கருப்பின பெண் தொழில்முனைவோருக்கு உதவும் முதலீட்டு நிறுவனம்!

 









அரியன் சைமன் - அயானா பார்சன்ஸ்

arian simone, ayana parsons


கருப்பின பாகுபாடு என்பது மேற்குலக நாடுகளில் சாதாரண ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. சமநீதி, ஒரே சட்டம் என்றாலும் மறைமுகமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கீழே தள்ள நிறவெறியர்கள் முயன்று கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கியக்காரணம், அவர்களிடம் தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதற்கு நிதி முதலீட்டையும் பெருமளவு பெற்றுவிடுகிறார்கள். இவர்களோடு போராடி ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பேரளவுக்கு முதலீடு பெறமுடிவதில்லை. 


ஆண்களே முக்கி முனகும்போது, கருப்பின பெண்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் செய்யும் தொழில்களுக்கு முதலீடு செய்யவே ஃபியர்லெஸ் ஃபண்ட் என்ற முதலீட்டு நிறுவனம் உருவானது. இதை 2018ஆம் ஆண்டு அரியன் சைமோன் தொடங்கினார். இவருடன் கூட்டாளியாக அயானா பார்சன்ஸ் இணைந்துள்ளனர். இவர்கள், மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீடுகளை வழங்குகிறார்கள். 


இதுவரை 44 நிறுவனங்களில் 27 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். முதலீட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவது, வெள்ளையர்கள்தான். பெண்கள் தொடங்கும் நிறுவனங்களுக்கான முதலீடு என்பது 2.4 சதவீதமாக உள்ளது. அதிலும் கருப்பின பெண்கள் என்றால் முதலீடு 0.35சதவீதமாக உள்ளது என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் எடுத்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


-ஜேனல் ரோஸ் 


2



ஆரோரோ ஜேம்ஸ் 

aurora james


15 பர்சென்டேஜ் என்ற தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்து கருப்பின தொழில்நிறுவனங்களில் பிறரை பொருட்களை வாங்க ஊக்குவித்து வருகிறார். 2020ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிளாய்ட் கொலைக்குப் பிறகு தொடங்கிய நிறுவனம் இது. வெள்ளையர்கள், கருப்பினத்தவர் என இருபிரிவினரிடையே பொருளாதார இடைவெளியைக் குறைக்கும் செயல்பாடுகளை செய்துவருகிறார். 


ஜேம்ஸ் ஒரு சொகுசு ஷூ தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார். அவரது காலணிகள் மக்களிடையே பிரபலம் ஆனாலும் அதை விரிவாக்க பெற்ற கடன்கள், பெரும் சிக்கலில் தள்ளின. நினைத்தளவுக்கு முதலீடுகள் கிடைக்கவில்லை. இதைப் புரிந்துகொண்டு நிலைமையை ஆராய்ந்தார். பிறகுதான், சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள், தங்களது பொருட்களில் பதினைந்து சதவீதத்தை கருப்பின தொழில்முனைவோரிடம் வாங்குவதை இன்ஸ்டாகிராமில் பிரசாரம் செய்து தொடங்கினார். இந்த முயற்சியின் மூலம் 29 நிறுவனங்கள் 600 கருப்பின தொழில்முனைவோர்களிடம் பொருட்களை வாங்கி வருகின்றன. ஜேம்ஸ் தானும் தனது குடும்பம், நண்பர்களிடம் திரட்டிய 850 மில்லியன் டாலர்களில் ஒரு சதவீதத்தை கருப்பின தொழில்முனைவோர்களுக்கு வழங்கி வருகிறார். இதற்கு தனியார் ஈக்குவிட்டி நிறுவனமான விஎம்ஜி பார்ட்னர்ஸ் ஆதரவு தருகிறது. 

- கேடி லாங்

டைம் வார இதழ் 

கருத்துகள்