குழந்தைகளின் மனதில் வளரும் வன்முறை - ஏன் எப்படி எதற்கு?
ஆல்பெர்ட் பண்டுரா
ஆல்பெர்ட், குழந்தைகளின் மனதில், செயலில் வெளிப்படும் வன்முறையை ஆராய்ந்தார். அன்றைய காலத்தில் பலரும் இதைப்பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. பெரியவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து அதைப்போலவே தாங்களும் செய்ய முயற்சி செய்கிறார்கள் என ஆல்பெர்ட் கூறினார். இந்தவகையில் அவர்களின் வன்முறை செயல்பாடுகள் போலச்செய்தல் என்ற முறையில் மனதில் பதிகிறது. அதை அவர்கள் நினைத்துப் பார்த்து வாய்ப்பு கிடைக்கும்போது அதை செயல்படுத்திப் பார்க்கிறார்கள். ஒரு மனிதனின் செயல்பாடு என்பது பிறரைப் பார்த்து மாதிரியாக கொண்டே உருவாகிறது என்றார்.
ஆல்பெர்ட்டின் காலத்தில் குழந்தைகள் பரிசு கொடுப்பது, தண்டனை அளிப்பது வழியாக பல்வேறு விஷயங்களைக் கற்கிறார்கள் என்று நம்பப்பட்டது. ஆல்பெர்ட் இதற்கு மாற்றாக, ஒருவரைப் பார்த்துத்தான் பிறர் குண இயல்புகளை பழக்க வழக்கங்களைக் கற்கிறார்கள். இதற்கு கவனம், ஒத்திகை பார்ப்பது, ஊக்கம், திரும்ப உருவாக்குவது ஆகிய அம்சங்கள் முக்கியம் என்று கூறினார். ஒரு செயலைப் பார்த்து அதை மனதிற்குள் ஓட்டிப்பார்க்கவேண்டும். பிறகு, ஊக்கம் கிடைக்கும்போது அதை திரும்ப செய்துபார்க்க முடியும்.
ஆல்பெர்ட் பண்டுரா
கனடாவில் உள்ள ஆல்பெர்டாவில் போலந்தை பூர்விகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்தார். பிரிட்டிஷ் கொலம்பியா, ஐயோவா பல்கலைக்கழகங்களில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்றார். 1953ஆம் ஆண்டு, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரிந்தார். ஏராளமான விருதுகளை தனது கோட்பாடுகள், ஆய்வுக்காக பெற்றிருக்கிறார். பதினாறுக்கும் மேற்பட்ட கௌரவ பட்டங்களை வென்றிருக்கிறார். 1974ஆம் ஆண்டு, அமெரிக்க உளவியல் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முக்கிய படைப்புகள்
1973 அக்ரெஷன் எ சோஷியல் லேர்னிங் அனாலிசிஸ்
1977 சோசியல் லேர்னிங் தியரி
1986 சோசியல் ஃபவுண்டேஷன்ஸ் ஆஃப் தாட் அண்ட் ஆக்ஷன் - எ சோசியல் காக்னிட்டிவ் தியரி
கருத்துகள்
கருத்துரையிடுக