இடுகைகள்

சமூகம்-பெண்ணுரிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கு சக்திதரும் லேண்டெஸா அமைப்பு!

படம்
பெண்களுக்கு நிலவுரிமை தரும் லேண்டெஸா அமைப்பு - ச . அன்பரசு " தினக்கூலியாக உணவுக்காகவே போராடும் எங்களுக்கு அரசு செய்த பெரிய உதவி நிலத்தை எங்கள் பெயருக்கு உரிமை மாற்றிக் கொடுத்ததுதான் " என்று புன்னகை மினுங்க பேசுகிறார் ஜெர்மியா . மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தைச் சேர்ந்த கேசர்டோபா கிராமத்தில் வாழும் ஜெர்மியா மட்டுமல்ல அங்குள்ள 41 ஏழை குடும்பங்களுக்கு நிலங்களைப் பெற்றுத் தந்துள்ளது லேண்டெஸா இன்ஸ்டிடியூட் என்ற உலகளாவிய தன்னார்வ அமைப்பு . அதோடு இக்கிராம மக்களுக்கு விவசாய பயிற்சி , நிலத்தில் விதைக்க விதைதானியங்களையும் வழங்கி உதவுகிறது . தினசரி 130 ரூபாய் வருமானத்தில் இரண்டு குழந்தைகளை வளர்க்க போராடிவரும் ஜெர்மியா போன்ற பெண்மணிகளைக் கொண்ட ஏழைக்குடும்பத்திற்கான எதிர்கால நம்பிக்கையை அரசும் லேண்டெஸா அமைப்பும் பெற்றுத்தரும் நிலம் மீதான உரிமை தந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை . பெண்களின் சக்தி ! உலகம் முழுவதும் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் நிலவுரிமைகளை சீர்திருத்தி கிராமப்பொருளாதாரத்தை வலுவூட்டி மேம்படுத்தி வருகிறது லேண்டெஸா இ