இடுகைகள்

பாசிசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யார் இந்திய குடியுரிமை கொண்டவர் என தீர்மானிக்க முயலும் தேர்தல் ஆணையம்!

படம்
  யார் இந்திய குடியுரிமை  கொண்டவர் என தீர்மானிக்க முயலும் தேர்தல் ஆணையம்! பீகாரில் தேர்தல் ஆணையம் சீர்திருத்தப் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. எஸ்ஐஆர் எனும் பெயரில் யார் வாக்காளர்கள் என்பதை அகழாய்வு செய்து வருகிறது. இவர்களின் பணியில் பல லட்சம் ஏழை, பட்டியலின, புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. பாசிச இயக்கத்தின் பின்புலத்தோடு இயங்கும் வலதுசாரி மதவாத கட்சிக்கு எதிர்ப்புகள் புதிதல்ல. முன்னரே குடியுரிமைச் சட்டம் என்பதைக் கொண்டு வந்து மக்களை இனம் பிரித்து கெட்டோ எனும் தனி இடத்தில் அடைக்க திட்டமிட்டனர். அவை சில மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.  தேர்தல் ஆணையம் சுயாட்சி தன்மையில் இயங்கக்கூடியது. ஆனால் இப்போது பாசிச இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி ஆபத்து ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை செய்யத்தொடங்கியுள்ளது. 1991-96 காலகட்டம் தேர்தல் ஆணையத்தின் சிறந்த பணிக்காலம் என்று கூறலாம். அப்போது அதன் தலைமை தேர்தல் அதிகாரியாக டிஎன் சேஷன் என்பவர் இருந்தார். சுயாட்சி, நேர்மை, பாகுபாடற்ற தன்மை வெளிப்படையாக தெரிந்தது. சேஷனுக்குப் பிறகு எம்எஸ்...

சர்வாதிகாரம் - அமைப்புகளை காப்பாற்றுதல்

படம்
    சர்வாதிகாரம் அமைப்புகளை காப்பாற்றுதல் அரசு அமைப்புகள் நாகரிகத்தை ஜனநாயகத்தை காப்பாற்ற உதவுகின்றன. அவற்றுக்கு மக்களின் உதவியும் தேவைப்படுகிறது. அமைப்புகளுக்காக அதனால் பயன்பெறும் மக்கள் ஆதரவாக நின்று பேச வேண்டும் போராடவேண்டும். அமைப்புகளுக்கு சுயமாக தன்னை பாதுகாத்துக்கொள்ளும் திறன் கிடையாது. அவை பாதுகாக்கப்படாதபோது ஒன்றன்பின் ஒன்றாக வீழ்வதைப் பார்ப்போம். இதற்கு எடுத்துக்காட்டாக நீதிமன்றம், நாளிதழ், சட்டங்கள், தொழிலாளர் சங்கங்களைக் கூறலாம். பெரும்பாலான சர்வாதிகார ஆட்சி என்பது மக்களால் வழங்கப்படுவதுதான். இத்தகைய நெருக்கடியான சூழலில் முன்னமே தங்களை அதிகாரத்திற்கு கீழ்ப்படிவதாக ஒப்புக்கொடுக்க கூடாது. 1933ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் அரசை அமைத்துவிட்டார். அப்போது பிப்ரவரி மாதம் வெளியான யூதர்களின் நாளிதழில், ஹிட்லர் தனது பிரசாரத்தில் கூறிய யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாது என நம்புவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், சர்வாதிகாரி சொன்னதை செய்து முடித்தார். அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக அனைத்து அரசு அமைப்புகளும் நாஜி கட்சியினரால், அதன் ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டது. நாட்டில் ...

பாசிசத்திற்கு காவல்துறை, ஊடகம், நீதித்துறை என அனைவருமே ஆதரவாக உடந்தையாக நிற்கிறார்கள் - எழுத்தாளர் ஆல்பா ஷா

