மனதிலுள்ள உணர்வுகளை பிரதிபலிக்கும் ஸ்கொயட் கேம்! - ஷோபா டே

 






இப்போது உலகமே நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஸ்கொயட் கேம்ஸ் என்ற வெப் சீரிசைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சிலர் பார்க்க முடியவில்லை என கூட வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஒன்பது எபிசோடுகள் கொண்ட சீரிசை முழுமையாக பார்த்து விஷயங்களை புரிந்துகொள்வது கடினமாகவே இருக்கும். 

உலகம் முழுக்க 142 மில்லியன் மக்கள் இந்த வெப் தொடரை பார்த்துள்ளனர். தொடரை இயக்கிய இயக்குநர் ஹூவாங் டாங் ஹூயூக், அதனை சரியாக செய்யவேண்டுமென்ற மன அழுத்தத்தில் பற்கள் கூட விழுந்துவிட்டன என்று பேட்டியில் சொன்னார். தொடரில் ஒவ்வொரு கட்டமும் குழந்தைகளின் விளையாட்டுகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளன.  உலகமெங்கும் செப்டம்பர் 17 அன்று வெளியானது. 45.6 பில்லியன் டாலர்களை வெல்ல குழந்தைகளின் விளையாட்டை விளையாட வேண்டும். பார்த்தால் இந்தியாவின் கௌன் பனேகா குரோர்பதி விளையாட்டு நிகழ்ச்சி போல தோன்றலாம். 

போட்டியில் தோற்றால் வைல்ட்கார்ட் சுற்றெல்லாம் கிடையாது. நேரடியாக சாவுதான். வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள். தோற்பவர்கள் உடனே கொல்லப்படுவார்கள். ரத்தம் சொட்டும் திரில்லர், வன்முறை, உணர்ச்சிகரமான காட்சிகளை கொண்ட வெப் தொடர் இது. 

ஹூவாங்கின் தொடர் என்பது தோற்றுப்போனவர்களின் கதையை உள்ளடக்கியது. இக்கதையில் போட்டியில் பங்கு பெறுபவர்களின் கதை அனைத்துமே தோற்றுப்போனவைதான். இவர்கள் அனைவருக்குமே கடன் உள்ளது. அதைத்தீர்க்க அவர்கள் பணம் சம்பாதிக்கவேண்டும். இக்கதை ஹூவாங்கின் பணப்பிரச்னையை அடிப்படையாக கொண்டது. இக்கதையை படமாக்க பல்வேறு தயாரிப்பாளர்களையும், நிறுவனங்களையும் அணுகியபோது நிராகரிக்கப்பட்டுள்ளது. சலிப்புள்ள பெரும் பணக்காரர்களை  மகிழ்ச்சிபடுத்தவே தொடரை உருவாக்கினேன் என்கிறார் இயக்குநர் ஹூவாங். 

முதன்மை கதாபாத்திரம் இப்போட்டியில் பங்கு பெற்றால்தான், பணம் சம்பாதித்தால்தான்  தனது முன்னாள் மனைவியிடம் உள்ள மகளை தனது கஸ்டடிக்கு பெற முடியும். 

குழந்தை தனியாக வளர்க்கும் அம்மா, பாகிஸ்தானிலிருந்து வந்த இடம்பெயர் தொழிலாளி, முதலீட்டு தரகர், மாஃபியா தலைவர், புற்றுநோய் பாதித்த வயதானவர் என அனைவருமே பல்வேறு சிக்கல்களைக் கொண்டவர்கள்தான். 

தொடர் எப்படி உலகிலுள்ள மக்கள் இத்தனை பேரை கவர்ந்தது? பயம், பதற்றம், வெறுப்பு, துரோகம், அதிகாரத்திற்கு கட்டுப்படுவது, கண்காணிப்பு என அனைத்து விஷயங்களும் இந்த விளையாட்டில் பங்கு பெறும் 456 விளையாட்டு வீரர்களுக்கும் பொதுவானவையாக உள்ளன. உளவியல் ரீதியான தாக்குதல், உடல்ரீதீயான சித்திரவை, வஞ்சகமான செயல்கள் என அனைத்துமே மனிதர்களை ஈர்த்துள்ளதால் தொடர் வெற்றி பெற்றுள்ளது. தொடரின் இயக்குநர் 
ஹூவாங் இந்த தொடர் வேகமாக வேலை செய்யாத போலீஸ்காரர்கள் பற்றியும்தான் என்று சொன்னார். 

அப்போதுதான் எனக்கு ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கானின் வழக்கு நினைவுக்கு வந்தது. எந்த ஆதாரங்களும் ஆர்யனுக்கு எதிராக கிடைக்கவில்லை என்றாலும் கூட அவரை பிணையில் எடுக்க கூட அனுமதி கிடைக்கவில்லை. அதேசமயம் மும்பை கமிஷனரான பரம்பீர் சிங் என்ற ஊழல் போலீஸ்காரர், திடீரென காணாமல் போய்விட்டார். அவரை மகாராஷ்டிர அரசு காணாமல் போய்விட்டார் என அறிவிக்க இருக்கிறது. ஆனால் அவரை முறைப்படி கைதுசெய்யமுடியவில்லை. காவல்துறை அவரை பாதுகாக்கிறதா என்பதும் புரியவில்லை. காவல்துறையினருக்கு அதிகவேலை, குறைந்த சம்பளம், அரசியல் அழுத்தங்கள் உண்டு என்பது உண்மைதான். இத்துறை சார்ந்த சீர்திருத்தங்களை அவர்கள் பேசவேண்டும். அப்போதுதான் துறையில் மாற்றங்கள் வரும். அதற்குமுன் ஸ்கொயட் கேமைப் பார்த்துவிடுங்கள். 

 

 





டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஷோபாடே

எழுதிய கட்டுரையைத் தழுவியது. 

கருத்துகள்