வீட்டிலிருந்தே அலுவலக வேலை - கடிதங்கள்

 





வீட்டிலிருந்தே வேலை

அன்புக்குரிய தோழர் இரா.முருகு அவர்களுக்கு, வணக்கம். 

நலமாக இருக்கிறீர்களா? தங்கள் குடும்பத்தினர் நலமோடு இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எங்கள் இதழுக்கான வேலைகள் தொடங்கிவிட்டன. வேலைகள் அனைத்தும் இணையம் சார்ந்தது என்பதால் கட்டுரைகளை எழுதிய மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டும். வலி நிவாரணிகள் பற்றி படிக்க நினைத்தேன். அதற்கான நூல் கிடைத்தது. போனில் அதனைப் படித்து வருகிறேன். நேரு பற்றிய தமிழ் நூல் எழுதி வருவதைச் சொல்லியிருக்கிறேன் அல்லவா? இன்னும் பதினைந்து பக்கங்கள் எழுதினால் போதும். சரிபார்த்து வெளியிட்டு விடலாம். 

நன்றி


ச.அன்பரசு

2.4.2021

படம் பிக்சாபே

கருத்துகள்