இடுகைகள்

கண்ணதாசன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எளிமையும் வசீகரமுமான வாழ்க்கையை ஒளிரச் செய்யும் பாடல்களின் அணிவகுப்பு - காலமெல்லாம் கண்ணதாசன்

படம்
         காலமெல்லாம் கண்ணதாசன் ஆர் சி மதிராஜ் இந்து தமிழ்திசை பதிப்பகம் இந்த நூலின் மதிராஜ், மொத்தம் முப்பது கண்ணதாசன் பாடல்களை எடுத்துக்கொண்டு அப்பாடல்கள் ஏற்படுத்தும் மன உணர்வுகளை திரைப்படத்திற்குள்ளே, அதைத்தாண்டி ஏற்படுத்தும் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். முப்பது பாடல்களைப் பற்றி நீங்கள் படித்ததும். அதைக் கேட்க முயல்வீர்கள். திரும்ப அப்பாடல்களை கேட்பதன் வழியாக கண்ணதாசனின் மேதமையை உணர முயல்வோம். உண்மையில் நூலாசிரியர் அதைத்தான் விரும்புகிறார் என உறுதியாக கூறலாம். நாளிதழில் தொடராக வந்த காரணத்தாலோ என்னவோ, நடப்புகால சம்பவங்களை சில பாடல்களுக்குள் கூறுகிறார் மதிராஜ். ஆனால் அதெல்லாம் பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு பாடல் இயக்குநர் சூழல் சொல்ல, பாடலின் மெட்டு கேட்டு உருவாக்கப்படுகிறது. அதை பின்னாளில் கேட்பவர், தான் உணர்ந்த விஷயங்களுக்கு ஏற்பட அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால் மாறும் காலத்திற்கு ஏற்ப யோசித்துப் பொருத்துவது எந்தளவு பொருந்தும் என்று புரியவில்லை. கண்ணே கலைமானே, செந்தாழம் பூவில், உள்ளத்தில் நல்ல உள்ளம், நெஞ்சம் மறப்பதில்லை, நான் நிரந்தரமானவன் ஆ...

திமுகவில் ஈடுபாடு ஏற்பட்டு அதில் ஏமாற்றம் கண்டு புத்தி தெளிந்த சம்பவங்களின் தொகுப்பு - வனவாசம் - கண்ணதாசன்

படம்
  வனவாசம்  கண்ணதாசன் கண்ணதாசன் பதிப்பகம் மின்னூல் வனவாசம், மனவாசம் என இரு நூல்களை கண்ணதாசன் எழுதினார். இதில் வனவாசம் அவரின் அரசியல் அனுபவங்களை வெளிப்படையாக பேசுகிறது. அவர் சினிமா, அரசியல் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் காலத்திலேயே எழுதிய நூல் என்பதால் வனவாசம் முக்கியத்துவம் பெறுகிறது. நூலைப்படித்தேன் என்று சொன்னபோது, நண்பர் ஒருவர், கண்ணதாசன் நம்ம ஊரு டால்ஸ்டாய் போல என்றார். டால்ஸ்டாயின் ஒழுக்க விதிகளைப்போலவே,  கண்ணதாசனும் பல்வேறு ஒழுக்க முறைகளை அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் கூறியிருக்கிறார். அதுவும் தன்னையே மோசமான எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு....  அவர் அதற்கு வெட்கமெல்லாம் படவில்லை.  வனவாசத்திலும் ஒழுக்கம் தவறுகிற,செய்ய வேண்டிய விஷயங்களை செய்யாமல் விடுகிற மாது விஷயங்கள் நிறைய உண்டு. சினிமா நடிகை, விபச்சார பகுதியில் விலைமாது, பிறகு அவரே ஏற்கும் இரண்டாவது ஏற்பாடு.... என நீள்கிறது.  கண்ணனை வணங்கும் கண்ணதாசனுக்கு இப்படி சலனமுறுகிற குணம் இருந்தாலும் கவி பாடுவதில் எந்தக் குறையும் எக்காலத்திலும் வரவில்லை. மது, மாது, போதை, அரசியல் பழகினாலும் கூட அவருக்கு வருமானம் ஈ...