ஏஐ மூலம் நோயாளிகளின் நோய்களைக் கண்டறிவது சிறப்பானதுதான்!
எரிக் டோபல், இதயவியல் மருத்துவர். இவர், டீப் மெடிசின் - ஹவ் ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் கேன் மேக் ஹெல்த்கேர் ஹியூமன் அகெய்ன் என்ற நூலை எழுதியிருக்கிறார். ஏஐ, மருத்துவர்களின் வேலையை மிச்சமாக்குவதோடு, நோயாளிகளுக்கு தேவையான தொடக்க கட்ட ஆலோசனைகளை கொடுக்கும் என நம்புகிறார். அவரிடம் பேசினோம். மருத்துவர், நோயாளி ஆகியோருக்கு இடையிலான உரையாடலை ஏஐ பதிவு செய்யத் தொடங்கிவிட்டது. உரையாடலை சிறு குறிப்பாக மாற்றி வருகிறது. மருத்துவ சிகிச்சையில் இது மாற்றத்தை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் இதற்கு முன்னர் நோயாளி கூறும் பல்வேறு தகவல்களை கணினியில் கீபோர்டு வழியாக தட்டச்சு செய்யவேண்டியிருந்தது. ஆனால், இப்போது அந்த வேலை இல்லை. இதனால் மருத்துவ சிகிச்சையின் தரம் உயர வாய்ப்புள்ளது. நோயாளிகள் கூறுவதை ஏஐ சிறப்பாக மாற்றி குறிப்பாக கொடுக்கிறது. இதை முன்னர் மருத்துவர்கள் எழுதியதோடு ஒப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. அமெரிக்க மருத்துவமனைகளில் ஏஐயை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். மருத்துவர், நோயாளியின் உரையாடலில் என்னென்ன விஷயங்கள் இடம்பெறும்? அனைத்து விதமான சிகிச்சை பற்றிய விஷயங்களும்தான். மருத்துவம்...