டிஸ்கோ - டேட்டா ஜங்க்ஷன்






 டிஸ்கோ - டேட்டா ஜங்க்ஷன்




வெள்ளி நிற பந்து உருள, ஏராளமான வண்ணங்கள் பீய்ச்சியடிக்க ஆர்டிஎம் பாட்டு ஒலிக்க டிஸ்கோ கிளப்புகள் இயங்கி வந்தன. இதில்தான் எழுபதுகளில் சினிமா உலகமே வாழ்ந்தது. இன்று ரெக்கார்ட் செய்த பாடல்களைப் போட்டு டிஸ்கோ கிளப்புகள் செயல்படுவதில்லை. பலருகும் டிஸ்கோ கிளப்பிலுள்ள பாடல்கள், அதன் சூழல் என்பது இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இந்தியில் இப்படி உருவானவர்தான் பப்பி லகிரி. இவரது பாடல்களை கேட்கும்போது டிஸ்கோ கிளப் பாடல்களின் பீட்டில் இதயம் துடிக்கத் தொடங்கும். 

1976இல் மட்டும் அமெரிக்காவில் பத்தாயிரம் டிஸ்கோ கிளப்புகள் செயல்பட்டு வந்தன. 

ஒரு நிமிடத்திற்கு 120 பீட்டுகளை டிஸ்கோ பாடல்கள் கொண்டிருக்கும். 

சாட்டர்டே நைட் ஃபீவர் என்ற பாடல் மட்டும் உலகம் முழுவதும் 40 மில்லியன் பிரதிகள் விற்றது. உலகிலேயே இரண்டாவதாக இந்தளவு விற்ற பாடல் இதுமட்டும்தான். 

பீ கீஸ்  குழுவின் நைட் ஃபீவர் என்ற பாடல் எட்டு வாரங்கள் பில்போர்ட் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. 1978ஆம் ஆண்டு நடந்த சாதனையில் முக்கியமானது.  அன்றைய டிஸ்கோ பாடல்களில் இதுதான் இந்த சாதனையை செய்த ஒரே பாடல். 

டிஸ்கோ பாடல்களுக்கான ஒளி அமைப்பு தரும் விளக்கின் விலை 7,172

க்வார்ட்ஸ் 

கருத்துகள்