கொரியாவிலிருந்து கற்போம்!- புகழ்பெற்று வரும் வார்த்தைகள்

 



இட்ஸ் ஓகே டு நாட் பி ஓகே 




கொரோனா காலத்தில் நெட்பிளிக்ஸில் ஏகப்பட்ட கொரிய டிவி தொடர்களை பார்த்த மக்கள், அந்த மொழி வார்த்தைகள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி கூட குறிப்பிட்ட வார்த்தைகளை சேர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது. இப்படி பொது அறிவை வளர்த்துக்கொள்ளாவிட்டால் உலகில் நாமும் வாழ்கிறோம் என்று எப்படி நிரூபிப்பது... 



ஹலியு

தென்கொரிய டிவி தொடர், படம், இசை, ஃபேஷன், உணவு ஆகியவற்றை எல்லாவற்றையும் இந்த சொல்லால் குறிக்கலாம். 

மன்ஹ்வா

தென்கொரிய கார்ட்டூன்களைக் குறிக்கும் சொல். ஜப்பானிய மங்கா தாக்கத்தால் உருவான கார்ட்டூன், காமிக்ஸ் நூல்களை இப்படி சொல்கிறார்கள். 

டேபக்

அற்புதம், ஆஹா என்று புகழ்கிறார்களே அதேதான். 

ஹாஜிமா

 இப்படி செய்யாதே என்று கூறுவதற்குத்தான் இந்த கொரிய வார்த்தை. சாரங்கே என்றால் நான் உன்னை காதலிக்கிறேன் என்று அர்த்தம். கே டிராமா என்றால் இந்த வார்த்தைகள் இல்லாமல் வசனங்களை அந்த நாட்டு இயக்குநர்கள் எழுதுவதே இல்லை. 

முக்பாங்

லைவாக தட்டு நிறைய உணவு வைத்துக்கொண்டு பார்வையாளர்களிடம் ஒருவர் பேசுவார். இப்படி லைவாக பேசும் வீடியோவை முக்பாங் என்கிறார்கள். 

ஐகூ

அடக்கடவுளே என்று கூறுவோமே அதுதான். ஓட்டியோகே என்றால் என்ன செய்வது என்று பொருள். 

ஊப்பா

கவர்ச்சியான ஆண்மகனை தென்கொரியா இப்படித்தான் அழைக்கிறது. டியர், டார்லிங் என்று ஆங்கிலத்தில் ஒருவரை அழைப்பது போலத்தான் இந்த சொல்லின் பயன்பாடும். தென்கொரியாவில் புகழ்பெற்ற நடிகர், இசைக்கலைஞர், நடிகைகளை இப்படி அழைக்கிறார்கள். பொதுவாக பெண் இப்படி ஒருவரை அழைத்தால் அவர், அப்பெண்ணின் தோழர் அல்லது காதலர் என்று அர்த்தம். அன்புக்குரிய ஆன்மா என்றும் கூடுதலாக வைத்துக்கொள்ளலாம். 

டைம்ஸ் ஆப் இந்தியா






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்