திரைப்படத்துறையில் உள்ள பாலின பாகுபாடு, நிறவெறியை எதிர்த்துப் போராடும் கருப்பின நடிகை!
taraji p henson
தாராஜி, ஒரு சினிமா நடிகை. இவர் சமூக வலைத்தளங்களில் தனது உடல் நளினத்தை காட்டும் புகைப்படங்களை பதிவிட்டுவிட்டு சொந்த வேலைகளைப் பார்க்க செல்பவரல்ல. ரசிகர்களை சொந்த சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்பவரும் அல்ல. கருப்பினத்தவரான தாராஜி, தன்னைச் சார்ந்த இனக்குழுவினர் ஊடகங்களில், திரைப்படங்களில் பாகுபாடுடன், பாலியல் பிரச்னைகளோடு இருப்பதை வெளிப்படையாக உலகிற்கு கூறியவர். ஒருமுறை நேர்காணலில், தனது அனுபவம், திறமைக்கு ஏற்ற ஊதியத்தை கருப்பின பெண் என்பதற்காக தயாரிப்பாளர்கள் தருவதில்லை என்று வெளிப்படையாக கூறினார். அவர் கூறியபோது அந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. டிவி சேனல், திரைப்படம் என இரண்டிலும் தனது திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் தாராஜி.
தி குயூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன் என்ற படத்தில் பிராட் ஃபிட்டிற்கு போட்டி கொடுத்து நடித்தவர் தாராஜி. அதற்கு பிராட் பிட் பல மில்லியனில் சம்பளம் பெற்றபோது, தாராஜி பெற்றது 72 ஆயிரம் டாலர்கள் மட்டுமே. இன்றுமே கருப்பின பெண்கள், வெள்ளை இனத்தவர் பெறும் சம்பளத்தில் எழுபது சதவீதம்தான் பெறுகிறார்கள். இதற்கு பாலினம், நிறம் முக்கியக் காரணமாக உள்ளது. திரைப்படத்துறையில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான சம்பள வேறுபாடு 1.1 மில்லியன் டாலர்களாக உள்ளது என 2019ஆம் ஆண்டு pew ஆய்வு கூறுகிறது.
சினிமா தயாரிப்பு நிறுவனம், தலைமுடிபராமரிப்பு நிறுவனம் என இரு நிறுவனங்களை நடத்தி வருகிறார். எனக்கு 53 வயதாகிவிட்டது. பாகுபாடற்ற வேலை, சரியான சம்பளம் பற்றி பேசி வருகிறேன். இப்போது எனக்கு அயர்ச்சியாக உள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது. அங்கு நீங்கள் வந்து விளையாடுவதை அங்குள்ள யாருமே விரும்பவில்லை. இச்சூழ்நிலையில் அங்கு சென்று உங்களை நீங்கள் காயப்படுத்திக்கொள்வீர்களா, அவமானத்தை எதிர்கொள்வீர்களா? நான் அந்த நிலையில்தான் இருக்கிறேன் என்றார்.
2016ஆம் ஆண்டு தாராஜி நடித்த ஹைடன் ஃபிகர் என்ற படத்தில் அவருக்கு நாசாவில் பணியாற்றிய கணித வல்லுநர் வேடம் கிடைத்தது. அந்த பாத்திரம் கூட பாலியல் சீண்டல்கள், நிறவெறி ஆகியவற்றை எதிர்கொண்டுதான் மீண்டு வந்திருக்கிறது. நான் சந்தித்த பல்வேறு சவால்கள், தடைகள் எல்லாமே என்னுடைய இனக்குழு சந்தித்ததுதான். அதிலிருந்து இன்றுவரை நான் சற்றும் மாறுபட்டு பயணிக்கவில்லை. இந்த இடங்களில் நான் எங்குமே என்னை இழக்காமல் பார்த்துக்கொண்டேன். ஏழு தலைமுறையாக அடிமை முறையின் வலியும் வேதனையும் எங்கள் உடலிலும் மனதிலும் இருக்கிறது என்றார். தாராஜி, கருப்பின மக்களின் மனநிலை, பிரச்னைகள் பற்றி மக்களவையில் கூட பேசியிருக்கிறார்.
andrew r chow
time
Taraji Penda Henson (/təˈrɑːdʒi/ tə-RAH-jee; born September 11, 1970) is an American actress. She has received several accolades, including a Golden Globe Award as well as nominations for an Academy Award and four Primetime Emmy Awards. After studying acting at Howard University, she ... Wikipedia
கருத்துகள்
கருத்துரையிடுக