கான வழி இயற்கைச்சூழலை குறைந்தளவு பாதிப்பதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அதை ஈடுகட்ட முடியாது. இயற்கை வளம் அழிப்பு சார்ந்த விஷயங்களை ச

பிளாஸ்டிக்குகளின் உற்பத்தியை குறைக்காமல் மறுசுழற்சி செய்வதில் பயன் உண்டா?

படம்
  விஷமாக பரவும் பிளாஸ்டிக்குகள்! இன்று உள்ளூர் தொடங்கி புகழ்பெற்ற ஆற்றுக்கரையோரங்களில் சென்று பார்த்தால் எங்கும் நிறைந்துள்ளது பரந்தாமன் மட்டுமல்ல பிளாஸ்டிக்கும் கூடத்தான் என்று தெரிந்துகொள்வீர்கள். அந்தளவுக்கு ஷாஷேக்கள், குழந்தைகளின் பொம்மைகள், பாலிதீன் கவர்கள், சோப்பு உறைகள், எண்ணெய் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், அலுமினிய பாயில்கள் ஏராளமாக கிடைக்கும். உள்ளூர் நிர்வாகங்களும் இவற்றை அள்ளுகின்றன. ஆனாலும் இதன் எண்ணிக்கை குறைவதாக இல்லை. மறுசுழற்சி செய்யும்படியான பிளாஸ்டிக்கை தயாரிக்காதபோது தொழிற்சாலைகளை மூடச்சொல்லி உத்திரவிடும் தைரியமும் நெஞ்சுரமும் அரசுக்கு இல்லை. எனவே, பிளாஸ்டிக்குகள் இன்று குடிநீரில், உணவில், காய்கறிகளில் கூட கலக்கத் தொடங்கிவிட்டன. அதைபற்றிய விரிவான கட்டுரையைப் பார்ப்போம்.  மூன்றாம் உலக நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கூட பிளாஸ்டிக் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றுவரையில் மனிதர்கள் உருவாக்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை பதினொரு பில்லியன் மெட்ரிக் டன் என நேச்சர் ஆய்விதழ் தகவல் கூறுகிறது. தற்போது உலகம் முழுவதும் ஆண்டுக்கு 30

உலகப்புகழ்பெற்ற தொழில்நுட்ப கலகத் தலைவன் லினஸ் டோர்வால்ட்ஸ்! - சாப்ட்வேர் ரெபல் நூல் விமர்சனம்

படம்
  லினஸ் டோர்வால்ட்ஸ் - சாஃப்ட்வேர் ரெபல் 88 பக்கங்கள் கொண்ட சிறுநூல். இலவச மென்பொருள் இயக்கம், அதன் நோக்கம் பற்றி கூறுவதோடு பின்லாந்தில் பிறந்த லினஸ் டோர்வால்ட்ஸின் வாழ்க்கை பற்றியும் சுருக்கமாக விவரிக்கிறது. பொதுவாக ஒருவரின் சுயசரிதை என்பது அவரின் பலங்களை விஸ்வரூபமாக காட்டி பலவீனங்களை கீழே அமுக்குவதுதான். இந்த நூலில் லினஸ் பற்றிய பெரிய ஆச்சரியங்கள் ஏதுமில்லை. அவர் லினக்ஸ் என்ற ஓஎஸ்ஸை உருவாக்கி இலவச இயக்கமுறையாக இணையத்தில் பதிவிடுகிறார். இதை கோடிக்கணக்கான நிரலாளர்கள் மேம்படுத்துகிறார்கள். அதன் வழியாக லினக்ஸ் குழுவினர் உருவாகிறார்கள். இவர்களே இலவச மென்பொருள் என்பதை பின்னாளில் வளர்த்தெடுக்கிறார்கள்.  இந்த நூலில் நாம் என்ன படித்து தெரிந்துகொள்ளலாம்? லினஸ் டோர்வால்ட்ஸ் தான் கோடிங் எழுதிய லினக்ஸை காசுக்கு விற்றால் அவர் தனி ஜெட் விமானம் வாங்கியிருக்கலாம். ஆனால், அதை அவர் செய்யவில்லை. எதனால் அவர் வணிகநோக்கில் வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை என்று நூல் பேசுகிறது. நூலில் பில்கேட்ஸ் மீதான பகடி பக்கத்திற்கு பக்கம் இருக்கிறது. அதிலும் அவரைப் பற்றி லினஸ் சொல்வது தனிவகை.  இலவச மென்பொருட்கள் எதனால் உலகிற

