நல்ல படத்தை வசூலிக்கும் தொகை தீர்மானிப்பதில்லை - ஹர்ஷ்வர்த்தன் கபூர்
ஹர்ஷ்வர்த்தன் கபூர்
இந்தி நடிகர்
இரண்டு பொதுமுடக்கங்கள் ஏற்பட்டுள்ளன. திரைத்துறை சார்ந்த வேலைகள் அனைத்துமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நேரங்களில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்.
நான் அப்பாவுடன் இணைந்து டிஜிட்டல் வெளியீட்டிற்காக தயாராக உள்ள படங்களை உருவாக்கிக்கொண்டிருந்தோம். வாசன் பாலா எடுக்கவிருக்கும் படத்தில் நானும் அப்பாவும் நடிக்கிறோம். எனவே ஒருசில மாதங்கள் தவிர பிற நாட்களில் எனக்கு வேலை இருந்தது.
நீங்கள் அறிமுகமான படம் மிர்சயா வெற்றிபெறவில்லை. அடுத்து வெளியான பவேஷ் ஜோஷி படத்தில் உங்களுடைய நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அந்தப்படம் கூட சிறப்பான வெற்றியைப் பெறவில்லை. இந்த சூழ்நிலை உங்களுக்கு எப்படி இருந்தது?
பவேஷ் ஜோஷி படம் பலராலும் சரியாக கவனிக்கப்படாத படமாக போய்விட்டது. அதற்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது. அவர்கள், இன்றும் கூட அதன் அடுத்த பாகத்தை எடுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கு சமூக வலைத்தளம் வழியாக இதுபோல கோரிக்கைகள் வருகின்றன. அந்தப்படம் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. நல்ல படத்தை வசூல் தீர்மானிப்பதில்லை. ஆனால் மக்கள் ரசித்துப் பார்க்கவேண்டிய படமாக அது இல்லையென்பதை நான் ஏற்கத்தான் வேண்டும்.
மிர்சயா படத்தைப் பொறுத்தவரை அது கலைப்படம். அந்தப்படம்தான் எனக்கு இந்தி திரையுலகில் அறிமுகப்படமாக அமைந்தது. ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் அனில் கபூரின் மகன் நடிக்கிறார் என்ற பரபரப்பிற்கு படம் சரியாக பொருந்தவில்லை.
தற்போது நீங்கள் அறிந்துகொண்ட விஷயங்களின்படிதான் படங்களை தேர்ந்தெடுக்க போகிறீர்களா?
நான் புதிய விஷயங்களை சோதித்து பார்க்க நினைக்கிறேன். தற்போதுள்ள விஷயங்களின் படி படங்களில் நடிக்க விரும்பவில்லை. அப்படி நடித்தால் அது விபத்துதான். நிறைய மக்களை சென்றடைய வணிகப்படங்களில் நடிக்கவேண்டும்தான். ஆனால் என்னுடைய விருப்பங்கள் சவாலான வேடங்களில் நடிப்பதுதான். பொதுமுடக்க காலம் நமது விருப்பங்கள், ஆசைகள், திரைப்படங்களின் கருத்து என நிறைய விஷயங்களை மாற்றியிருக்கிறது. நான் நினைத்தது போன்ற படங்களை இனி செய்ய வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன்.,
உங்கள் தந்தையோடு இணைந்து நடிக்கும்போது எப்படி உணர்வீர்கள்?
ஒரு திரைப்படத்தில் பிற நடிகர்களோடு இணைந்து நடிப்பதைப் போன்றதுதான். நான் என்னுடைய பாத்திரத்திற்கான தயாரிப்பில் இருப்பேன். அவர், அவருடைய பாத்திர தயாரிப்பில் இருப்பார். இப்படித்தான் நாங்கள் வெப் தொடர் தயாரிப்பில் வேலை செய்கிறோம்.
உங்கள் தந்தை கூட உங்கள் விருப்பமான படங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். உங்களது விருப்பமான படங்களைப் பற்றி சொல்லுங்கள்.
நான் கலைப்படங்களின் ரசிகன். உலகசினிமாக்களை திரைப்பட விழாக்களில் பார்ப்பது எனக்கு பிடிக்கும். இந்தியில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ் ஆகியோரின் படங்கள் எனக்கு பிடித்தமானவை.
டைம்ஸ் ஆப் இந்தியா
ஆன்கர் குல்கர்னி
கருத்துகள்
கருத்துரையிடுக