அவமானச்சின்னத்தை அகற்ற முயலும் சீன அரசு!
அவமானத்தின் தூண்- ஹாங்காங் |
சீன கம்யூனிஸ்ட் கட்சி, வரலாற்று ரீதியான களங்கத்தை மறைக்கும் முயற்சியை எப்போதும் செய்துவந்திருக்கிறது. அண்மையில் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சிற்பி ஜென்ஸ் கல்சியோட் தியான்மென் சதுக்க படுகொலைகளை சுட்டும் சிற்பத்தை வடிவமைத்தார். இப்போது சீன அரசு அந்த சிற்பத்தை அகற்ற வலியுறுத்தி வருகிறது.
சீனாவில் அனுமதிக்கப்படாத தியான்மென் அடையாளம், ஹாங்காங்கில் மட்டுமே உள்ளது. சீனாவில் இருக்கும் ஜனநாயகத்தை முடக்கும் பிரச்னைகள் ஹாங்காங்கில் எதிரொலிக்க, அங்கு போராட்டங்கள் தொடங்கின. இப்போராட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள்.
தியான்மென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அரசு ராணுவம் கொண்டு அடக்கியது. 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போராட்டங்கள் தொடங்கின. இதனை நினைவுறுத்தவே சிற்பி அவமானத்தின் சின்னம் என்ற பெயரில் சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார்.
தியான்மென் சதுக்கத்தில் மொத்தம் 7 ஆயிரம் பேர் காயம்பட்டனர். இதில் போராட்டக்கார ர்கள், காவல்துறையினரும் உள்ளடங்குவார்கள்.
36 மாணவர்கள் கொல்லப்பட்டனர். பத்து ராணுவ வீர ர்கள் இறந்தனர். மொத்த இறப்பு 241. பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 218.
தியான்மென் சதுக்க போராட்டத்திற்கு பிறகு ராணுவ டேங்குகள் அணிவகுத்து வந்தன. அதனை ஒரு வெள்ளைச்சட்டை மனிதர் தடுத்து நிறுத்துவார். இதுவே புகைப்படமாக வெளியாகி உலக நாடுகளில் தியான்மென் சதுக்க படுகொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இப்புகைப்படத்தை சீன அரசு ரசிக்கவில்லை. எனவே சீனாவில் எங்கு தேடினாலும் இந்த படத்தைப் பார்க்க முடியாது.
வீடியோவில் இரண்டு நீலச்சட்டை மனிதர்கள் டாங்கிகளை தடுத்த மனிதரை தள்ளிக்கொண்டு போய் கூட்டத்தில் மறைவதைக் காட்டுகின்றனர். ஆனால் இவர் இப்போது எங்கிருக்கிறார், என்னவானார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
சிலர் அவரை சீன அரசு கைதுசெய்து சிறையில் வைத்துவிட்டது என்கிறார்கள்.
வெள்ளைச்சட்டை அகிம்சைவாதி மட்டும் சீன அரசின் வன்முறையை எதிர்த்து போராடவில்லை. இன்னும் நிறையப் பேர் இவரைப் போலவே போராடினர் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் வெள்ளைச்சட்டை மனிதரின் புகைப்படம் மட்டுமே நம்மிடம் இருக்கிறது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக