தேவைக்கும் உற்பத்திக்குமான தடுமாற்றமான உறவு! - டேட்டா ஜங்க்ஷன்

 








சைக்கிள், கழிவறை நாப்கின் தாள்கள், செமி கண்டக்டர்கள் ஆகியவை இப்போது தட்டுப்பாடாக உள்ளன. இதற்கு காரணம், பெருந்தொற்று எனலாம். உண்மையில், விற்பனைக்கும் , உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலுள்ள இடைவெளிதான் இதற்கு காரணம். இதனை புல்விப் விளைவு என்கிறார்கள் . இப்போது அதனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். 

செமி கண்டக்டர்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் துறைகளின் எண்ணிக்கை 169. இதனை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. 

சிப் தட்டுப்பாட்டில் அமெரிக்காவில் 1 சதவீத ஜிடிபி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. 

நடப்பு ஆண்டில் 78 சதவீதம் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் சைக்கிள் விற்பனை 38 சதவீதமாக மட்டுமே  இருந்தது. 

பெருந்தொற்று ஏற்பட்டு பொதுமுடக்கம் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த்து. அப்போது மட்டும் அமெரிக்காவில் கழிவறை நாப்கின்களை வாங்க 1.4 பில்லியன் டாலர்களை செலவழித்திருந்தனர். 

சூப்பர் மார்க்கெட்டின் மேனேஜருக்கு கடையில் விற்பனையாகும் பொருள் பற்றித்தான் தெரியும். அவருக்கு, குறிப்பிட்ட பொருள் தொழிற்சாலையில் எந்தளவு விற்பனையாகிறது என்று தெரியாது. தொழிற்சாலையில் உள்ள மேனேஜருக்கு, சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் எந்தளவு விற்றுள்ளன என்று தெரியாது. இத்தகைய சூழலில் பொருட்களின் விற்பனை தடுமாறத் தொடங்கும். இதனால் குறிப்பிட்ட பிராண்டைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்சொன்ன ஆட்களுடன் பேசி புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் எது விற்கிறது விற்கவில்லை என்பது தெரியும். 

க்வார்ட்ஸ் 

கருத்துகள்