அறிவுசார்ந்த ஜனநாயகத்தன்மையை அளிக்கும் இணையம்- சர்வன்ட்ஸ் ஆஃப் நாலேஜ் திட்டம் - இன்டர்நெட் ஆர்ச்சீவ்

படம்
  அரசு பொது நூலகங்களுக்கு உள்ளே சென்று படிப்பது என்பது கடினமான செயலாகிவிட்டது. இன்று அப்படி செல்பவர்கள் அரசு தேர்வுகளுக்கு படிப்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். பொதுவான அறிவுத்தேடலுக்காக செல்பவர்களுக்கு அங்கு இருக்கைகள் கூட இருப்பதில்லை. எல்லாவற்றையும் நாளைய ஊழல்வாதிகளாக உருவாகவிருக்கும் அரசு அதிகாரிகளே நிரப்பியிருக்கிறார்கள். அதையும் மீறி சென்று ஆங்கில வார இதழ்களை படித்தால் நீ யார், அப்பா என்ன செய்கிறார் என்று கேள்வி கேட்கிற  நூலகர்களே கிராமப்புறங்களில் அதிகம். ஆனால் இணையத்தில் இந்த பாகுபாடுகள், வேறுபாடுகள் கிடையாது. அமைதியாக நூல்களை தேடிப்பார்த்து தரவிறக்கிக் கொள்ளலாம். அதிலும் இன்டர்நெட் ஆர்ச்சீவ் வந்தபிறகு நிலைமை மாறிவிட்டது. அதில் ஏராளமான அரிய நூல்கள், வார இதழ்கள், கட்டுரைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இதை நூலகரிடம் சாதி சொல்லாமல் எளிதாக இணையத்தில் இருந்து எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்திற்கு எதிராக நூல் பதிப்பாளர்கள் வன்மம் கொண்டு வழக்குகளை தொடுத்து வருகிறார்கள்.  பெங்களூருவில் உள்ள காந்தி பவனில் உள்ள காந்தி பற்றிய நூல்களை ஸ்கேன் செய்து இணையத்தில்

அமெரிக்காவில் அதிகரிக்கும் காலநிலைமாற்ற பதற்றம் - கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வானிலை ஆப்கள்

படம்
  காலநிலை மாற்ற பதற்றம் கொரோனாவுக்குப் பிறகு மக்களின் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. பலரும் வேலை என்பதை விட குடும்பம் முக்கியம் என மாறிவிட்டனர். சொந்த ஊருக்கு திரும்பி சென்று தெரிந்த வேலைகளைப் பார்க்கிறார்கள். அதைவிட முக்கியமாக எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்தில் வாழத் தொடங்கிவிட்டனர். அலுவலகத்தில் செய்து வந்த பணிகள் பெரும்பாலும் வீட்டில் இருந்தே செய்யுமாறு மாறிவிட்டன. பெருநிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்ப உத்தரவிட்டும் வேலை செய்தவர்கள் பணிக்கு திரும்பவில்லை. ஏராளமானோர் வேலையைக் கைவிட்டனர். இதெல்லாமே மனிதர்களின் பதற்றமான மனநிலையை அடையாளம் காட்டுவதுதான். பெருந்தொற்றுக்கு முன்பே வெப்ப அலை பிரச்னை இருந்தாலும் தற்போது அது தீவிரமாகிவருகிறது. அண்மையில் அமெரிக்காவின் டெக்ஸாஸில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தது. அங்கு வாழ்ந்தவர்கள் பீதியடைந்து, இங்கேயே இருக்கலாமா, வெப்பம் அதிகரித்தால் வேறு நகரங்களுக்கு போகலாமா என யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.   இவர்களின் உளவியல் பீதியை வானிலை ஆப்கள் மேலும் அதிகரித்தன. அமெரிக்கர்களில் 50 சதவீதம் பேர் வானிலை ஆப்களை பயன்ப

