முஸ்லீம்களின் மீதான வெறுப்பை இயல்பானதாக்குகிறது பாஜக! - மனித உரிமை வழக்குரைஞர் அமான் வதூத்

 









மனித உரிமைகள் வழக்குரைஞர்

அமான் வதூத்


முஸ்லீம்களை இப்படி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுவது அரசின் மிகப்பெரிய திட்டம் என்று கூறுகிறீர்களா?

ஆமாம். இது பெரிய திட்டத்தின் சிறிய பகுதிதான். இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, பிற மாவட்டங்களிலிருந்து மக்கள் எதற்கு இங்கு வந்து தங்கவேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். இந்திய அரசியலமைப்புச்சட்டம் 19(டி, இ எஃப்) ஆகியவற்றின் படி இந்தியாவில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சென்று குடியேறி வாழலாம். அதற்கான உரிமை அம்மக்களுக்கு உண்டு. 

மக்களை வெளியேற்றும்போது நான்கு மசூதிகளை இடித்தார்கள் ஆனால் அங்குள்ள கோவிலை எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறதே உண்மையா?

மக்கள் கோவிலின் அருகே குடியிருந்தார்கள் என அரசு வாதிடுகிறது. ஆனால் கோவில் மக்களின் வாழிடத்திலிருந்து தூரமாகவே இருந்தது. 

மக்களின் குடியிருப்புகளிலிருந்து அவர்களை வெளியேற்றிய அரசு, அவர்களுக்கான மறுவாழ்வு குடியேற்றங்களை அமைத்து தருவதாக கூறியது. ஆனால் அத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லையே?

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்தனர். திடீரென அவர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு  வேறு இடத்திற்கு போக சொன்னால் எங்கு போவார்கள்? இப்போது அரசு வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஆறு பிகா நிலங்களை வழங்குவதாக கூறுகிறது.எங்கு நில ங்களைத் தரும்? எதற்காக அவர்களை குடியிருப்புகளிலிருந்து அகற்றுவது முக்கியமான முதல் பணியாக அரசு கொள்ளவேண்டும்?

அசாம் மக்களின் அடையாள அரசியல் இப்போது முஸ்லீம்களுக்கு எதிராக மாறியுள்ளது. இதனை முதல்வர் பிஸ்வாஸ் சர்மா தொடக்கத்திலிருந்தே செய்து வந்தாரா?

இப்போது முஸ்லீம்களை எதிர்ப்பதற்கான இயக்கமாகவே அசாம் இயக்கம் மாறிவிட்டது. என்ஆர்சி - குடியுரிமை பதிவேடு சட்டம் கொண்டு வந்தார்கள். அதில் என்னவானது? இப்போது அவர்களே அதனை ஏற்க மாட்டோம் என்று கூறுகிறார்கள். காரணம், அதன் மூலம் முஸ்லீம் மக்களை வெளியேற்ற முடியவில்லை. இதில் வங்காள இந்துகளும் மாட்டிக்கொண்டார்கள். மாநில அரசின் முக்கியமான திட்டம், சட்டத்தின் மூலம் முஸ்லீம் மக்களை வெளியேற்றுவதே. எனவே இப்போது முஸ்லீம் மக்களை பழிவாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். என்ஆர்சியைத் தூக்கிப் போட்டுவிட்டார்கள். 

குடியுரிமைச்சட்டம் என்பது அசாம் சட்டசபைத் தேர்தலில் முக்கியமான விவகாரம் அல்லவா?

உணர்ச்சிகரமான விஷயமாகவே இருக்கும். ஹிமந்தா பிஸ்வாஸ், மக்களுக்கு முக்கியமான எதிரியாக முஸலீம்களை கட்டமைத்து வருகிறார். அவர்களுக்கு வங்காள இந்துகள் பற்றி எந்த பிரச்னையும் இல்லை. எனவே இதே மாதிரியான திட்டத்தில் செல்லும்போது, வாக்களிப்பில் பிரச்னை வராது என நினைக்கிறார்கள். 

