ஆபீசிற்கான பொருட்களை வாங்கவேண்டாமா?

 






ஹெக்டார் லேப்டாப் பேக்

மேக்புக் ஏர், டெல் எக்ஸ்பிஎஸ் 13 என்ற இரு கணினி வகைகளை உள்ளே வைக்கும் விதமாக பையை வடிவமைத்திருக்கிறார்கள். தோல்பை என்பதால் அழகாக இருக்கிறது. பேனா, பென்சில், அண்ணாச்சி கடையில் வாங்கிய பில்லைக் கூட  நிறைய ஜிப்களைத் திறந்து பைகளில் வைத்துக்கொள்ளலாம்.  பழசாகும்போது இன்னும் அழகான பையாக மாறும் வாய்ப்பிருக்கிறது. 

விலை ரூ.24, 500


லாகிடெக் எம் எக்ஸ் எர்கோனாமிக் மவுஸ்

அசல் எலி என நினைப்பீர்கள். வடிவமைப்பு எலி குனிந்து உட்கார்ந்து எதையோ கொறிப்பது போல உருவாக்கியிருக்கிறார்கள். செயல்பாடு அனைத்து கருவிகளிலும் இணைத்து பணிபுரியும்படி இருக்கிறது. நீண்டநேரம் மவுசைப் பிடித்து வேலை செய்தாலும் மணிக்கட்டு வலிக்காது என்கிறார்கள். விலை 9300.


லாகிடெக் வயர்லெஸ் கீபோர்டு

ஆப்பிள், ஆண்ட்ராய்ட், விண்டோஸ், குரோம் ஓஎஸ்சில் கூட இதனை வைத்து வேலை செய்ய முடியும். நன்றாக உள்ளது. கைகளுக்கு உறுத்தலாக இல்லாமல் பணி செய்ய உதவும். 


லாகிடெக் காம்போ டச் பார் ஐபேட் புரோ

லாகிடெக் பற்றியே நிறைய எழுத காரணம், அந்தளவு புதிதாக ஏதாவது செய்கிறார்கள் என்பதுதான். ஐபேட் புரோவுக்கான பொருள்தான். பயன்படுத்தினால் மேக் புரோ போலத் தோன்றுகிறது. இதனை வெறும் கீபோர்ட் மட்டுமல்லாது, படங்கள் வரையவும் கூட பயன்படுத்தலாம். 

விலை 17,900





 


கருத்துகள்