மதுவில் கலக்கப்பட்ட விஷம் - மனைவியா, தோழியா -யார் கொலையாளி?
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்தவர் கேசி மெக்பெர்சன் பொமெராய். இவரை சுருக்கமாக கேசி என அழைக்கலாம். மருந்துகள் விற்கும் விற்பனைப் பிரதிநிதி. இவர் செய்யும் வேலையை அவரே சொன்னால்தான் தெரியும். ஏனெனில் பார்க்க திரைப்பட நடிகர் போல தோற்றம் கொண்டவர். அதனால் சில ஆண்டுகள் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார். அவர் பார்பரா என்ற பெண்ணை மணந்துகொண்டார். உண்மையில் கேசிக்கும், பார்பராவுக்கும் எந்தவிதத்திலும் கணவன் மனைவி என்ற பொருத்தமே கிடையாது. பார்க்கும் யாரும் மனதில் நொடியில் இந்த உண்மையை உணர்வார்கள். ஆனால் சட்டப்பூர்வமாக தம்பதிகளாக வாழ்ந்தனர். கேசிக்கு கடல் நீரில் சர்ஃபிங் செய்வதில் நிறைய ஆர்வம் உண்டு. எனவே, தனது மனைவியுடன் அங்குலியாவில் தனியாக வீடு வாடகைக்குப் பார்த்துக்கொண்டு சென்றுவிட்டார். அருகிலேயே கடலும் இருக்கையில் அவருக்கு மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்தது. ஆனால் எல்லாமே டிசம்பர் 2018ஆம் ஆண்டோடு சரி. அதில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடித்த மதுவில் விஷம் கலக்கப்பட்டு இருக்க கேசியும், அவரது பள்ளி கால நண்பர் காலெப் கில்லெரியும் இறந்து போனார்கள்.