முஸ்லீம்களை முழுமையாக அரசு அமைப்பு மூலம் களையெடுத்தல்! - அசாமில் பரவும் மதவாதமும் வெறுப்பு அரசியலும்!

 


அசாம் நெல்லி இனப்படுகொலை








அசாமில் முஸ்லீம்களின் குடியிருப்பை செப்.23 அன்று அசாம் மாநில அரசு அகற்றியது. பலவந்தமாக செய்த இந்த நடவடிக்கையால் முஸ்லீம்களோடு வங்காள இந்துகளும் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தனர். இங்கு கவனிக்கவேண்டியது அரசு, மேம்பாட்டுப் பணிகளுக்காக வீடுகளை இடித்து முஸ்லீம்களை நடுத்தெருவில் நிறுத்தவில்லை. 

பூர்விக அசாம் மக்கள் முஸ்லீம்கள் ஆற்று ஓரத்தில் குடியிருக்கும் இடங்களில் விவசாயம் செய்வார்களாம். அதற்காக நிலங்களை அரசு அவர்களுக்கு அளிக்குமாம். இப்படி சொன்னாலும் அரசு நிலங்களை பூர்விக மக்களுக்கு அதாவது தகுதியுள்ளவர்களுக்கு அளிக்கும் வரையில் தனது கையில்தான் வைத்திருக்கும். 

அரசு 28 வயதான மைனல் ஹாக்கிக் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது காவல்துறை. இறந்து கிடக்கும் உடல் மீது புகைப்படக்கார ர் பிஜய் பனியா என்பவர் வெறியோடு குதிக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் பலரும் பார்த்திருப்பார்கள். இப்படி அரசின் ஆதரவோடு மதவாத, இனவெறியை அங்கு பரப்பி வருகின்றனர். எதற்கு? மக்களை பிரித்தால்தானே தேர்தலில் ஜெயிக்கவேண்டும். அனைத்து மக்களுக்கும் பொதுவான எதிரியை உருவாக்கவேண்டும் என்கிற நாஜி கருத்துதான் இது. 

முஸ்லீம்களை கெடா, அலி, மியான் என்று அழைப்பது வழக்கம். பீகாரிகளை கூலி என்றும், வங்காளிகளை பொங்கல் என்றும், நேபாளிகளை நாக் செபெடா எனவும் கொச்சையாக வசையாக திட்டி அழைப்பது அசாமியர்களின் வழக்கம். இப்படி அசாமியர்கள் அல்லாதவர்களை அவமானப்படுத்துவது தனியாக இல்லாமல்  பொதுவெளியிலும் அரங்கேறுவது அவமானகரமான வேதனையானது.  

அரசு நிலத்தில் குடியேறி இருப்பவர்களை வெளியேற்றுவதற்கான நோட்டிஸ்களை முந்தைய நாள் இரவில் மக்களின் வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறார்கள். மக்கள் சுதாரித்து தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்புவதற்குள் அரசு அதிகாரிகள், ஆயுதங்களும் வாகனங்களுமாக வந்து சேர்ந்தனர். மக்களின் மார்பிலும் வயிற்றிலுமாக துப்பாக்கி குண்டுகளை சுட்டு அவர்களை கொல்வதற்கும் அஞ்சவில்லை. செப்டம்பர் 20 அன்று, இப்படி அரசு பயங்கரவாதம் அரங்கேறியுள்ளது. 

குடியேற்றங்களை அகற்றும்போது முஸ்லீம்களை சுட்டது, கொன்றது, இறந்தவர்கள் உடல் மீது நடனம் ஆடியது என எதற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் முதல்வர் ஹிமந்தா பதிலே கூறவில்லை. தனது முன்மாதிரியான பிரதமர் மோடியை பின்பற்றி கள்ள மௌனம் சாதித்தார்.  ஆற்றில் ஓரத்திலுள்ள நிலங்களிலிருந்து அகற்றப்பட்ட மக்களுக்கு 14,400 சதுர அடி நிலம் குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதுவும் கூட தகுதியுள்ள குடும்பங்களுக்கு என கூறியுள்ளதால் அதுவும் நிலங்களை இழந்து முஸ்லீம் மக்களுக்கு கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது. 

