இடுகைகள்

பட்டாசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டாசுகளை மறுசுழற்சி செய்ய முடியுமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பட்டாசுகளை மறுசுழற்சி செய்ய முடியுமா? உண்மை. பட்டாசுகளில் உலோகத்துடன் கலந்த வேதிப்பொருட்கள் (Aluminium, Iron,Sodium Salicylate, potassium perchlorate) ஏராளமாக உள்ளன. வெடிக்காத பட்டாசுகளை நீரில் நனைத்து பிறகே அப்புறப்படுத்தவேண்டும். பட்டாசுகளில் உள்ள உலோகங்கள், வேதிப்பொருட்கள் தனியாக இருந்தால் அதனை மறுசுழற்சி செய்யலாம். இப்பொருட்கள், பட்டாசில் வெடிமருந்தாக ஒன்றாக கலந்துவிட்டால், அதனை மறுசுழற்சி செய்வது கடினம்.   நீர்யானைய விட மனிதரால் வேகமாக ஓட முடியுமா?  உண்மை. யானைக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ள பெரிய விலங்கு, நீர்யானை. இதன் எடை 1,800 கி.கி. எடை அதிகமிருந்தாலும், நீர்யானை காட்டில் மணிக்கு 48 கி.மீ. வேகத்தில் ஓடும் திறன் பெற்றது. இதோடு ஒப்பிடும்போது மனிதனால் மணிக்கு 37 கி.மீ. வேகத்தில்தான்  ஓட முடிகிறது.  https://www.fswaste.co.uk/can-you-recycle-fireworks/ https://www.smithsonianmag.com/arts-culture/14-fun-facts-about-fireworks-180951957/ https://www.britannica.com/story/how-fast-is-the-worlds-fastest-human#:~:text=Since%20many%20people%20are%20more,%3A%2037.58%20or%2023.35%2C

விலங்குகளை அச்சுறுத்தும் பட்டாசுகள்!

படம்
  விலங்குகளை அச்சுறுத்தும் ஒலி! 2021ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசு, பிற மாநிலங்கள் உருவாக்காத சூழல் திட்டத்தை உருவாக்கியது. காலநிலை மாற்றத்திற்கான மும்பை கிளைமேட் ஆக்சன் பிளான் (MCAP) எனும் திட்டம் தான் அது. ஆனால் இந்த திட்டத்திலும் கூட ஒலி மாசுபாடு குறிப்பிடப்படவில்லை.  மேலும், மும்பை பெருநகரில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகள் சூழல் நிலைத்தன்மை விதிகளுக்கு உட்படாதவை.  கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஜெஸ்வின்,  கிங்ஸ்லி களிறு எனும் ஆவணப்படத்தை உருவாக்கினார். இப்படத்தில், விலங்குகள் எப்படி பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டப்படுகின்றன என்பதை விவரித்தது. இப்படி விலங்குகளை இரைச்சலிட்டு விரட்டுவது புதிதல்ல என்றாலும் நவீன காலத்தில் சக்தி வாய்ந்த பட்டாசுகளைப் பயன்படுத்துவது விலங்குகளை அச்சுறுத்துவதோடு அவற்றை உடல் அளவில் காயப்படுத்தவும் செய்கிறது.  "தொடர்ச்சியாக பல்லாண்டுகளாக உருவாகி வரும் இரைச்சல், விலங்குகளின் நுட்பமான ஒலிகளை உணரும் திறனை பாதிக்கிறது. அதன் வாழிடத்தில் திடீரென உருவாகும் ஒலி அச்சுறுத்தலாக மாறி வருகிறது” என 2013ஆம் ஆண்டு ஆய்வாளர் கிளிண்டன் டி ஃபிரான்சிஸ் ,

எங்கெங்கோ செல்லும் பயணத்தின் கதை! கடிதங்கள்

படம்
            இனிய தோழர் முருகு அவர்களுக்கு , வணக்கம் . வணக்கம் . இதோ இங்கு இன்னும் வெறித்தனமாக பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கிறார்கள் . காற்று மண்டலம் கற்கண்டாக மாறுகிறது என ரேடியோவில் சொல்லுவார்கள் . இங்கு கந்தக மண்டலமாக மாறிவிட்டது . புகை மூட்டத்தில் மூச்சுத் திணறத் தொடங்கிவிட்டது . தினகரன் , விகடன் , இந்து தவிர்த்த தீபாவளி மலர்களில் ஆன்மிகம் தூக்கலாக இருக்கிறது என தினமலர் நாளிதழ் கூறியிருக்கிறது . இந்த ஆண்டு தினகரன் தீபாவளி மலரில் வேலை செய்துள்ளது மகி்ழ்ச்சியாக உள்ளது . வாய்ப்பு கிடைத்தால் நூலை வாங்கிப் பாருங்கள் . குங்குமத்திலிருந்து சென்றுவிட்ட வெ . நீலகண்டன் , கோகுலவாச நவநீதன் ஆகியோரின் இடத்தை முழுமையாக நிரப்ப முடியவில்லை என்பது உண்மை . தீபாவளி மலர் வேலைகளை முடித்தவுடனே அடுத்து பொங்கல் மலருக்கான வேலைகள் இருக்கின்றன . நீங்கள் ஏதாவது புதிதாக படித்தீர்களா ? நான் மாதம்தோறும் காலச்சுவடு , தீராநதி இதழ்களை படித்துவிடுகிறேன் . இனி புதிய நூல்களை விட பழைய புத்தக கடைகளில் நூல்களை வாங்கலாம் என நினைத்துள்ளேன் . பயணம் ஒன்று போதாது - தீபன் எழுதிய நூல்தான் அண்மையில் ப

நச்சுப்பொருட்களைக் கொண்ட பட்டாசுகளை கைவிடலாமா?

