15 ஆயிரம் ரூபாயில் ஸ்மார்ட் போன் வாங்கப்போகிறீர்களா? - இந்த போன்களை ட்ரை செய்யுங்கள்

 

போகோ எம்3 புரோ 5ஜி





உலகத்தில் ஆடை இல்லாமல் கூட இருக்கலாம். அதைக்கூட புது பேஷன் என்று சொல்லிவிடலாம். ஆனால் பழைய போனுடன் இருந்தால் வீட்டில் உள்ள குட்டீஸ் கூட மதிக்காது. எனவே இப்போது நாம் பார்க்கப்போவது பட்ஜெட் போன்கள்தான்.இந்த பதினைந்தாயிரம் ரூபாய் கேட்டகிரியில் கூட 5 ஜி லெவல் போன்களும் உண்டு. சாம்சங், போகோ, ரியல்மீ, ஜியோமி, மோட்டரோலா ஆகிய நிறுவனங்கள் போன்கள் இவை. 


போகோ எம்3 புரோ 5ஜி

14,599 ரூபாய் போன். ஒருரூபாய் தந்துவிடுவார்கள் என நம்பலாம்.  5 ஜி போன் இது. மீடியாடெக் 700 சிப், 90 ஹெர்ட்ஸ்ல் திரை அடிக்கடி புத்துயிர் பெறுமாம். 5000எம்ஏஹெச் பேட்டரி, 48 எம்பி கேமரா பின்புறம் உள்ளது. மேற்சொன்ன காசுக்கு ஸ்டைலான போனு வேணும் சேட்டா என்றால், இதையே இ வலைத்தளங்களில் ஆர்டர் செய்து மோட்சம் பெறுங்கள். 


சாம்சங் கேலக்ஸி எம்32

அதிக நேரம் பைத்தியம் பிடித்த வெட்டுக்களி போல சமூக வலைத்தளங்களில் பறந்து திரிபவரா, ஓடிடியில் வெப்சீரிஸ், திரைப்படங்கள் என ஏராளமாக பார்க்கணுமே ப்ரோ என்பவரா உங்களுக்காகத்தான் இந்த போன். 12499 ரூபாயில் இருந்து விலை தொடங்குகிறது. 6ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி, அமோல்ட் திரை. 6.4 இன்ச்சில் ஈர்க்கிறது. 64 எம்பி கேமரா உள்ளது. ஹலோ ஜி80 சிப்புடன் சந்தைக்கு வந்திருக்கிறது சாம்சங். 

ரெட்மீ நோட் 10எஸ்

அமோல்ட் திரை, 5000எம்ஏஹெச் பேட்டரி, ஹலோ ஜி95 சிப், ஆண்ட்ராய்ட் 11, 64 எம்பி கேமரா என ஸ்டைலாக இருக்கிறது. இந்த போனும் கூட படங்கள் பார்க்க, டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கானதுதான். 

ரெட்மீ 10 பிரைம்

மல்ட்டிமீடியாவுக்கான போன் இது. 11,999 ரூபாயில் தொடங்கும் போன் இது. 90 ஹெர்ட்ஸ் திரை,மீடியாடெக் ஹலோ ஜி 88 சிப், 50 எம்பி குவாட் கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி என அசத்தலாக இருக்கிறது. 

ரியல்மீ 8 ஐ

போனில் மூன்று கேமரா பின்புறம் உள்ளது. 50 எம்பி திறன்.  இந்த வசதி பெரும்பாலான மக்களை ஈர்க்கும். ஜி96 சிப், 5000 எம்ஏஹெச், 6.6 அங்குல திரை, 12,999 விலை. மொபைலில் கேம் விளையாட வேண்டும் என்பவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்த போன்தான். 




மோட்டோ ஜி40 ப்யூஸன்

12999 விலையில் விற்கும் லெனோவா நிறுவனத்தின் தயாரிப்பு. ஹெச்டிஆர்10 திரை, 64 எம்பி மூன்று கேமரா, ஸ்னாப்டிராகன் 732ஜி சிப், 6000 எம்ஏஹெச் பேட்டரி, லெனோவாவின் திங்க் ஷீல்டு எனும் பாதுகாப்பு வசதியுடன் வருகிறது. 


HT









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்