ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பெண்மணி!

 



நாடியா முராத்


nadia murad

நாடியா முராத், ஈராக்கில் பிறந்தவர்.அவருக்கு இருந்த ஒரே கனவு பெண்கள், சிறுமிகளுக்கான அழகுக்கலை சலூன் ஒன்றைத் தொடங்கி நடத்தவேண்டும் என்பதுதான். ஆனால் அவர் பிறந்த இனத்தின் பெயரால் அவரது கனவுகள் நொறுக்கப்பட்டன. ஈராக்கின் வடக்குப் பகுதியில் இருந்த கோஜோ எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் நாடியா. யாஷிடி இனக்குழுவைச் சேர்ந்தவர். சலூனில் ஒன்றாக பெண்கள் சந்தித்தால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என நினைத்திருக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை. 


2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் நாடியா உட்பட ஆறாயிரம் பெண்களை கடத்திச் சென்றனர். இந்த கடத்தலின்போது, நாடியாவின் அம்மா, உறவினர்கள், தோழிகள் கொல்லப்பட்டனர். கடத்திவரப்பட்ட பெண்கள் தீவிரவாதிகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகினர். மூன்று மாதங்கள் சித்திரவதைகளை அனுபவித்த நாடியா, அங்கிருந்து தப்பி 2015ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தார். தன்னார்வ அமைப்பொன்றைத் தொடங்கியவர், பாலியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகளைப் பெற்றுக்கொடுத்து உதவத் தொடங்கினார். 


2017ஆம் ஆண்டு தனது வாழ்க்கையை நூலாக எழுதி வெளியிட்டார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் அந்த நூல் சிறப்பாக விற்பனையான நூலாக புகழ்பெற்றது. அவரின் செயல்பாடுகள் காரணமாக 2018ஆம் ஆண்டு நோபல் பரிசு அமைதிக்கான பிரிவில் வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லாஃபார்ஜ் என்ற சிமெண்ட் நிறுவனம் ஐஎஸ் அமைப்புக்கு நிதி வழங்கியதைக் கண்டுபிடித்து வழக்குத் தொடர்ந்தார். இதில், யாஷிடி இன அமெரிக்கர்கள், நாடியாவுக்கு துணை நின்றனர். மனித உரிமை வழக்குரைஞரான அமல் குளுனி இந்த வழக்கில் வாதாடி வருகிறார். நாடியா அவரது குடும்பத்தில் முதல் பட்டம் பெறும் பெண். இனிமேல் நான் ஈராக்கில் சலூன் திறக்க முடியாது. பிற பெண்கள் சலூன் திறக்க ஏதாவது உதவி செய்யமுடியும் என நம்புகிறேன் என்றா். 






-ஆஸ்தா ராஜ்வன்ஷி

டைம் வார இதழ் 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்