தேநீர் தேசத்தில் மக்களை காபி குடிக்க வைக்க கஃபே திறக்கும் தொழிலதிபர்! - சிவம் சாகி

படம்
  ப்ளூ டோகாய் கஃபே சிவம் சாகி, நம்ரதா ஆஸ்தானா, மேட் சித்தரஞ்சன் ப்ளூ டோகாய் காபி சிவம் சாகி 32 துணை நிறுவனர், செயல் அதிகாரி, ப்ளூ டோகாய் இந்தியாவில் டீ குடிப்பவர்களே அதிகம். குறிப்பிட்ட சதவீத ஆட்கள் மட்டுமே காபி என குரல் கொடுத்து காபி குடிப்பார்கள். இப்படியான சிக்கல் உள்ள தேசத்தில் காபிக்காக தனி கஃபேக்களை தொடங்கி நடத்துவதை யோசித்துப் பாருங்கள். அதை சிவம் சாகி தனது உழைப்பு மற்றும் நம்பிக்கை மூலம் சாதித்திருக்கிறார். டெல்லி, சண்டிகர், புனே, மும்பை ஆகிய நகரங்களில் அறுபது கஃபேக்களை தொடங்கி தனது காபியை விற்பதே சாகியின் லட்சியம். 2024ஆம் ஆண்டு, 130 கஃபக்ககளை திறக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு உழைத்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான சாகி, தனது நண்பர்கள் மேன் சித்தரஞ்சன், நம்ரதா ஆஸ்தானா ஆகியோருடன் இணைந்து 2015ஆம்ஆண்டு ப்ளூ டோகாய் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம், அமேஸான் வலைத்தளத்தில் ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறது. இன்ஸ்டன்ட் காபி அல்லாமல் செயல்படும் பெரிய நிறுவனம் ப்ளூ டோகாய்தான். இதை நமக்கு சொன்னது கூட சிவம் சாகிதான். இப்படி தனக்குத்தானே ஜெயிப்போம்டா என்று சொல்லி காபி

பக்தகோடிகளை நம்பித் தொடங்கப்படும் சாமியார்களின் கார்ப்பரேட் நிறுவனங்கள்! - பக்தியில் கொள்ளை லாபம்

படம்
  மருத்துவப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்களை விற்க சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள். அத்தோடு கூடுதலாக, துறை சார்ந்த மருத்துவர்களையும் பெருநிறுவனங்கள் பேச வைக்கின்றன. இதனால், மக்களுக்கு இந்த பொருட்களின் மீதுள்ள சந்தேகங்கள் குறையும். பால் சார்ந்த ஊட்டச்சத்து பானங்களில் சர்க்கரை அதிகம் இருக்கும். ஆனால், உண்மையில் அவர்கள் பாட்டிலில், பாக்கெட்டில் அச்சிட்டுள்ள அளவை விட அதிகமாக சர்க்கரை சேர்க்கிறார்களா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. மேற்குலகில் எப்படியோ, இந்தியாவில் இதுபற்றிய பொது அறிவு என்பது மிகவும் குறைவு. இதுதொடர்பான உண்மையை இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் உள்ளவர் ஆராய்ச்சி செய்து வெளிக்கொண்டு வந்தால் கூட ஊட்டசத்து பான நிறுவனங்கள், குறிப்பிட்ட ஆய்வாளர் மீது வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு இழுப்பார்கள். ஊட்டச்சத்து பானங்கள், காபித்தூளை விற்கும் நிறுவனங்கள் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு நிதியளித்து தங்களது விற்பனை பொருட்கள் சார்ந்த ஆய்வுகளை செய்ய வற்புறுத்துகிறார்கள்.   இதன்மூலம் காபி அல்லது ஊட்டச்சத்து பானம் பற்றிய எதிர்மறை செய்திகள் குறைந்து நேர்மறை செய்திக

