வலதுசாரிகளின் கொடுங்கனவாக மாறிய காந்தி - கடிதங்கள்
விவாதங்களின் மையப் பொருளாக இன்றும் காந்தி |
அன்புள்ள முருகு அவர்களுக்கு,
வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
காந்தி பற்றி மாலன் எழுதியதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொள்கையை தன் உடலாகவே மாற்றிக்கொண்டு போராடிய காந்தி இன்றும் விவாதங்களின் மையமாகவே இருக்கிறார்.
கடந்த ஒரு வாரமாக உடல்நலம் சரியில்லை. காய்ச்சல், பேதி என்று நிலைமை தீவிரமாக இருந்தது. மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். இன்னும் சிகிச்சைகள் முழுமையாக நிறைவு பெறவில்லை.
நாகரிகங்களின் மோதல் என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாதகமானது. கட்டுரை நூலுக்காக விகடனின் விருது பெற்ற நூல் இது.
எங்களது இதழ், பல்வேறு நகரங்களில் மாணவர்களுக்கான வினாடிவினா போட்டிகளை நடத்தி வருகிறது. இதுதொடர்பான செய்திகளை வெளியிடச்சொல்லி ஆசிரியர் கூறுகிறார். இதனால் இதழ் தயாரிப்பு வேலைகள் நேரடியாக எனது தோளில் விழுந்து விடுகிறது. டைபாய்டு காய்ச்சலுக்கான ரத்தப் பரிசோதனை எடுக்கவேண்டியுள்ளது. ஹீவெய் பற்றிய நூலை வாசிக்க நன்றாக உள்ளது. சாதாரண நிறுவனமாக தொடங்கி இன்று 5 ஜி வசதியை பிற நாடுகளுக்கு கொடுக்கும் வகையில் நிறுவனம் முன்னேறியுள்ளது. இந்த ஆங்கில நூலில் இன்னும் எண்பது பக்கங்கள் மிச்சமுள்ளன.
நன்றி!
சந்திப்போம்.
ச.அன்பரசு
31.1.2020
கருத்துகள்
கருத்துரையிடுக