அசாமில் பிரச்னை என்பது மதவாதம் கிடையாதே. அசாமியர்கள் யார் என்பதுதானே பிரச்னை. ஆர்எஸ்எஸ்ஸின் வளர்ச்சிதான் இதற்கு முக்கியமான காரணமா?

ஆர்எஸ்எஸ் அமைப்பு மதவாதம் சார்ந்த கருத்துகளை எளிதில் வெளியிடாது. நெல்லி, தோல்பூர், சாவல்கோவா ஆகிய பகுதிகளில் முஸ்லீம்களை படுகொலை செய்தபோது கூட அந்த அமைப்பு மதரீதியான விஷயங்களை பேசவில்லை. ஆனால் இப்போது வங்காள இந்துகள் அவர்களுக்கு பிரச்னையில்லை. வங்காள முஸ்லீம்கள்தான் பிரச்னை என்பது அவர்களது செயல்கள் மூலம் வெளிப்பட்டுவிட்டது. 

பீகார், வடக்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் கூட என்ஆர்சி தேவை என குரல்கள் எழத் தொடங்கிவிட்டன?

இந்த விவகாரம் எப்படி மாறும் என்று எனக்குத் தெரியவில்லை.  ஆனால் இன்று அசாமில் நடைபெறும் மோசமான விஷயங்கள் என்ஆர்சி அமல்படுத்தப்பட்டால் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் என்பது உறுதி. இந்த சட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்று எனக்குத் தெரியவில்லை. சட்டத்திற்கு புறம்பான மக்கள் மாநிலத்தில் குடியேறி இருப்பதை கண்டுபிடிப்பதற்கான சட்டம் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் என்ஆர்சி அமலான பிறகு, அதைப்பற்றிய விஷயங்களை இவர்கள் நேரடியாக எதையும் கூறவில்லை. 

காங்கிரஸ் கட்சி மற்றும் பத்ரூதின் அஜ்மல் அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணி கட்சி, மக்களை வெளியேற்றும் செயல்பாடு பற்றி என்ன கருத்தைக் கொண்டுள்ளது?

காங்கிரஸ் இந்த விவகாரத்தில் முக்கியமான பங்களிப்பைக் கொண்டுள்ளது. மக்களின் குடியிருப்பை இடித்து அவர்களை வெளியேற்றுவதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறது. ஆனால் அஜ்மலின் கட்சி இதனை உறுதியாக கூறவில்லை. அவர்களுக்கு முக்கிய பிரச்னையாக இருப்பது முஸ்லீம்கள்தான். எனவே அவர்கள் பிரச்னையில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இந்த தேர்தலில் பாஜக, அஜ்மலை எதிரியாக மக்களிடம் காட்டியே வெல்ல நினைக்கிறது. ஆனால் அஜ்மல் இதுவரை எதுவுமே பேசவில்லை. அமைதியாக இருக்கிறார். அவரது சகோதர ர்கள் முதல்வர் பிஸ்வாஸை புகழ்ந்து பேசுகிறார்கள். ஒரு முஸ்லீமாக நான் சொல்வது என்னவென்றால், அசாமில் முஸ்லீம்களை வழிநடத்துவதற்கென எந்த தலைவரும் இல்லை என்பதைத்தான். 

தங்களின் மீதான தாக்குதலை முஸ்லீம் மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாததை உணர்கிறார்கள்.  எனக்கு தங்களைக் காப்பாற்றக் கூறி ஏராளமான அழைப்புகள் வருகின்றன. அரசின் முஸ்லீம் மக்கள் மீதான வெறுப்புக்கு மொயுனுல் ஹாக் என்பவரை சுட்டுக்கொன்று அவரது உடல் மீது புகைப்படக்காரர் குதித்த காட்சி ஒன்றே போதுமானது. முதல்வரும், அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்துகளை ஊடகங்களில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வெறுப்பு வாதம் அனைத்து இடங்களிலும் மக்களை பாதுகாப்பற்றவர்களாக்கி உள்ளது. வெறுப்பை அரசு மெல்ல இயல்பாக்கி வருகிறது. 

பிரன்ட்லைன்

ஸியா அஸ் சலாம் 





கருத்துகள்