மக்களின் மனதில் பயத்தை புகுத்தினால், அபார வெற்றி - பெருநிறுவனங்களின் உளவியல் யுக்தி

படம்
  பயம். சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள பெரும்பாலான பொருட்களை விற்க வைக்க பயம்தான் தூண்டில். விளம்பரங்கள் மூலம் மக்களின் மனதில் பயமே தூண்டிவிடப்படுகிறது. அண்மையில் ஒரு பாத்திரங்களைக் கழுவுவதற்கான லிக்விட் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். அதில், தண்ணீர் மூலம் கழுவி வைத்த தட்டுகளை எடுத்து துடைத்து மேசையில் அமர்ந்துள்ள பிள்ளைகளுக்கு அம்மா உணவு பரிமாறுகிறார். உடனே, அங்கு வெள்ளைக் கோட் போட்டு வரும் மருத்துவர், ‘’அந்த தட்டில் நோய்க்கிருமிகள் உள்ளது’’ என்று சொல்லி, ஜெர்மன் நாட்டு ஃபினிஷ் என்ற பாத்திரம் கழுவும் லிக்விட்டை வாங்க வற்புறுத்துகிறார். மைக்ரோஸ்கோப்பில் பார்த்தால் தெரியும் நோய்க்கிருமிகள் சாப்பிடும் தட்டில் ஏராளமாக இருக்கின்றன. அதில் உணவு போட்டு சாப்பிட்டால் பிள்ளைகள் உடல்நலம் கெட்டுவிடும் என்பது நேரடியான மிரட்டல்.   இந்த விளம்பரத்தில் பயம் என்பது முக்கியமான கிரியா ஊக்கியாக உள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், மருத்துவமனைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு காரணம், மக்களிடையே அவர்கள் ஏற்படுத்தும் பயம்தான். வீட்டில் பணம் வைத்திருப்போம். அதை எளிமையா

வெற்றிக்கான கொள்கைகள் என்னென்ன? எம்இ மாத இதழ் சொல்லும் ரகசியம்

படம்
  பெருநிறுவனங்கள் அனைத்துமே அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கான இதழ்களை நடத்துகின்றன. அதில் பல்வேறு தொழில் முன்னேற்றங்கள், பணியாளர்களின் சாதனை, நிறுவனரின் லட்சியம், தற்போதைய இயக்குநரின் தொழில்கொள்கை இடம்பெறும். இந்த வகையில் மகிந்திரா எம்இ என்ற இதழை நடத்துகிறது. அதில் வந்த தொழில் அறிவுறுத்தல் கொள்கைகளைப் பார்ப்போம். எப்போதோ ரெடி தொழிலில் வெல்வதற்கான வாய்ப்பு என்பது எப்போது வரும் என தெரியாது. எனவே, நிறுவனம் குறிப்பிட்ட சந்தையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இறங்கினால் திட்டங்களை அறிவிக்கும் வேகத்தில் பணியாளர்களை முடுக்கிவிட தலைவர் தயாராக இருக்கவேண்டும். இல்லையெனில் வெகு விரைவில் வாய்ப்பை இழந்து கையில் உள்ள சந்தையையும் இழந்துவிடுவோம். அத்தனையும் வேண்டாம் கையில் உள்ள அத்தனை பணத்தையும் தொழில் முதலீடாக பயன்படுத்த வேண்டியதில்லை. அதில் ஆபத்துகள் அதிகம். பெரிய முதலீடு மூலம் பெரிய வருமானம் கிடைக்கும் என்பது மூடநம்பிக்கை.   சமரசமற்ற வாழ்வு மேசையை விட்டு விலகி வர தைரியம் இல்லாதபோது அறைக்குள்   நுழையவே கூடாது. செய்யும் வேலையில் அழுத்தம் என காரணம் சொல்லி தரத்தையும், மதிப்பையும் சமரசம்

சர்வாதிகார அதிபரின் கோமாளித்தனமான உரைகள்! - பன் பட்டர் ஜாம் - மின்னூல் வெளியீடு- அமேஸான்

