தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் செயற்கை நுண்ணறிவு!

 








செயற்கை நுண்ணறிவு காலத்தில் பரவும் போலிச்செய்திகளும், நேர்மையான தேர்தலும்


2018ஆம்ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தோடு செய்த ஊழல் அனைவரும் அறிந்ததே. ஒருவர் எழுதும் பதிவுகளை வைத்து அவர் எந்த கட்சிக்கு வாக்களிக்கிறார் என அல்காரிதம் மூலம் கணித்தனர். இதைப் பற்றி மக்களுக்கு எந்த கவனமும் இல்லாமல் இரையாக மாட்டிக்கொண்டனர். இதில் பயன்பெற்றது, உலகம் முழுக்க உள்ள அரசியல் கட்சிகள்தான். இலவசம் என்ற பெயரில் ஃபேஸ்புக் உலகம் முழுக்க பரவலாகி அதில் இணைந்த பயனர்களாகிய மக்களையே நல்ல விலைக்கு விற்ற கதை அது. 


செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலிச்செய்திகள், வீடியோக்களை ஒருவர் உண்மையா, பொய்யா என்று கண்டுபிடித்து தடுப்பது உண்மையில் கடினமான ஒன்று. அரசியல் கட்சிகளுக்கு எந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாடல் உதவும் என்று தெரியவில்லை. ஓப்பன் ஏஐ, கூகுள், அமேஸான் ஆகிய பெருநிறுவனங்களே பந்தயத்தில் முன்னணியில் உள்ளன. 


வெறுப்பு, பிரிவினைவாத கருத்துகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றன. இதன் அடிப்படையில் போலிச்செய்திகளை வைத்தே கூட ஒரு கட்சி தேர்தலில் வெல்லலாம். செயற்கை நுண்ணறிவு மூலம் போலிச்செய்திகளை ஆயிரம் மடங்கு அதிகரிக்கலாம். அதீத உண்மைத்தன்மை கொண்ட புகைப்படங்கள், செய்தி, வீடியோக்களை உருவாக்கி பரப்பலாம். சமூக வலைதளத்தில் உள்ள பாட்கள், தானியங்கி கணக்குகள் போலிச்செய்திகளை வேகமாக பரப்புகின்றன. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் தேர்தல் செய்திகளை தடுப்பதாக டெக் நிறுவனங்கள் கூறினாலும், நடைமுறையில் செயலாக மாறுவதில்லை. அரசியல் கட்சிகள்தான் டெக் நிறுவனங்களுக்கு பெருமளவு நிதியுதவி செய்துவருவதால், சார்பு சாத்தியம்தான். 


2024ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு மூலம் போலிச்செய்திகள் உருவாக்கப்பட்டு பரப்ப அதிக வாய்ப்புகள் உள்ளன. தோராயமாக ஐம்பது நாடுகளில் தேர்தல் முடிவுகள், செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. போலிச்செய்தி. தவறான தகவல்களால் சமூகத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படுவதோடு, அரசின் நம்பகத்தன்மையும் வீழ்ச்சியுற அதிக வாய்ப்புள்ளது. 


மிட்ஜர்னி, சாட்ஜிபிடி பிளஸ், ட்ரீம் ஸ்டூடியோ, மைக்ரோசாஃப்ட்ஸ் இமேஜ் கிரியேட்டர் ஆகிய சேவைகள் மூலம் தேர்தல் தொடர்பாக நாற்பது சதவீத புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை வெறுப்புவாத தடுப்பு மையம் எனும் தன்னார்வ அமைப்பு கண்டறிந்து கூறியுள்ளது. இந்தியாவில் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம், செயற்கை நுண்ணறிவு நேர்மையாக நடைபெறும் தேர்தலுக்கு தடையாக உள்ளது என்று கருத்து கூறப்பட்டுள்ளது இதை டெக் நிறுவனங்கள் பெரும் பின்னடைவாக பார்க்கின்றன. இந்திய அரசின் விதிகள் கண்டுபிடிப்புகளுக்கு எதிரானவையல்ல. அவை அனைத்துமே பெரு நிறுவனங்களின் சமூக வலைதளங்களை ஒழுங்குமுறைபடுத்துபவைதான். 


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்