முழங்காலில் வழியாக உடலெங்கும் பாயும் மின்சாரம்! கடிதங்கள்

 







அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம். 

அம்மா மற்றும் தங்களின் நலம் நாடுகிறேன். இந்த வாரம் நோய்களின் வாரம் என்றே சொல்லவேண்டும். ஆண்டுக்காக கண் பரிசோதனைக்கு ஆழ்வார்பேட்டைக்கு சென்றேன். அங்குள்ள உதி அறக்கட்டளை நடத்தும் உதி மருத்துவமனையில் சில ஆண்டுகளாக சோதனை செய்து வருகிறேன். கண்கள் வறண்டு வருகிறது. சில ஆண்டுகளில் காட்சியைப் பார்க்கும்போது மின்னல் வெட்டு, கரும்புள்ளி தோன்றினால் உடனே மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள் ஷெரின் ரவீந்திரன் கூறினார். இதில் பெண் மருத்துவரான அன்பரசி கூறியதும் சோதித்ததும் எனக்கு திருப்தியாக இல்லை. இவர் மருத்துவமனையில் உள்ள லேசிக், கான்டாக்ட் லென்ஸ் திட்டங்களை ஒப்பித்தார். மற்றபடி கண்களில் உள்ள பவர், மூன்று ஆண்டுகளாக அப்படியே தொடர்கிறது. 

மருத்துவமனை போய்விட்டு வரும்போது எங்கு கால்களை ஊன்றினேனோ, கால் தசை பிசகிவிட்டது. முழங்காலில் மின்சாரம் பாய்வது போன்று வலி கடுமையாக இருக்கிறது. ஆபீசிற்கு காலை நொண்டிக்கொண்டுதான் சென்று வந்தேன். மயிலாப்பூரில் உள்ள சம்பத் மருத்துவமனைக்கு சென்றேன். வர்த்தமான் என்ற வட இந்திய மருத்துவர்தான் எனக்கு சிகிச்சை அளித்தார். மருந்து சாப்பிட்டதில் வலி கொஞ்சம் பரவாயில்லை. நேருவின் நூலில் காந்தி பற்றி எழுதியதைப் படித்துக்கொண்டிருக்கிறேன். 

ச.அன்பரசு

26.7.2021

image - unsplash

கருத்துகள்