படம்
  பொதுவாகவே சர்வாதிகாரிகள் ஊடகங்களை மிக திறமையாக தந்திரமாக கையாண்டு தங்கள் வசப்படுத்திக்கொள்வார்கள். இதன்படி மெகந்தியா நாட்டு அதிபர் ******** மாதம்தோறும் மக்களுக்கு வானொலி வழியாக உரையாற்றுகிறார். நாட்டின் பிரச்னைகளை பேசுவதை விட அதை மடைமாற்றி தனது கனவுகளைப் பற்றியும், தொழிலதிபராக உள்ள நண்பர்களின் முன்னேற்றங்களையும் பேசுகிறார். அதனை சாத்தியப்படுத்துவதால் என்ன நன்மை என்பதையும் வெளிப்படையாக சில சமயங்களில் உளறுகிறார்.  நாடு முழுக்க பிரிவினை, சீரழிவுகள் இருந்தாலும் அதிபரின் சொத்துக்களும் அவரின் இனாம் தாரர்களான தொழிலதிபர்களும் வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இதுபற்றிய பகடியான சில சமயம் கோபம் வரும்படியான பதினெட்டு உரைகளை இந்த நூல் கொண்டுள்ளது.  பன்பட்டர்ஜாம்  நூலை வாசிக்கும்போது, சமகால நிகழ்வுகள் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு காரணம், நாம் கேள்வி கேட்காமல் வரிசையில் நின்றுகொண்டிருப்பதே என்று உணருங்கள். சர்வாதிகார, ராணுவ ஆட்சி நடைபெறும் தேசங்களை உதாரணமாக கொண்டு எழுதப்பட்ட நூல் இது.  இதற்கான உத்வேகத்தை திரைப்படக் கலைஞர் சார்லி சாப்ளின் வழங்கினார். நூலின் அட்டைப்படத்தை அழகுற வரைந்த கதிர் அவர

ரொக்கப் பரிவர்த்தனைதான் அல்டிமேட்! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
ரொக்கமாக பணத்தை கையாள்வது இந்தியாவில் 2010ஆம் ஆண்டு நூறு சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு எடுத்த ஆய்வில் அதன் அளவு 89 சதவீதமாக குறைந்துள்ளது. முழுமையாக க்யூஆர் கோடை பதிவு செய்து பொருட்களை வாங்குவது கடினமான ஒன்றுதான். நகரத்தில் பலரும் இதனை இப்போதுதான் பயன்படுத்துகின்றனர். ஆனால் அனைவரும் இதனை தேர்ந்தெடுப்பதாக தெரியவில்லை.  பேங்க் ஆப் இன்டர்நேஷனல் செட்டில்மெண்ட்ஸ் என்ற நிறுவனம், பணம் அச்சிடப்படுவது பெரிதாக குறையவில்லை என்று தகவல் கொடுத்திருக்கிறது. ரொக்கமாக பணத்தை பரிமாறுவது குறைகிறது என பலரும் கூறும் சூழ்நிலையில் கூட ரொக்கப்பணத்திற்கான மதிப்பு குறையவே  இல்லை. இதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.   அமெரிக்க டாலர்கள் ரொக்கமாக பரிமாறுவது கடந்த இரண்டு ஆண்டுகளை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது.  2020ஆம் ஆண்டு 26 சதவீதத்திலிருந்து ரொக்கப் பரிவர்த்தனை 19 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அமெரிக்க வங்கி எடுத்த ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.  ஸ்வீடனில் உண்மையில் ஒரு சதவீத ரொக்கப் பரிவர்த்தனைதான் நடந்துள்ளது. உலக நாடுகளிலேயே இதுதான் மிகவும் குறைவான ரொக்கப்பரிவர்த்தனை.  ஜப்பானில் 21 சதவீத ரொக்கப

சுகாதார அட்டை இந்திய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமா?

