இடுகைகள்

உலகம்- அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிராயுதபாணிகள் மீது இஸ்‌ரேலின் தாக்குதல்!

படம்
இரக்கமற்ற இஸ்‌ரேலின் தாக்குதல் ! கடந்த மார்ச் இறுதியில் காஸாவில் நிராயுதபாணி பாலஸ்தீனியர்களின் மீது இஸ்‌ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் பதினான்கு பேர் பலியானார்கள் . எகிப்து , இஸ்‌ரேல் ஆகிய இருநாடுகளும் நாற்பது கி . மீ தூரத்தில் பதினொரு கி . மீ அகலத்தில் தம் காஸா பகுதி எல்லையை பாதுகாத்து வைத்துள்ளன ." பாலஸ்தீனியர்களின் மீது பெரும் எண்ணிக்கையிலான படை தாக்குதல் நடத்தவில்லைதான் ஆனால் கட்டளைகள் பெற்றுத்தான் நிராயுதபாணி மக்களைத் தாக்கினர் என்பது உண்மை " என்கிறார் மத்திய கிழக்கு நாடுகளுக்கான மனித உரிமைகள்அமைப்பின் இயக்குநர் எரிக் கோல்ஸ்டீன் . காஸா பகுதியிலுள்ள 20 லட்சம் பாலஸ்தீனியர்களின் பதிமூன்று லட்சம் பேர் அகதிகள் . எல்லை வழியே செல்லும் உணவுப்பொருள் உள்ளிட்ட அனைத்திலும் கறார் அணுகுமுறை காட்டிவருகிறது இஸ்‌ரேல் . தாக்குதலுக்கு ஒரே காரணம்தான் , காஸா எல்லைவேலியை சேதப்படுத்தினார்கள் என்பதையே சொல்வது இஸ்‌ரேல் மரபு . மேலும் இஸ்‌ரேல் சமூக வலைதளங்களிலும் அரபி மொழியில் பாலஸ்தீனியர்களை இணங்கச்செய்வதற்கான முயற்சிகளை செய்துவருகின்றனர் .