மதம், வகுப்புவாத கருத்துக்களைப் பற்றி உறுதியாக இருந்த நேரு! கடிதங்கள்

 







அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

கடந்த 25ஆம் தேதி முதல் நாங்கள் வேலை செய்த நாளிதழ் பதிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. திங்கள் மட்டும்தான் இதழ் வெளியாகும். அதற்கான வேலைகளை செய்து தரவேண்டும். 

எம்எக்ஸ் பிளேயரில், லிமிட்லெஸ் என்ற வெப்தொடரைப் பார்த்தேன். மூளையை சுறுசுறுப்பாக்கி அதன் சக்தியைக் கொண்டு குற்றங்களை கண்டுபிடிக்கும் ஒருவரின் கதை. வேலை இல்லாமல் கஷ்டப்படும் இளைஞனுக்கு இந்த மாத்திரை கிடைக்கிறது. கூடவே இதனைத் தயாரித்து விற்கும் மாபியா தலைவனின் பகையும் போனஸ். இப்பிரச்னைகளைச் சமாளித்து கொலைப்பழியிலிருந்து தப்பி காவல்துறைக்கு உதவத் தொடங்குகிறான். 

அவனுக்கு பக்கபலமாக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் இருக்கிறார். நாயகன், மூளையை உசுப்பும் மருந்தின் பக்கவிளைவுகளை தடுக்கும் மாற்று மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடவில்லை என்றால் கண்ணில் கற்பனைக் காட்சிகள் தோன்றும், உடல் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவார்கள். காமெடியில் அசத்தியிருந்தார்கள். குடும்பம், காதல், நட்பு, துரோகம், அரசியல் பழிக்குப்பழி என நிறைய விஷயங்களை சொல்ல முயன்றிருந்தார்கள். பரபரவென தொடர் பறந்தது. 18 பிளஸ் காட்சிகள் சிலதான் இருந்தன. 

நேருவின் சுதந்திரத்திற்கு முந்தைய எழுத்து மற்றும் பேச்சுக்களை படித்துக் கொண்டிருக்கிறேன். காந்தியின் எழுத்துகள் போல நேருவின் எழுத்துகள் பரவலாகவில்லை என நினைக்கிறேன்.  பல விவகாரங்களில் அவர் யோசித்து எழுதியவை இன்று நடந்துகொண்டிருக்கின்றன. மதம், பண்பாடு, வகுப்புவாதம் ஆகிய விவகாரங்களில் திடமான கருத்துகளை அன்றே பேசியிருக்கிறார் நேரு. அவற்றைப் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியாவின் நவீன சிற்பிகளில் அவர் ஒருவர் என்பதை நினைவுபடுத்திக்கொண்டேன். 

ச.அன்பரசு

25.3.2021




கருத்துகள்