படம்
  அனைவருக்கும் சுகாதார அட்டை ஒன்றை தயாரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆயுஸ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஏபிடிஎம் என அழைக்கப்படும் திட்டம் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைமுறைக்கு வந்தது.  இதன் தொடக்க கால திட்டம் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று சோதனை முறையில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த வகையில் ஒரு லட்சம் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த சுகாதார அட்டையை பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் கொடுத்து பெறலாம். இதில் சேர விரும்புபவர் தனது பெயர், வயது. பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண் கொடுத்து விண்ணப்பத்து பூர்த்தி செய்யவேண்டும். உங்களிடம் ஆதார் இல்லையென்றாலும் கூட போன் நம்பர் கொடுத்துக்கூட பதிவு செய்துகொள்ளலாம்.  மக்களுக்கு எளிமையான முறையில் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கும் என ஒன்றிய  அரசு கூறியுள்ளது. பிரதமர் மோடி, மக்களின் வாழ்க்கை இனி எளிமையாகும் என திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார்.  சுகாதார அட்டையை பதிவு செய்தால் பதினான்கு  எண்கள் கொண்ட அடையாள எண் வழங்கப்படும். இந்த எண்ணை ஒருவர் இதற்கான ஆப்பை போனில் நிறுவி பதிவு செய்து பெறலாம். நோய் பற்றிய தகவல்கள் ந

பசுமைப்பாதையில் பயணிக்கத் தொடங்கும் இந்திய ரயில்வே!

படம்
  பசுமைமயமாகும் ரயில்துறை! இந்திய ரயில்வே, 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களையும் மின்மயமாக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. கூடுதலாக 2030ஆம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் திறன் கொண்ட சோலார் மின்சக்தியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.  இந்திய ரயில்களில் தினசரி பல லட்சம் மக்கள் குறைந்த கட்டணத்தில் நாடெங்கும் பயணித்து வருகின்றனர். 13 ஆயிரம் ரயில்கள் 67 ஆயிரத்து 956 கி.மீ தொலைவுக்கு சென்று பல்வேறு தொலைதூர நகரங்களை இணைக்கின்றன. இப்படி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தோராயமாக ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகைக்கு சற்றே குறைவானதுதான். பொதுப்போக்குவரத்திற்காக 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 115.45 லட்சம் கிலோ லிட்டர் அதிவேக டீசலை ரயில்கள் பயன்படுத்தியுள்ளன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.  2019/20 காலகட்டத்தில் டீசல் ரயிலில் 43 சதவீத பயணிகளும், மின்சார ரயிலில் 57 சதவீத பயணிகளும் பயணித்துள்ளனர். 2000ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை டீசல் ரயிலில் பயணிக்கும் மக்களின் சதவீதம் 43.5லிருந்து 35.3 சதவீதமாக குறைந்துள்ளது. ‘’’எதிர்வரும் 2030ஆம் ஆணடு முதல் ரயில்வே த

பொருளாதாரத்தை அடித்து நொறுக்கும் ஊழல்!

படம்
பொருளாதார வளர்ச்சியை சிதைக்கும் ஊழல்!  இந்தியா, சீனா என இரண்டு நாடுகளிலும் ஊழல் பிரச்னை உள்ளது. ஆனால் சீனா ஊழலையும் மிஞ்சி பொருளாதார வளர்ச்சியில் சாதனை செய்து வருகிறது.  2019ஆம் ஆண்டில் வெளியான ஊழல் பட்டியலில் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் 80ஆவது இடத்தில் உள்ளன. சீனாவில் ஊழல் பிரச்னை இந்தியாவைப் போலவே இருந்தாலும் 1961ஆம் ஆண்டு தொடங்கி அங்கு பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் வளர்ந்து வருகிறது. 1971 தொடங்கி 22 ஆண்டுகளாக 27 சதவீத பொருளாதார வளர்ச்சியை சீனா கொண்டுள்ளது. உலகளவிலான ஏற்றுமதிச் சந்தையில் இதன் பங்களிப்பு 1948இல் 0.3 இருந்து 2019இல் 13.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.  ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆய்வுப்படி உலகளவில் உற்பத்திச்சந்தையில் சீனா, 28.4 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பங்கு அதேகாலகட்டத்தில் 3% ஆகும்.  இரண்டரை லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் ஏற்றுமதியை சீனா செய்து வருகிறது. இந்தவகையில் கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு 1.7 சதவீதமாக உள்ளது.  இந்தியாவில் ஊழல் என்பது தேர்தல் மூலமாக நாடெங்கும் பரவலாக்கப்பட்டது. இதற்கு எதிராக 1974இல் ஜெயப்பி

மக்களைக் கண்காணிக்கும் பெரு நிறுவனங்கள்! - தகவல் சேகரிப்பில் கொட்டும் லாபம்!

