இடுகைகள்

பீம்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அல வைகுந்தபுரத்தின் தொடர்ச்சியாக கதையை உருவாக்கினால்... தமாக்கா - ரவிதேஜா, ஶ்ரீலீலா

படம்
  தமாக்கா ரவிதேஜா, ஶ்ரீலீலா, தணிகெலா பரணி பின்னணி இசை, பாடல்கள் – பீம்ஸ் சிசிரிரோலியோ பீப்பிள்ஸ் மார்ட் எனும் நிறுவனத்தின் தலைவர் இயக்குநர், புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். அப்போது, அவர் கலந்துகொள்ளும் நிறுவன சந்திப்பில் தான் இரண்டு மாதங்கள்தான் உயிருடன் இருப்பேன் என கூறிவிடுகிறார். இதனால் அவரது நிறுவனத்தை வாங்க ரௌடி தொழிலதிபர் முயல்கிறார். அவரது முயற்சியை பீப்பிள்ஸ் மார்ட் நிறுவனத்தின் தலைவரின் மகன், ஆனந்த் சக்ரவர்த்தி தடுக்க நினைக்கிறார்.   இவரைப் போலவே உருவத்தில் உள்ளவர் ஸ்வாமி. இவர் டயப்பர் நிறுவனத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வேலை தேடி வருகிறார். ஸ்வாமிக்கும், ஆனந்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே கதை. அல வைகுந்தபுரம்லோ படத்தில் வரும் பண்டு எனும் அல்லு அர்ஜூன் பாத்திரத்தை யோசித்துக் கொள்ளுங்கள். அவர் பிறந்த இடம் வேறு. ஆனால் வாழும் இடம் வேறு. இரண்டு இடங்களிலும் அவருக்கு பாசம் வேண்டும். அவர் யாரையும் விட்டுக்கொடுக்க முடியாது. அதே பாத்திரத்தைத்தான் ரவிதேஜா எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். அதிலும் அல வைகுந்தபுரத்தில் வரும் நடிகர்களையே திரும்ப நடிக்க வைத்து அதே அதிர்வை ம