நிராயுதபாணிகள் மீது இஸ்‌ரேலின் தாக்குதல்!





Image result for israel attack




இரக்கமற்ற இஸ்‌ரேலின் தாக்குதல்!

கடந்த மார்ச் இறுதியில் காஸாவில் நிராயுதபாணி பாலஸ்தீனியர்களின் மீது இஸ்‌ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் பதினான்கு பேர் பலியானார்கள். எகிப்து, இஸ்‌ரேல் ஆகிய இருநாடுகளும் நாற்பது கி.மீ தூரத்தில் பதினொரு கி.மீ அகலத்தில் தம் காஸா பகுதி எல்லையை பாதுகாத்து வைத்துள்ளன."பாலஸ்தீனியர்களின் மீது பெரும் எண்ணிக்கையிலான படை தாக்குதல் நடத்தவில்லைதான் ஆனால் கட்டளைகள் பெற்றுத்தான் நிராயுதபாணி மக்களைத் தாக்கினர் என்பது உண்மை" என்கிறார் மத்திய கிழக்கு நாடுகளுக்கான மனித உரிமைகள்அமைப்பின் இயக்குநர் எரிக் கோல்ஸ்டீன்.

காஸா பகுதியிலுள்ள 20 லட்சம் பாலஸ்தீனியர்களின் பதிமூன்று லட்சம் பேர் அகதிகள். எல்லை வழியே செல்லும் உணவுப்பொருள் உள்ளிட்ட அனைத்திலும் கறார் அணுகுமுறை காட்டிவருகிறது இஸ்‌ரேல். தாக்குதலுக்கு ஒரே காரணம்தான், காஸா எல்லைவேலியை சேதப்படுத்தினார்கள் என்பதையே சொல்வது இஸ்‌ரேல் மரபு. மேலும் இஸ்‌ரேல் சமூக வலைதளங்களிலும் அரபி மொழியில் பாலஸ்தீனியர்களை இணங்கச்செய்வதற்கான முயற்சிகளை செய்துவருகின்றனர்.