படம்
                பழக்கங்களை பின்பற்றுதல் காலையில் எழுகிறீர்கள் . எழுந்த உடனே பெரும்பாலும் முகங்களை கூட இப்போது எல்லாம் யாரும் கழுவுவதில்லை . உடனே போனில் பேஸ்புக் , வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் என பல்வேறு தளங்கள் உள்ள பதிவுகளை பார்க்கிறோம் . இரவில் தூங்கும்போது மாறியுள்ள விஷயங்களை எப்படி கவனிப்பது ? பின் கிளம்பி அலுவலகம் சென்று இணையத்தில் ஷூ வாங்குவது பற்றி தேடுகிறீர்கள் . இன்ஸ்டாகிராமில் காபியை குடிப்பது போன்ற புகைப்படத்தை டீ பிரேக்கில் பதிவிடுகிறீர்கள் . சிறிதுநேரத்தில் இணையத்தில் நீங்கள் எங்கு சென்றாலும் புதிய ஷூக்கள் பற்றிய விளம்பரங்கள் வரத் தொடங்கும் . எப்படி என்று இந்நேரம் யூகித்திரப்பீர்கள் . அனைத்து வலைத்தளங்கள் நுழைந்தவுடன் குக்கீஸ்கள் நம்மை பின்தொடர அனுமதி கொடுப்பதை மறந்திருக்க மாட்டீர்கள் . இந்த குக்கீஸ்கள்தான் நாய்க்குட்டிபோல நம்மைப் பின்தொடர்ந்து வந்து பல்வேறு தகவல்களை சேகரிக்கின்றன . அதனால்தான் விளம்பரங்கள் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் வருகின்றன . சில சமயங்கள் விளம்பரங்களை கிளிக் செய்யும்போது , கூகுள் இந்த விளம்பரம் பொருந்தவில்லையா என்று கேள்வி கே

வங்கி லாபத்தை பெருமளவு உயர்த்திய பெண்மணி! - சாந்தி ஏகாம்பரம், சங்கீதா பெண்டுர்கர், ஸ்மிதா ஜதியா

படம்
                    சாதனைப் பெண்கள் சங்கீதா பெண்டுர்கர் இயக்குநர் , பேண்டலூன் , ஆதித்ய பிர்லா பேஷன் ரீடெய்ல் நிறுவனம் சங்கீதா இதுவரை ஐந்து நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் . அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை . மருந்து , வங்கி , உணவு என பல்வேறு துறைகளில் பணியாற்றியவர் , இப்போது பேஷன் துறையில் பணியாற்றுகிறார் . இதற்காக இவரது திறமையை சற்றும் குறைத்து மதிப்பிட முடியாது . எட்டாயிரம் பேர் உள்ள நிறுவனத்தை 6 சதவீத வளர்ச்சியுடன் நடத்திச்செல்கிறார் . 2012 இல் ப்யூச்சர் நிறுவனத்திடமிருந்து ்பே்ண்டலூன் நிறுவனத்தை ஆதித்ய பிர்லா வாங்கியது . அப்போது அவர்களுக்கு ஏராளமான போட்டியாளர்கள் இருந்தனர் . இன்று தங்களை தனித்துவமாக காட்டுவதற்கு சில நிறுவனங்களை வாங்கியது சங்கீதாவின் ஐடியாதான் . நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக சொல்லுவதற்கு வாய்ப்பளிப்பது முக்கியம் . அப்போதுதான் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பவர் , வெளிப்படைத்தன்மையையும் , சோதனை முயற்சியையும் விடவே கூடாது என்று கூறுகிறார் . சாந்தி ஏகாம்பரம் குழும தலைவர் , கோடக்