அசாமில் வெளிநபர்கள் மீதான கோபம் என்பது இன்று உருவாகவில்லை. 1970களில் இதற்காக விதைகள் ஊன்றப்பட்டுவிட்டன. அதன்படி மாணவர்கள் அசாமியர்களுக்கானது அசாம் என்ற கோஷத்தை எழுப்பியபடி வன்முறையில் ஈடுபட்டு வந்தனர். வங்காளம் பேசும் முஸ்லீம்கள் வங்கதேசத்திலிருந்து அகதியாக வந்தவர்கள் என இன்றைய பாஜக அரசு திரும்ப திரும்ப ஆதாரம் இல்லாத பொய்யை , வதந்தியைக் கூறி அசாமிய இயக்கங்களின் மீதான வெறுப்பை முஸ்லீம்கள் பக்கம் திருப்பி வருகிறது. இப்போது அரசு அமைப்புகள் மூலம் விரட்டப்பட்டுள்ள மக்கள் காலனிய அரசு காலத்தில் இங்கு விவசாயம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டவர்கள். பலரும் இங்கு ஐம்பது ஆண்டுகாலம் அல்லது அதற்கு மேல் வாழ்ந்திருக்கிறார்கள். 

ஜனசங்கம் இங்கு 1946லிருந்து  காலூன்றி பல்வேறு ஷாகா வகுப்புகளை நடத்தி அதில் இணையும் மாணவர்களுக்கு மூளைச்சலவை செய்து, ஆக்கிரமிப்பாளர்கள், வெளிநாட்டினர் என்ற கருத்தை மனத்தில் பதிய வைத்து வருகின்றனர். இதனால் முஸ்லீம்கள் என்றாலே அவர்கள் வேற்றுநாட்டினர் என்ற கருத்து மக்களிடையே இயல்பானதாகிவிட்டது. 

1983, பிப்ரவரி 18ஆம் தேதி தவறான வாக்காளர் பட்டியல் என்று கூறி மத வெறியர்கள் நெல்லி மற்றும் பிற கிராமங்களில் ஆறு மணிநேரம் படுகொலைகளை நடத்தினர். இதில் 2200 வங்காள முஸ்லீம்கள் பலியானார்கள். இவர்கள் அலிசிங்கா, குலாபத்தர். பசுந்தாரி, பக்துபா, இந்துர்மாரி, மதி பர்பட், முலாதாரி, மதி பர்பட் நெ.8, சில்பேடா, போர்புரி ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் மீது தாக்குதல் நடைபெற்றது.  இதுபற்றி ஆராய எப்போதும் போல கிணற்றில் கல்லைப் போடு இல்லையென்றால் விசாரணைக் கமிஷனை போடு என்ற வழக்கிற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஹிதேஸ்வர் சைக்கியா என்பவரின் தலைமையில் விசாரணைக் கமிஷன் 1984இல் அமைக்கப்பட்டது. காங்கிரஸ் அரசு இந்த கமிஷனின் அறிக்கையை இதுவரை  வெளியிடவே இல்லை. 

இப்படி படுகொலையான மக்கள் பற்றிய செய்தியை அரசு வானொலி கூட வெளியிடவில்லை. ஆனால் இதுபற்றிய செய்தியை பிபிசியும், வாய்ஸ் ஆப் அமெரிக்காவின் வங்காள மொழிப்பிரிவும் பேசத்தொடங்கின. இறந்துபோன குழந்தைகள்  பற்றிய புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இதனால் வேறுவழியின்றி செயல்பட்ட மாநில அரசு, இறந்துபோனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இப்படி தாக்குதல் நடத்திய அசாம் கன பரிஷத் அமைப்பினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர்களுடன் மாநில அரசு ஒப்பந்தம் செய்துகொண்டு 688 வழக்குகளில் 310 வழக்குகளை தள்ளுபடி செய்தது. மக்களுக்கு கிடைத்த நீதி இதுதான்.










பிரன்ட்லைன் இதழில்

தீஸ்தா செடல்வாட்  எழுதிய கட்டுரையைத் தழுவியது. 



கருத்துகள்