இடுகைகள்

சந்தீப் கிஷன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேஷ்பேக் ஆஃபர் கொடுக்கும் வக்கீலின் போராட்டம் - தெனாலி ராமகிருஷ்ணா

படம்
தெனாலி ராமகிருஷ்ணா இயக்கம் - நாகேஸ்வர ரெட்டி ஒளிப்பதிவு - சாய் ஸ்ரீராம் இசை - சாய் கார்த்திக் வக்கீலின் கதை. சந்தீப் கிஷனின் தந்தை புரோக்கர். இதனால், அவரது குடும்பத்தை அந்த ஊரே தரகர் என்று அழைத்து அவமானம் செய்கிறது. இதனால் கடன்பட்டு தன் மகனை வக்கீல் படிப்பு படிக்க வைக்கிறார். சந்தீப் கஷ்டப்பட்டு படிக்கிறார். ஆனால் கேஸ்கள்தான் கிடைக்காமல் காம்ரமைஸ் செய்து காசு சம்பாதிக்கிறார். இதை ஏற்றுக்கொள்ளாத அவரின் தந்தை, நீ கோர்ட்டில் வாதம் செய்து சம்பாதித்தால்தான் உன்னை என் மகனாகவே ஏற்பேன் என்கிறார். இதற்காக அவர் ஏற்கும் உள்ளூர் அரசியல்வாதி வழக்கு அவரை மேலும் பிரச்னைகளுக்குள் தள்ளுகிறது. என்னென்ன பிரச்னைகள் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஆஹா சந்தீப் கிஷன், அவரின் தந்தை, முரளி சர்மா, சாய் கார்த்திக்கின் இசை, சாய் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, குடும்ப சென்டிமெண்ட், சப்தகிரி காமெடி. ஐய்யய்யோ மற்ற எல்லாமும்தான். குறிப்பாக வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம். அமைதியாக இருந்து பின்னால் விஸ்வரூபம் எடுக்கும் கதாபாத்திரத்தை இறுதியாக கோமாளி ஆக்குகிறார்கள். முதல்பாதியில்

வித்தியாசமான ஆனால் டல்லான திரில்லர் படம் - சந்தீப் கிஷன் சூப்பர்!

படம்
நின்னு வீடானி நீடானு நேனே - தெலுங்கு இயக்கம்- கார்த்திக் ராஜூ ஒளிப்பதிவு பிகே வர்மா இசை தமன் எஸ்எஸ் தேறுவது சந்தீப் கிஷன் - அன்யா சிங்கின் காதல், சண்டை எல்லாமே குஷி மூடுக்கு மனசை மாத்துது. ஆனால் கண்ணாடி குறுக்கே வர எல்லாமே மாறுது. இசையும் ஒளிப்பதிவும் அசத்தலாக இருக்கு. ஆனா எங்கே பிரச்னை? கார்த்திக் ராஜூவோட கதையிலதான். எரிச்சல் கதையில் ஹீரோ செய்யறக்கு ஏதாவது காரியம் இருக்கும். இதில் அவர் தான் ஏன் இறந்தோம் எப்படி இறந்தோம்னு கண்டுபிடிக்கிறார். அது குத்தம் இல்ல. ஆனால் பார்க்கிறவங்க பொறுமைய சோதிச்சா எப்படி? பாசம் இருந்தாலும் இன்னொருத்தரோட உடம்பில் தன் மகன், மகள் இருக்கிறார் கிறாள்ங்கிறதை யாரும் ஏத்துக்க மாட்டாங்க. ஒருத்தரோட பேருங்கிறது வெறும் சவுண்டு மட்டும் கிடையாது.அவரோட உருவமும் உடனே உங்களுக்கு ஞாபகத்துக்கு வரும் இல்லியா. அந்த இடம் அவுட்டு. இன்னொன்னு, ஹீரோ தன் காதலியோட பிறந்த நாளைக்கூட கொஞ்சம் அட்வென்சரஸ்ஸா அவரைக் கடத்தி கட்டிப்போட்டு நீச்சல் குளத்தில் தூக்கி வீசி கேக்கு வெட்டி கொண்டாடுறார். இந்த மனநிலையில் உள்ளவரால ஏற்படுற விபத்துதான் கார் விபத்து. இதை நின