படம்
  நேர்காணல் எழுத்தாளர் ஆல்பா ஷா மானுடவியல் பேராசிரியரான ஆல்பா ஷா, அண்மையில் தி இன்கார்செரேஷன்ஸ் - பீமா கோரேகன் அண்ட் தி சர்ச் ஃபார் டெமாக்ரசி இன் இந்தியா என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்த நூல் சுதந்திர சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்கள் மத்தியில் பேசியும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. இந்த நூலை எழுதுவதற்கு தூண்டியது எது? பீமா கோரேகன் வழக்கு, இந்தியாவில் ஜனநாயகம் சிதைந்துவிட்டதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து போராடிய சிந்தனையாளர்கள், வழக்குரைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என பலதரப்பட்ட ஆட்களையும் சந்தித்து பேசினேன். அவர்களின் போராட்டம் ஜனநாயகத்திற்கானது என நம்புகிறேன். பொருளாதாரம், அரசியல், கலாசாரம் ஆகியவற்றை பகிர்ந்துகொள்வதற்கான போராட்டம் அவர்களுடையது. இப்படி செயல்படுபவர்களை அச்சுறுத்த ஜனநாயகத்தின் தூண்கள் என நம்பப்பட்ட ஊடகம், நீதித்துறை, காவல்துறை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. அடுத்தது நீதான் என பட்டியலிடப்பட்டு செயல்பாட்டாளர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். தெருவில் படுகொலை கும்பல்கள் சுற்றுகிறார்கள் என்றால், இண...

சூழல் போராட்டத்தில் ஜனநாயகம்!

படம்
            பாசிச அரசு ஆட்சி செய்யும்போது, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதன் ஒரே பதில் வன்முறைதான். லத்தி, துப்பாக்கிகள், புல்டோசர்கள் அரசின் சார்பாக பதில் கூறும் தரப்பாக மாறுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களைக் கூட அவையும் அகிம்சை முறையில் நேரடி நடவடிக்கை என்ற ரீதியில் அமைந்தவை. உடனே முடக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள் தேச துரோகச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அவர்களின் செயல்பாடுகள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களோடு இணைக்கப்படும். இணைக்கும், சேர்க்கும் வேலைகளை கால்நக்கி ஊடகங்கள் சிறப்பாக செய்யும். அதைப்பற்றி பாசிச அரசு பெரிதாக கவலை கொள்ள வேண்டியதில்லை. தொண்ணூறுகளில் சூழலுக்காக போராடிய மக்களின் போராட்டம் வன்முறை இல்லாமல் இருந்தது. ஆனால் போராட்டக்காரர்கள், அனைத்து பொறுப்புகளையும் அரசியல்வாதிகளிடம், அரசிடம் ஒப்படைத்துவிடவில்லை. பிரச்னை என்றால் அவர்களே சென்று நேரடியாக போராடத் தொடங்கினார்கள். இதை அன்று மேற்கத்திய நாடுகளின் அரசுகளே எதிர்பார்க்கவில்லை. ஒருவித ஹிப்பித்தன்மை கொண்ட இளைஞர் கூட்டம் இது. தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள முடியும் என வாழ்ந்து வந்த...

பாசிசத்தை தூண்டும் ஃபேஸ்புக்- முகநூலின் மறுபக்கம்!

படம்
ரியல் ஃபேஸ் ஆஃப் ஃபேஸ்புக் இன் இந்தியா பரன்ஜோய் - சிரில் சாம் இந்தியாவில் 2004 ஆம் ஆண்டிலிருந்தே சமூக வலைத்தளத்தினால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அனைவரையும் இணைக்கிறோம் என்று ஃபேஸ்புக் சொன்னாலும், உண்மையில் மக்கள் இன்று தம்மைத் தவிர வேறு யாரையும் நம்புவதில்லை. அப்படியொரு பயத்தை ஃபேஸ்புக்கும் அதன் சகோதர நிறுவனமான வாட்ஸ் அப்பும் உருவாக்கியுள்ளன. இப்படி கூறிய சிரில் சாம், பரன்ஜோய் ஆகிய இருவரும் அதற்கான தகவல்களை அடுக்குகின்றனர். இவர்கள் கூறும் எதனையும் மறுக்க முடியவில்லை என்பது முக்கியமானது. எப்படி பாஜக, காசு கொடுத்து ஃபேஸ்புக் மூலம் திட்டமிட்ட பொய் செய்திகளை, போலி வீடியோக்களை உருவாக்கி மக்களின் மனதில் பயத்தை உருவாக்குகின்றன என்பதை விளக்கியுள்ளனர். இதில் பிரசாந்த் கிஷோர் என்ற டெக் நபரின் பங்கும் முக்கியமானது. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி நினைவிருக்கிறதா...... பிளான் பெத்த பிளான்தான். ஆனால் கொஞ்சமேனும் நம்பிக்கையை மக்களிடம் சம்பாதித்து வைப்பதில் அன்புமணி தடுமாறிவிட்டார். வீழ்ந்துவிட்டார். இதனால் முதல் கையெழுத்தை இன்னும் அவர் செக் புக்கில் மட்டும் போட்டுக்கொண்டிருக்கிற...