சூழலைக் காக்கும் பணியில் நவீன கலைஞர்கள்!
முத்துவின் வானம் -ஷில்பா கிருஷ்ணன் |
ஐஐடி பாம்பேயைச் சேர்ந்தவர் பங்கஜ் ஷேக்சரியா. இவர் பேராசிரியராகவும் சூழல் சார்ந்த செயல்பாட்டாளராகவும் இருக்கிறார். இவர் வெயிட்டிங் பார் டர்டில்ஸ் என்ற குழந்தைகள் நூலைப் படித்தார். அதில் சாம்ராட் என்ற சிறுவன், எழுதிய பல்வேறு ஆமைகளைப் பார்த்த கதையை வாசித்தார். இந்த நூலை கரடி டேல்ஸ் என்ற பெயர் கொண்ட பதிப்பகம் சென்னையில் வெளியிட்டது.
இந்த நூலைப் படிக்கும் சிறுவர்கள் கடலில் உள்ள பல்வேறு வகை ஆமைகள் மற்றும் நண்டுகளை அறிய முடியும். அந்தமானிலுள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்காக போராடி வருகிறார் பங்கஜ். அங்குள்ள ஜாரவா மக்களுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறார். அரசுடன் போராடி நீதிமன்றத்தில் போராடி பல்வேறு ஆணைகளைப் பெற்ற கதைகளை லாஸ்ட் வேவ் என்ற பெயரில் கதையாக எழுதினார். “நீதிமன்றத்தில் பல்வேறு உத்தரவுகளை பெற்று அதனை செயல்படுத்தும் நேரம் வந்தது. அப்போதுதான் 2014 ஆம் ஆண்டில் சுனாமி வந்தது அனைத்து விஷயங்களையும் மாற்றியது’’ என்றார் பங்கஜ் ஷேக்சரியா.
முத்துவின் வானம் என்ற கதையை குக்கூ தன்னார்வ அமைப்பின் தும்பி என்ற பதிப்பகம் வழியாக வெளியாகியுள்ளது. ஜவ்வாது மலையைச் சேர்ந்த முத்து என்ற சிறுவன், நகரத்திற்கு முதல்முறையாக வரும்போது எதிர்கொள்ளும் சவால்கள்தான் கதை. 2019ஆம் ஆண்டு குக்கூ அமைப்பில் ஓராண்டு ஜவ்வாது மலையில் வேலை செய்த அனுபவத்தில் தனது குழந்தைகள் கதை நூலை எழுதினார். பார்வதி சுப்பிரமணியன் ஓவியம் வரைய ஷில்பா, நிலா என்ற பெயரில் தனது குழந்தைகள் நூலை எழுதியுள்ளார். எனது வீட்டுக்கு அருகில் இருந்த ஒன்பது வயது சிறுவன், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்தக்கூடாது என பிரசாரம் செய்து சாதித்தான். சிறுவர்கள் தங்களது வாழ்க்கையை எளிமையான லென்ஸ் வழியாக பார்க்கிறார்கள். அவர்களின் வெகுளித்தனமாக தன்மையே என்னை குழந்தைகளுக்கான நூலை எழுத வைத்தது என்றார் ஷில்பா என்கிற நிலா.
ரோகன் சக்ரவர்த்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். முக்கியமான சூழல் பிரச்னைகளை தனது காமிக்ஸ் திறமையின் மூலம் வெளிக்காட்டி வருகிறார். இவரது க்ரீன் ஹியூமர் எனும் பகுதியை ஞாயிறு வெளியாகும் பத்து ரூபாய் இந்து ஆங்கில இதழில் படிக்கலாம். சூழல் பற்றிய அக்கறையை இன்று காமிக்ஸ், குழந்தைகள் கதைகளை கொண்ட நூல் என பல்வேறு சமூக அக்கறை கொண்ட கலைஞர்கள் வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். இதனை வரவேற்கலாம். காலத்திற்கேற்ப இவற்றை வாசித்து விழிப்புணர்வு பெறுவது முக்கியம்.
டைம்ஸ் ஆப் இந்தியா
சரண்யா சக்ரபாணி
கருத்துகள்
கருத்துரையிடுக