வெள்ளை சலவை சோப்பால் வென்ற தொழிலதிபர்கள்!

 








ராஜ் குழுமத்தின் தயாரிப்புதான் ராஜ் சூப்பர் ஒயிட் சோப். விலையுயர்ந்த நறுமண சோப்பை எப்படி இந்திய மக்களிடம் விற்றார்கள் என்பதுதான் வணிகம் வளர்ந்த கதை. குளியல் சோப்பு என்ன நிறத்தில் வேண்டுமானால் விற்கலாம். ஆனால் சலவை சோப்பு என்பது நீலநிறத்தில் இருக்கவேண்டும் என்பதுதான் பொதுவான இந்திய மக்களின் நம்பிக்கை. ராஜ் குழுமம் இப்படி நினைப்பவர்களின் நம்பிக்கையை மாற்றி வெள்ளை நிற சலவை சோப்புகளை பஞ்சாப், ராஜஸ்தானில் வெற்றிகரமாக விற்று வருகிறது.

2010ஆம் ஆண்டில் ராஜ் குழுமத்தில் ஒரே ஒரு சோப்புதான் இருந்தது. நேஷனல் சோப் மில்ஸ் என்ற பெயரில் தயாரித்து வந்த இந்த ஒரு சோப்புக்கு பிறகுதான் மாற்றங்கள் நடந்தன. இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வெள்ளை நிற சோப்பை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். 

சோப்பு வணிகம் 1956ஆம் ஆண்டிலேயே பன்சால் குடும்பத்தினர் செய்துவந்தனர். அடுத்து வந்த சாகில், சலீல் ஆகியோர் இருவரும் இரண்டாம் தலைமுறை தொழிலதிபர்களாக மாறினர். சாகில் இங்கிலாந்து சென்று எம்பிஏ படித்துவிட்டு வந்து வணிகப்பொறுப்பை கையில் எடுத்தார். ராஜ், சகேலி என்ற சோப்புகளை விற்று வந்தபோதும் வருமானம் என்பது ஐம்பதாண்டுகளுக்கு பிறகும் 40 கோடியாகவே இருந்து. இது 2002ஆம் ஆண்டு கணக்கு. 

ராஜ் சூப்பர் ஒயிட் சோப் என தயாரித்து விற்பனைக்கு அனுப்பியதும் விநியோகஸ்தர்கள் புலம்பத்தொடங்கினர். இருமடங்குவிலை, குளியல் சோப்பு போல வெள்ளை நிறத்தில் இருக்கிறது, சோப்புக்கு எதற்கு டிடர்ஜென்ட் விலை என ஏகப்பட்ட விமர்சனங்கள். அதில் உண்மையும் இருந்தது. அப்போது சந்தையில் இருந்த சலவை சோப்புகளை விட ராஜ் இருமடங்கு விலை கொண்டது. 

விற்பனை படுத்துவிட்டதால் ராஜ் குழுமம், நுகர்பொருள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சோப்புகளை தயாரித்து கொடுத்தது. இதில் கிடைத்த பணம் அவர்களைக் காப்பாற்றியது. சோப்பு தரமாக இருந்தாலும் அதில் ராஜ் குழுமத்தில் பெயர் கிடையாது என்பது அவர்களை வருத்தியது. எனவே சாகில் வெகு நாட்களாக காரேஜில் நின்ற புல்லட்டை தூசு தட்டி எடுத்தார். அதில் தனது தம்பி சலீலை ஏற்றிக்கொண்டு சோப்பையும் பக்கெட்டையும் எடுத்துக்கொண்டார். நேரடியாக அவரது அப்பா காலத்து கடைக்காரர்களிடம் சென்று சோப்பை தண்ணீரில் சோதித்து காட்டினார். போட்டியாளர்களின் சோப்புகள் தண்ணீர் பட்டு கரைந்து ஒழுக, ராஜ் சூப்பர் ஒயிட் சோப்பு லைபாய் போல கல் போல இருந்தது. அப்போதுதான் கடைக்கார ர்களுக்கு வெள்ளையாக இருக்கும் சோப்பும் நன்றாக உழைக்கும் என தெரிய வந்தது. 

பிறகுதான் ராஜ் சூப்பர் ஒயிட் சோப்பு ரூ. 5 கோடி, 22 கோடி என உயர்ந்து இன்று 112 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் முக்கியமான போட்டியாளர்கள் ரின், நிர்மா, டைட் ஆகிய நிறுவனங்கள். பதினெட்டு மாநிலங்களில் செயல்படும் இந்த நிறுவனத்திற்கு 1.5 லட்சம் கடைக்கார ர்களும், 2 ஆயிரம் விநியோகஸ்தர்களும் உள்ளனர். இப்போது இந்த நிறுவனம் தனது சோப்புகளை கபில்சர்மாவின் நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் கூட விளம்பரப்படுத்த தொடங்கிவிட்டனர். என்ஜாய் என்ற பெயரில் குளியல் சோப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். மண்டலரீதியாக நாங்கள் முன்னேறி வருகிறோம் என்பது எங்களுக்கு பெருமைதான் என்கிறார் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான சலீல். 

போர்ப்ஸ் இந்தியா

ராஜீவ் சிங்







கருத்துகள்