காமிக்ஸ் மூலம் அறிவியலைப் புரிந்துகொள்ளலாம்! - ஆச்சரியப்படுத்தும் அறிவியல் காமிக்ஸ்கள்

 




sample image





காமிக்ஸ் மூலம் அறிவியலைப் புரிஞ்சுக்கலாம்! 




உலகம் முழுக்க வெளியாகும் காமிக்ஸ் நூல்களின் மூலம் மாணவர்களுக்கு எளிதாக அறிவியலைப் புரிய வைக்க முடியும் என கல்வி வல்லுநர்கள் கூறிவருகின்றனர். 


மார்வெல், டிசி, லயன் முத்து காமிக்ஸ் உள்ளிட்ட காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பது  பொழுதுபோக்கிற்காக என்று தான் பலரும் நினைப்பார்கள். ஆனாலும் இதில் உருவாக்கப்படும் பல்வேறு கதாபாத்திரங்கள், வசனங்கள், கதையின் மையம் என பலவும் அறிவியல் மீதான ஆர்வத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துகின்றன. எனவே, இதனை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் உருவாக்கப்பட்டு வருகி்ன்றன. 


படக்கதைகளில் வரும் ஸ்பைடர்மேன், ஆன்ட்மேன், பாய்சன் ஐவி ஆகிய பாத்திரங்கள் உயிரியல், தாவரவியல் சார்ந்த பல்வேறு சமாச்சாரங்களை நமக்கு சுவாரசியமான வழியில் கற்றுக்கொடுக்கின்றன. அறிவியலில் ஈர்ப்பில்லாத மாணவர்களையும் காமிக்ஸ் புத்தகங்கள் உள்ளே இழுத்து வருகின்றன. 


காமிக்ஸ்களை படிப்பதால் ஆழமான அறிவியலை கற்க முடியும் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் மொழியறிவு, எழுத்துகள், கணிதம் ஆகியவற்றை கற்பதற்கான தூண்டுகளை உருவாக்குவதோடு, புதுமைத்திறனும் கூடுதலாக வளர்கிறது. அடிப்படையான விஷயங்களை எளிதாக கற்றுக்கொள்ள உதவும் கருவி என காமிஸ் புத்தகங்களை கூறலாம். இதுபற்றி வணிகம் படிக்கும் 114 மாணவர்களுக்கு காமிக்ஸ் புத்தகங்களை படிக்க கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் அடிப்படை பாட நூல்களை விட காமிக்ஸ் மூலமாக கோட்பாடுகளை எளிதாக புரிந்துகொண்டனர். 




அமெரிக்காவில் மாணவர்களின் உயிரியல் பாடத்தோடு அதனை எளிதாக புரிந்துகொள்ள விஞ்ஞானி ஜே ஹோஸ்ட்லர் எழுதிய ஆப்டிகல் அல்யூசன்ஸ் எனும் காமிக்ஸ் வழங்கப்படுகிறது. தி வே ஆப் ஹைவ், எர்த் பிஃபோர் அஸ் ஆகிய தொடர் வரிசை காமிக்ஸ்கள், மாணவர்கள் அறிவியலைக் கற்பதற்கானவை. கதையின் போக்கில் சுவாரசியமான பல்வேறு தகவல்களைக் கற்றுக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, மாணவர்களுக்காக வெளியாகி வரும் அறிவியல் காமிக்ஸ் ஒன்றில், வௌவால் தனது இறக்கை உடைந்துவிட்டதென மருத்துவரிடம் செல்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதையில் வௌவால்களிலுள்ள பிரிவுகள், அதன் வாழ்க்கைச்சூழல், திறன்கள் ஆகியவை எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. இதுபோல பல்வேறு உயிரினங்களைப் பற்றிய தகவல்களை மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்குமாறு காமிக்ஸ்கள் உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலான அறிவியல் காமிக்ஸ்களை அறிவியலாளர்கள் எழுதுவதால் பொழுதுபோக்கு அனுபவத்தோடு நம்பகமான அறிவியல் தகவல்களும் கிடைக்கின்றன. 


புனைவு கதாபாத்திரங்கள் மட்டுமன்றி களப்பணியாளர்களாக அறிவியலாளர்கள்  வேலைசெய்வதையும் காமிக்ஸ் புத்தகங்கள் பதிவு செய்துள்ளனர். மார்வெல் காமிக்ஸின் தி அன்ஸ்டாப்பபிள் வாஸ்ப் காமிக்ஸின் இறுதிப் பக்கத்தில் அறிவியலாளர்களின் நேர்காணல் பிரசுரிக்கப்பட்டு வெளியாகி வருகிறது. பிரைமேட் அண்ட் அஸ்ட்ரோனெட் வுமன் ஆன் தி பிரான்டியர் காமிக்ஸில் பெண்கள் ஆய்வாளர்களாக ஆய்வகத்தில், நிலத்தில், விண்வெளியில் பணியாற்றுவதாக காட்சிபடுத்தி நம்பிக்கையூட்டியுள்ளனர். நமக்கு தெரியாத பூச்சிகள், தாவரங்கள் சார்ந்த உலகை எழுத்து வடிவில் விளக்குவதை விட காமிக்ஸ் வடிவில் கூறுவது சுவாரசியமானது. .




தகவல்


theconversation


ஆதாரம்

https://theconversation.com/heroes-villains-biology-3-reasons-comic-books-are-great-science-teachers-143251







கருத்துகள்