படம்
தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பது என்பது கூடினாலும் குறைவதில்லை. வெடிப்பது மகிழ்ச்சிக்கான விஷயமாக இருந்தாலும் இதிலுள்ள வேதிப்பொருட்கள் காற்றை தொடர்ச்சியாக மாசுபடுத்தி வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்றம், காற்றை  மாசுபடுத்தும் பேரியம் உப்புகளைக் கொண்டு பல நிறுவனங்கள் பட்டாசுகளை தயாரிக்கின்றன. மேலும் இதனை தயாரிப்பவர்களின் பெயர்களும் பட்டாசுகளில் இடம்பெயர வேண்டும் என்று கூறியது. ஆனால் எந்த முன்னேற்றமும் இதில் ஏற்படவில்லை. சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. மேலும் காற்று மாசுபடுதல் காரணமாக குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதும் அதிகரித்து வருகிறது.  மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே உச்சநீதிமன்றம், பட்டாசுகளை வெடிக்க தடை விதித்தது. குறைந்த மாசுபாடுகளைக் கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம் என பரிந்துரைத்தது. இதுதொடர்பான வழக்கை அர்ஜூன் கோபால்தாஸ் மற்றும் சிலர், அரசியலமைப்புச்சட்டம் 21 யைச் சுட்டிக்காட்டி தொடுத்தனர். பட்டாசுகள் வெடிப்பதால் பல்வேறு வேதித்துகள்களும் வாயுக்களும் வெளியாகின்றன. இதில் கடும் வெடிச்சத்தமும், பல்வேறு வண்ண ஒளியும

டாஸ்மாக் விற்பனை சரிவு, மாசுபாட்டில் சௌகார்பேட்டை டாப் 1!

படம்
நடந்து முடிந்த ஒளி உற்சவத் திருவிழாவில் மார்வாடி, சேட்டுகள் கொண்ட சௌகார் பேட்டை மாசுபாட்டை அதிகம் நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டை விட மாசுபாட்டின் அளவு குறைவு என்பது மகிழ்ச்சி. காற்றில் உள்ள அனுமதிக்கப்பட்ட மாசுக்களின் அளவு 100 எனும்போது, சௌகார்பேட்டையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்பட்டதில் 128  மைக்ரோகிராம் எனும் அளவில் மாசுத்துகள்கள் அதிகரித்துள்ளன. பட்டாசுகளின் ஒலி அளவு 55 டெசிபல் பாதுகாப்பான அளவு என அரசு கூறியது. 73 டெசிபலில் பட்டாசு வெடித்து தீபாவளியை டரியல் ஆக்கி உள்ளனர் சென்னை குடிமகன்கள். அரசுக்கு அவசர உதவியை நாடி 27 போன் அழைப்புகள் வந்துள்ளன. தீபாவளி ராக்கெட்டை மூடிய வீட்டுக்குள் விட்டு தீப்பற்றியது, பைக்கில் தீப்பற்றியது, ராக்கெட் எல்பிஜி கேஸில் தாக்கி தீப்பற்றியது என புகார்களின் பட்டியல் செல்கிறது. அரசு மருத்துவமனையில் தீபாவளி பட்டாசு தொடர்பான பிரச்சனைகளுக்காக 75 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். டாஸ்மாக்கில் தீபாவளி வருமானம் 355 கோடியாக உள்ளது. சாதாரண நாட்களில் வருமானம் 330 கோடி என்றால் விற்பனை வளர்ச்சியை புரிந்துகொள்ளலாம். மதுரை, சிவகங்கையில் குருபூஜை காரண

பட்டாசுக் குப்பைகளை என்ன செய்வது?

பங்குனித்தேர் விழாவின் போது மயிலாப்பூரில் சோறு எப்படி மூலைக்கு மூலை சிதறிக் கிடக்குமோ, அதைவிட அதிகமாக பட்டாசு குப்பைகள் இன்று தமிழகம் முழுக்க கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் தூய்மை பணியாளர்களின் பணி முக்கியமானது. பாராட்டப்பட வேண்டியது. சென்னை நகரம் இந்த தீபாவளிக்கு 82 டன் குப்பைகளை உற்பத்தி செய்திருக்கிறது. இதிலும் அடையாறு, ராயபுரம் பகுதி பட்டாசு குப்பைகளை உற்பத்தி செய்த தில் முன்னிலை வகிக்கும் பகுதிகள். இதனை தூய்மை செய்யும் பணியில் 19 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இடையே மழை வேறு பெய்வதால், பணியாளர்களுக்கு பதிலாக குப்பைகளை அதுவே ஓரங்கட்டி விடுகிறது. பட்டாசுக் குப்பைகளில் வேதிப்பொருட்கள் இருக்கின்றன என்பதால், அதனை திருவள்ளூரில் உள்ள கும்மிடிப்பூண்டியிலுள்ள திடக்கழிவு நிலையத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர். இங்கு ஆபத்தான திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றனர். கடந்த ஆண்டு உருவான பட்டாசு குப்பைகளின் அளவு 90 டன்கள். தூய்மை பணியாளர்கள் வேலைக்கு முன்னதாகவே வந்து பணிகளை செய்துள்ளனர். சாதாரண நாளில் சென்னையில் 5250 டன்கள் குப்பை உருவாகிறது. மாநகராட்சி வீட்டுக்கழிவுகள் மற்றும் ப