நச்சுப்பொருட்களைக் கொண்ட பட்டாசுகளை கைவிடலாமா?












தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பது என்பது கூடினாலும் குறைவதில்லை. வெடிப்பது மகிழ்ச்சிக்கான விஷயமாக இருந்தாலும் இதிலுள்ள வேதிப்பொருட்கள் காற்றை தொடர்ச்சியாக மாசுபடுத்தி வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்றம், காற்றை  மாசுபடுத்தும் பேரியம் உப்புகளைக் கொண்டு பல நிறுவனங்கள் பட்டாசுகளை தயாரிக்கின்றன. மேலும் இதனை தயாரிப்பவர்களின் பெயர்களும் பட்டாசுகளில் இடம்பெயர வேண்டும் என்று கூறியது. ஆனால் எந்த முன்னேற்றமும் இதில் ஏற்படவில்லை. சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. மேலும் காற்று மாசுபடுதல் காரணமாக குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதும் அதிகரித்து வருகிறது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே உச்சநீதிமன்றம், பட்டாசுகளை வெடிக்க தடை விதித்தது. குறைந்த மாசுபாடுகளைக் கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம் என பரிந்துரைத்தது. இதுதொடர்பான வழக்கை அர்ஜூன் கோபால்தாஸ் மற்றும் சிலர், அரசியலமைப்புச்சட்டம் 21 யைச் சுட்டிக்காட்டி தொடுத்தனர். பட்டாசுகள் வெடிப்பதால் பல்வேறு வேதித்துகள்களும் வாயுக்களும் வெளியாகின்றன. இதில் கடும் வெடிச்சத்தமும், பல்வேறு வண்ண ஒளியும் உருவாகிறது. இதற்கு உலோக உப்புகளும், சிலவகை எரிபொருட்களும் காரணம். 

பட்டாசுகளில்  அலுமினியம், பேரியம், பொட்டாசியம், சல்பர், இரும்பு, ஸ்ட்ரான்டியம் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. டெல்லியில் 2016ஆம் ஆண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செய்த ஆய்வில் காற்றில் இத்தகைய பொருட்களின் அளவு அதிகமாக இருந்தது தெரிய வந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, சீனா, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் கூட காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. பட்டாசு தயாரிப்பாளர்கள் 2000 பேர் இருந்தால் அதில் 120 பேர் மட்டுமே முறையான விதிகளை கடைபிடித்து பட்டாசுகளை தயாரித்து விற்கிறார்கள். பிறர் விதிகளுக்கு புறம்பான வேதிப்பொருட்களை பகுதிப்பொருட்களாக பயன்படுத்துகின்றனர். 

பசுமைப் பட்டாசுகளில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் ஆகிய வேதிப்பொருட்களின் அளவு குறைவாக இருக்கும். இதனால் பட்டாசு வெடிக்கும்போது வரும் வெளிச்சமும், சத்தமும் குறைவாக இருக்கும். பட்டாசு வெடிக்கும்போது வரும் துகள்களின் அளவும் 30 சதவீதம் குறைவாக இருக்கும். 

பட்டாசுகளில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உதவியாக அதனை தயாரிப்பவர் பெயர் இடம்பெயர வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை. அப்படி குறிப்பிடாதபோது விதிகளுக்கு புறம்பானது என்று வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளது. 

தி இந்து ஆங்கிலம் 

ஜி ஆனந்தக்கிருஷ்ணன்


கருத்துகள்